சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

இரவு ஊரடங்கு விலகினால்தான் “வலிமை” ரிலீசாம்… மீண்டும் போனிகபூர்-வினோத் கூட்டணிக்கு ஓகே சொன்ன அஜீத்!

இரவு ஊரடங்கு விலகினால்தான் “வலிமை” ரிலீசாம்… மீண்டும் போனிகபூர்-வினோத் கூட்டணிக்கு ஓகே சொன்ன அஜீத்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  இரவு ஊரடங்கு விலகினால்தான் “வலிமை” ரிலீசாம்... மீண்டும் போனிகபூர்-வினோத் கூட்டணிக்கு ஓகே சொன்ன அஜீத்! போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில்  நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வலிமை' இது பொங்கல் கொண்டாட்டமாக திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல், இரவு நேர ஊரடங்கு, தியேட்டர்களுக்கு 50 சத்வீத இருக்கை கட்டுப்பாடுகள் காரணமாக பட வெளியீட்டை தயாரிப்பு நிறுவனம் தள்ளி வைத்தது. பல ஆண்டுகளாக வலிமை அப்டேட் கேட்டு காத்திருந்த ரசிகர்கள் ரிலீஸ் அறிவிப்பால் உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் ரிலீஸ் தள்ளிப்போன தகவல் ரசிகர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியது.   இந்த சூழலில் ஞாயிறு முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு  விலக்கிக் கொள்ளப்பட்டால் வரும்  மார்ச் மாத இறுதியில் வலிமை திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வலிம...
சென்னை, தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கீடு!

சென்னை, தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கீடு!

HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
  தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. இதற்காக, புதிதாக உருவாக்கப்பட்ட, விரிவாக்கப்பட்ட உள்ளாட்சிகளின் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு உள்ளன. இந்த விபரம், விரைவில் அரசிதழில் வெளியிடப்பட உள்ளது.மேயர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது. இதனிடையே, அனைத்து மாவட்டங்களிலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயாரித்தல், தேர்தல் அலுவலர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.     விரைவில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், மாநகராட்சி மேயருக்கான இடஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சி பட்டியலின பெண்களுக்கு ஒது...
காதல் மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷ்… அதிர்ச்சியில் ரஜினி!

காதல் மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷ்… அதிர்ச்சியில் ரஜினி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
    தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். பல கோடி ரசிகர்களை உலகம் முழுதும் வைத்திருக்கிறார். இவருடயை மூத்த மகள் ஐஸ்வர்யா. பிரபல சினிமா தயாரிப்பாளரான அவருக்கு நடிகர்  தனுஷுக்கும் 2004-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இது ஒரு காதல் திருமணம். இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த குழந்தைகள் மீது ரஜினி எப்போதும் மிக பாசமாக இருப்பார்.   தமிழ்நாட்டில் உள்ள செலிபிரட்டி தம்பதிகளில் ஐஸ்வர்யாவுக்கும், தனுஷுக்கும் முக்கிய இடமுண்டு. சமீப காலமாக இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதை நடிகர் ரஜினியே பல முறை சமரசம் செய்து வைத்தார் என்றும் கூறப்படுகிறது. இந்தநிலையில், தனுஷும் ஐஸ்வர்யாவும் மனமொத்து பிரிவதாக அறிவித்துள்ளனர்.   இதுகுறித்த தனுஷுன் ட்விட்டர் பதிவில், ‘18 வருடங்களா...
சூர்யாவிற்கு பாடல் எழுதிய நடிகர் சிவகார்த்திகேயன்!

சூர்யாவிற்கு பாடல் எழுதிய நடிகர் சிவகார்த்திகேயன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    ஜெய்பீம் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் சூர்யாவின் அடுத்த படம் எதற்கும் துணிந்தவன்.   இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, வினய் ராய், பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் போன்ற பலர் நடித்து வெளிவரவிருக்கும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் இருந்து வரிசையாக பாடல்களை வெளியிட்டு வருகின்றனர் படத்தின் அடுத்த பாடல் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.     இதற்கு முன் விக்னேஷ் சிவன், யுகபாரதி இவர்கள் எழுதிய பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது சும்மா சுர்ருனு என்ற பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த பாடலை எழுதியது நடிகர் சிவகார்த்திகேயன். இவர் இதற்கு முன்பு கோலமாவு கோகிலா படத்தில் எனக்கு இப்போ கல்யாண வயசு, நம்ம வீட்டு பிள்ளை படத்தில் காந்த கண்ணழகி போன்ற பல பாடல்களை ...
“வீரமே வாகை சூடும்” பட கதாநாயகி டிம்பிள் ஹயாத்திக்கு கொரோனா தொற்று!

“வீரமே வாகை சூடும்” பட கதாநாயகி டிம்பிள் ஹயாத்திக்கு கொரோனா தொற்று!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வளம் வரும் நடிகை டிம்பிள் ஹயாத்தி, தெலுங்கில் கல்ப் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழில் இயக்குனர் A.L.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்த தேவி 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற, நடிகர் தனுஷ் நடிப்பில் பாலிவுட்டில் வெளியான அத்ரங்கி ரே படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் டிம்பிள் ஹயாத்தி. தற்போது நடிகர் விஷால் நடிப்பில் வருகிற ஜனவரி 26 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள வீரமே வாகை சூடும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள டிம்பிள் ஹயாத்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடிகை டிம்பிள் ஹயாத்தி அவருடைய வலைத்தளப் பக்கத்தில், அனைவர...
களக்காட்டில் பொங்கல் திருவிழா: இளவட்டக்கல்-உரல் தூக்கி அசத்திய இளைஞர்கள்-பெண்கள்!

களக்காட்டில் பொங்கல் திருவிழா: இளவட்டக்கல்-உரல் தூக்கி அசத்திய இளைஞர்கள்-பெண்கள்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
களக்காட்டில் பொங்கல் திருவிழா: இளவட்டக்கல்-உரல் தூக்கி அசத்திய இளைஞர்கள்-பெண்கள்! களக்காடு நாடார் புதுத்தெருவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. சாக்கு ஓட்டம், ஓட்டப்பந்தயம், கபடி, சைக்கிள் பந்தயம், பலூன் உடைத்தல், பாட்டிலில் நீர் நிரப்புதல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன. அதனை தொடர்ந்து 125 கிலோ எடையுள்ள இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடந்தது. இளைஞர்கள் இளவட்டக்கல்லை தலையின் மீது தூக்கி சுற்றி சாதனை படைத்தனர். இதுபோல பெண்களுக்கு உரல் தூக்கும் போட்டியும் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட பெண்கள் உரலை தூக்கி அசத்தினர். அதன் பின் வழுக்கு மரம் ஏறும் போட்டியும் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது....
லிங்குசாமி இயக்கத்தில்  போலீஸ் அதிகாரியாக ராம் பொத்னேனி நடிக்கும் “தி வாரியர்”.!

லிங்குசாமி இயக்கத்தில் போலீஸ் அதிகாரியாக ராம் பொத்னேனி நடிக்கும் “தி வாரியர்”.!

CINI NEWS, HOME SLIDER, திரைப்படங்கள், நடிகர்கள்
  அட்டகாசமான போலீஸ் அதிகாரியாக ராம் பொத்னேனி நடிக்கும் புதிய படம்.!?   'ஆனந்தம்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லிங்குசாமி.பல வெற்றிப் கொடுத்த இவர் முதன் முறையாக தமிழ் - தெலுங்கு என இரண்டு மொழிகளில் படம் இயக்குகிறார்.   தெலுங்கில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான 'ராம் பொத்னேனி' ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு … 'RAPO-19' என்ற டைட்டிலோடு  ஹைதராபாத்தில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.   போலீஸ் டிபார்ட்மெண்ட் பின்னணியில் நடக்கும் கதை. ராம் பொத்னேனி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். 'மிருகம்' ஆதி பினிஷெட்டி இதில் முரட்டுத்தனமான வில்லனாக நடிக்கிறார்.   ராம் பொத்னேனி முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படம் என்பதால் இப்படம்  ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் 'தி வாரியர்' என...
அருள்நிதியின் டி-பிளாக் டிரைலர் வெளியானது!

அருள்நிதியின் டி-பிளாக் டிரைலர் வெளியானது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அருள்நிதியின் டி-பிளாக் டிரைலர் வெளியானது! ‘வம்சம்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் அருள்நிதி. இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது. இதையடுத்து ‘மௌனகுரு’, ‘டிமாண்டி காலனி’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘பிருந்தாவனம்’, ‘கே 13’ என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களாக நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். இந்நிலையில், நடிகர் அருள்நிதி அவருடைய 15-வது படத்தை யுடியூப்பில் பிரபலமான எருமசாணி தொடர் மூலம் புகழ்பெற்ற விஜய்குமார் ராஜேந்திரன் இயக்கினார். இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அந்த் படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளது அப்படக்குழு. இப்படத்தை ஒளிப்பதிவாளர் அரவிந்த்சிங் தயாரித்துள்ளார். சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் படத்தை வாங்கி உள்ளது....
குடியரசு தின விழாவில் பங்கேற்க தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு!

குடியரசு தின விழாவில் பங்கேற்க தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
குடியரசு தின விழாவில் பங்கேற்க தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு! தலைநகர் புதுடெல்லியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு வரும் 26-ம் தேதி பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநிலங்களின் சார்பில் கலை பண்பாட்டு அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது வழக்கம். இந்நிலையில்  இந்த ஆண்டு குடியரசு தின நிகழ்வில் தமிழக ஊர்தி பங்கேற்க அனுமதி இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. அலங்கார ஊர்திகளை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிபுணர் குழு தேர்வு செய்கிறது. தமிழக அரசு சார்பில் வேலு நாச்சியார், வ.உ.சி உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களை சித்தரிக்கும் வகையில் அலங்கார ஊர்திக்கான கருத்துரு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழகத்தின் சார்பில் வழங்கப்பட்டிருந்த அலங்கார ஊர்திக்கான கருத்துருவை நிபுணர் குழு நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு, கொரோனா பெருந்தொற்று உள...
அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ படத்தை பாராட்டிய கமல்!

அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ படத்தை பாராட்டிய கமல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ படத்தை பாராட்டிய கமல்! சுகுமார் இயக்கியத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பகத் பாசில் நடித்து சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற படம் ‘புஷ்பா’. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியானது. இப்படத்தில் சமந்தா ஆடிய ஊ சொல்றியா மாமா பாடல் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ‘புஷ்பா’ படத்தை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியதாக இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “நேரம் ஒதுக்கி எங்களின் ‘புஷ்பா’ திரைப்படத்தைப் பார்த்த அன்புள்ள உலகநாயகன் கமல்ஹாசன் சாருக்கு மிக்க நன்றி. நீங்கள் மிகவும் இனிமையானவர். எங்கள் அனைவரது பணி குறித்தும் நீங்கள் கூறிய அன்பான வார்த்தைகளுக்கு நன்றி” என்று தெரிவித்து அதனுடன் சில புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்....