கேள்விக்கு பதில் சொன்னால் பணம் இயக்குனர் அறிமுகப்படுத்திய விளையாட்டு!
ஒளிப்பதிவாளர், இயக்குநர் மற்றும் நடிகர் என்று பன்முகம் கொண்டவர் சுரேஷ் சந்திர மேனன். நடிகை ரேவதியின் முன்னாள் கணவர்.திரைப்படம் மற்றும் சீரியல் தயாரிப்பு, டாக்குமெண்டரி தயாரிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு என்று கடந்த 40 வருடங்களாக சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கும் சுரேஷ் சந்திர மேனன், தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘ஜுங்கா’ ஆகிய படங்களில் நடித்தவர், தற்போது ‘காளிதாஸ்’, ’பொன் மாணிக்கவேல்’, ‘அடங்கமறு’, ‘லூசிஃபர்’ உள்ளிட்ட பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.
சினிமாவின் பல்வேறு துறைகளில் பயணித்துக் கொண்டிருக்கும் சுரேஷ் சந்திர மேனன், சினிமாவை தாண்டி பல்வேறு சமூக வளர்ச்சி திட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். சென்னையின் முக்கிய பகுதிகளில் டிராபிக்கை கட்டுப்படுத்துவதற்கான சில யோசனைகளை காவல்துறைக்கு வழங்கி வ...









