ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

நித்திக்கு புளூ கார்னர் நோட்டீஸ்… விரைவில் ரெட்கார்னர்..!

நித்திக்கு புளூ கார்னர் நோட்டீஸ்… விரைவில் ரெட்கார்னர்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நித்திக்கு புளூ கார்னர் நோட்டீஸ்... விரைவில் ரெட்கார்னர்..! குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் இருந்த 2 பெண் சீடர்கள் மாயமானது தொடர்பாக சாமியார் நித்தியானந்தா மீது அம்மாநில போலீசில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், குழந்தைகளை கடத்திச்சென்று அவர்களை கட்டாயப்படுத்தி ஆசிரமத்திற்கு நன்கொடை வசூல் செய்யும் வேலையில் ஈடுபடுத்தியதாகவும் அவர்மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, சாமியார் நித்தியானந்தாவை குஜராத் போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். ஆனால் அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவை விட்டு தப்பிச்சென்று ஈக்குவடார் நாட்டிற்கு அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி ‘கைலாசா’ என்ற பெயரில் புதிதாக நாடு ஒன்றை உருவாக்கி உல்லாசமாக வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில், வெளிநாட்டில் உள்ள நித்தியானந்தாவை கைது செய்ய தேவையான நடைமுறைகளை மேற்கொள்ளும்படி சிபிஐக்கு...
மலிவான அரசியல் செய்யாமல்  ரஜினி வாய் மூடி மவுனமாக இருப்பது நல்லது என்கிறார் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்!

மலிவான அரசியல் செய்யாமல் ரஜினி வாய் மூடி மவுனமாக இருப்பது நல்லது என்கிறார் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    ரஜினி வாய் மூடி மவுனமாக இருப்பது நல்லது என்கிறார் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்! துக்ளக் விழா, பெரியார் சர்ச்சைப் பேச்சு, மன்னிப்பு கேட்க ரஜினி மறுப்பு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியது; நடிகர் ரஜினிகாந்த் சொன்னது போல, 1971-ல் எதுவும் நடக்கவில்லை. துக்ளக் பத்திரிகையில் எழுதிய சோ, நீதிமன்றத்துக்கு சென்று சில அமைப்புகள் எனக்கு கொடுத்த தகவலின் பேரில் தான் எழுதினேன் என்று தெரிவித்தார். எனக்கு அதை பற்றி ஒன்றுமே தெரியாது என்றும் கூறினார். நடைபெறாத ஒரு வி‌‌ஷயத்தை நடிகர் ரஜினிகாந்த் சொல்லி மக்களை திசை திருப்புகிறார். நாங்கள் ஏற்றுக்கொண்ட தலைவர்களில் பெரியாரும் ஒருவர். அதனைத் தொடர்ந்து அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரும் எங்கள் தலைவர்கள் ஆவார்கள். இந்த 4 பெரும் தலைவர்களின் புகழுக்கு சிறு அளவில் இழுக்கு ஏற்பட்டாலும் கூட அ.தி.மு.க. குரல் கொடுக்கும். எதிர்த்து ...
சுமார் 14 லட்சம் பேர் மனு பிப்ரவரி 14ல் இறுதி வாக்காளர் பட்டியல் – தேர்தல் அதிகாரி

சுமார் 14 லட்சம் பேர் மனு பிப்ரவரி 14ல் இறுதி வாக்காளர் பட்டியல் – தேர்தல் அதிகாரி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    பிப்ரவரி 14 ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் - சத்யபிரதா சாஹு தமிழகம் முழுவதும் ஜனவரி 4,5,11,12 ஆகிய தேதிகளில் 67 ஆயிரத்து 687 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், திருத்தம் செய்ய இதுவரை 17 லட்சத்து 1 ஆயிரத்து 662 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதில் புதிதாக பெயர் சேர்க்க 13 லட்சத்து 16 ஆயிரத்து 921 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 89 ஆயிரத்து 454 பேரும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 9 ஆயிரத்து 439 பேரும் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களும், இதர பணி நாட்களில் பெறப்படும் விண்ணப்பங்களும் நாளை முதல் பரிசீலிக்கப்பட உள்ளது. அதன்பின், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14-ம் ...
வசீகர இளவரசன்’ சித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ – தென்னிந்திய இசைப் பயணம் 2020

வசீகர இளவரசன்’ சித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ – தென்னிந்திய இசைப் பயணம் 2020

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
    ‘வசீகர இளவரசன்’ சித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ - தென்னிந்திய இசைப் பயணம் 2020 2013ல் வெளியான ‘கடல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அடியே’ பாடலின் மூலம் பின்னணி பாடகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான சித் ஸ்ரீராம், தனது தனித்துவமான குரல்வளம் மற்றும் நேர்த்தியான பாடல் பங்களிப்பின் மூலம் வெகுவான ரசிகர்களை வென்றிருக்கிறார். அவர் முதன்முறையாக தென்னிந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நேரடி இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார். மண்ணின் மைந்தரான அவர், பிரம்மாண்டமான இந்த இசை நிகழ்ச்சியை வருகின்ற பிப்ரவரி மாதம் 08ம் தேதி சென்னையில் இருந்துத் துவங்குகிறார். ‘Noise and Grains’, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு நேரடி நிகழ்ச்சிகள், உண்மை நிகழ்ச்சிகள், மற்றும் டிஜிட்டல் ஊடக நிகழ்ச்சிகளுக்கு உருவாக்கம், தயாரித்து வழங்குவதில் ஈடுபட்டுவரும் ஒரு தயாரிப்பு நிறுவனம். இந்நிறுவனம் இந்தியா ம...
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இஸ்ரோ திட்டம்!

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இஸ்ரோ திட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் வரும் 2022ம் ஆண்டு 3 பேர் அடங்கிய குழு விண்வெளிக்கு செல்ல உள்ளது. இந்நிலையில், இந்த திட்டத்திற்கு முன்னோடியாக மனித உருவிலான பெண் ரோபோவை இந்த ஆண்டு இறுதிக்குள் விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. ‘வயோம் மித்ரா’ எனும் பெண் உருவம் உடைய ரோபோ இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் செய்யும் பல வேலைகளை செய்யும் திறமையுடைய இந்த ரோபோ இரு மொழிகளில் சரளமாக பேசும் திறனுடையது. விண்வெளிக்கு அனுப்புவதற்கு மனித உருவ ரோபோ தயாராக உள்ளது. இது விண்வெளி ஆராய்ச்சி துறையில் நமது திறமையை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி பாதுகாப்பாக திருப்பி கொண்டுவரவும் உதவுகிறது என இஸ்ரோ தலைவர் சிவன் முன்னதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்க...
இயற்கையின் மீது கை வைக்காதீர் :  எச்சரிக்கும் படம் ‘இறலி’

இயற்கையின் மீது கை வைக்காதீர் :  எச்சரிக்கும் படம் ‘இறலி’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  இயற்கையின் மீது கை வைக்காதீர் :  எச்சரிக்கும் படம் 'இறலி' இயற்கையை அது போன போக்கில் விட்டுவிட வேண்டும். இயற்கையின் மீது கை வைத்தால் விளைவு அபாயகரமாக இருக்கும் என்று எச்சரிக்கும் கதையோடு உருவாகும் படம் 'இறலி'. கலைமகள் ஆடியன்ஸ் ஃபிலிம்ஸ் சார்பில்  இப்படம் உருவாகிறது .படத்தை இயக்குபவர் ஜெய். விஜயகுமார். இவர் இயக்குநர்  எஸ்.பி. ராஜ்குமாரிடம் சினிமா கற்றவர். படத்தின் நாயகனாக வெண்ணிஸ் கண்ணா நடித்திருக்கிறார். நாயகியாக சானியா ஐயப்பன் நடித்திருக்கிறார். இவர் 'குயின்' படத்தில் நடித்தவர்.   மலையாளத்தில் மோகன்லாலின் 'லூசிஃபர் 'என்ற படத்தில் மஞ்சுவாரியார் மகளாக நடித்தவர்.குயின் படத்திற்காக சைமா விருது, ஆசியா விஷன் விருது ,நானா விருது, வனிதா விருது போன்ற ஏராளமான விருதுகளைக் குவித்தவர். படத்தைப் பற்றி இயக்குநர் ஜெய். விஜயகுமார் கூறும்போது , "இயற்கையை அதன் போக்கில் விட்டு...
மன்னிப்பு கேட்க முடியாது – ரஜினி திட்டவட்டம்

மன்னிப்பு கேட்க முடியாது – ரஜினி திட்டவட்டம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
    *துக்ளக் விழாவில் பெரியார் குறித்த சர்ச்சை பேச்சுக்கு   நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்..! *இல்லாத ஒன்றையோ , கற்பனையாகவே கருத்து தெரிவிக்கவில்லை..! அதற்காக மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்கமாட்டேன். துக்ளக் விழாவில் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது . நான் பேசியது உண்மை, நடந்தது மறுக்ககூடிய சம்பவம் அல்ல , மறக்க வேண்டிய சம்பவம் , உண்மையை கூறியதற்கு யாரிடமும் மன்னிப்பு கேட்க இயலாது - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்  ...
கார்த்தியின் உழவன் பவுண்டேஷன் நலதிட்ட உதவிகள்!

கார்த்தியின் உழவன் பவுண்டேஷன் நலதிட்ட உதவிகள்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன் சார்பில் தற்சார்பு வேளாண்மையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த பங்களிப்பை அளிப்பவர்களுக்கு உழவர் விருதுகளும் ஒரு இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. தற்சார்பு வேளாண்மையில் நேரடி விற்பனையில் சிறந்து விளங்கும் விவசாயி திருமூர்த்தி, பாரம்பரிய சிறுதானிய விதைகள் சேமிப்பில் ஜனகன், சிறந்த விவசாயப் பங்களிப்பிற்கு மனோன்மணி ஆகியோருக்கு விருதுகளும் தலா ஒரு லட்சத்திற்கான காசோலையும் பாராட்டு சான்றிதழும் நடிகர் சிவகுமார் வழன்கினார். அதோடு சிறு குறு விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் கருவிகளை வடிவமைப்பவர்களுக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக உடுமலைப்பேட்டை சசிகுமார் அவர்களுக்கு 75 ஆயிரமும் இரண்டாம் பரிசாக வேலூர் ராஜா மற்றும் கரூர் துரைசாமி அவர்களுக்கு 25 ஆயிரமும் மூன்றாம் பரிசாக ஈரோடு பொறியியல் கல்லூரி மாணவர்கள் கோக...
விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத் இணையும் புதிய படம்!

விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத் இணையும் புதிய படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
      விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத் இணையும் புதிய படம் துவக்கம் ! மிக சமீபகாலத்தில் இளைஞர்களிடம் வெகுவான வரவேற்பை பெற்ற ஹீரோவாக மாறியிருக்கும் நாயகன் விஜய் தேவரகொண்டா, ஆக்‌ஷன் கமர்ஷயலில் அதகளம் செய்யும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் ஆகிய இருவரும் இணையும் புதிய படம், இன்று மிக எளிதான பூஜையுடன் மும்பையில் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. விஜய் தேவரகொண்ட நடிக்க நடிகை ஷார்மி கவுர் கிளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார். இந்த வருடத்தில், மிக புதுவிதமான ஐடியாவுடன் அதிரிபுதிரி ஹிட்டாக “ஐ ஸ்மார்ட்” படத்தை தந்திருந்தார் பூரி ஜெகன்நாத். இப்படத்தின் பிரமாண்ட வெற்றிக்குபிறகு, உடனடியாக எவரும் எதிர்பாராவிதமாக காதல் படங்களில் நடித்து வரும் விஜய் தேவரகொண்டாவுடன் இப்படத்தை துவங்கியுள்ளார். படத்தின் மீது ஈர்க்கப்பட்டு பாலிவுட் பிரபலம் கரண் ஜோஹர் மற்றும் அபூர்வா மேத்தா இப...
பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் புதுப்படம்!

பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் புதுப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
      இந்தியா முழுதும் திரும்பிப்பார்த்த வெற்றியை தந்த “பாகுபலி”,  “சஹோ” படங்களுக்கு பிறகு நடிகர் பிரபாஸ் தன் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். கோபி கிருஷ்ணா மூவிஸ் தயாரிப்பில் தலைப்பிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 17 முதல் துவங்கவுள்ளது. “ரிபெல் ஸ்டார்” பிரபாஸின் ரசிகர்கள் இச்செய்தியால் பெரும் மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்கள். கோபி கிருஷ்ணா மூவிஸ் தெலுங்கு திரையுலகின் மாரியாதைக்குரிய, மிகப்பெரும் நிறுவனம் ஆகும். பழபெரும் நடிகர் ஶ்ரீ கிருஷ்ணம் ராஜு இப்படத்தினை  தனது மேற்பார்வையில் வழங்குகிறார். மிகப்பெரும் பட்ஜெட்டில் இந்தியா முழுமைக்குமான படைப்பாக, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இப்படம் தயாராகவுள்ளது. மேலும் மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்படவுள்ளது. கோபி கிருஷ்ணா மூவிஸ் நிறுவனம் UV Creations நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயார...