செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

முழு ஓய்வு மருத்துவர்கள் ரஜினிக்கு கட்டளை

முழு ஓய்வு மருத்துவர்கள் ரஜினிக்கு கட்டளை

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  முழு ஓய்வு மருத்துவர்கள் ரஜினிக்கு கட்டளை நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பில் இருந்த போது அங்கே பணியாற்றிய சிலருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரஜினி உடனடியாக படப்பிடிப்பில் இருந்து ஓட்டல் திரும்பினார். பின்னர் ரஜினிக்கு வைரஸ் சோதனை நடத்தப்பட்டது. இதற்கிடையில் திடீரென ரத்த அழுத்த பாதிப்பால் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ரஜினி அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்தின் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் அனைத்தும் வந்துவிட்டன என்றும் அவற்றில் கவலைப்படும்படி எதுவும் இல்லை என்றும் ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனை இன்று காலை வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இன்று மதியம் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதனை செய்து அதன் பின்னர் அவரை டிஸ்சார்ஜ் செய்தார்கள். அவருக்கு ரத்த அழுத்தம்...
தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக

தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அதிமுகவின் தேர்தல் பரப்புரை கூட்டம் சென்னையில் தொடங்கிய நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் ஒரே மேடையில் பங்கேற்றனர். ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுகவின் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். அமைச்சர்கள், அதிமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் என 94 இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளன....
திருவேலீஸ்வரர் ஆயத்தில் சனிப்பெயர்ச்சி விழா

திருவேலீஸ்வரர் ஆயத்தில் சனிப்பெயர்ச்சி விழா

HOME SLIDER, NEWS, செய்திகள்
    திருவேலீஸ்வரர் ஆயத்தில் சனிப்பெயர்ச்சி விழா நாமக்கல்  பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையார் திருவேலீஸ்வரர் கோயிலில் உள்ள சனீஸ்வரபகவானுக்கு சனிப்பெயர்ச்சி விழா, இன்று ஞாயிற்றுக் கிழமை அதிகாலையில் நடைபெற்றது. இந்த திருவேலீஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ சனீஸ்வரபகவான் தனி சன்னதிகொண்டு அனுக்கிரஹ மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சனிப்பெயர்ச்சி இரண்டரை ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறும். இன்று டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி காலை 5.22 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சியடைந்தார். இதையொட்டி,  இக்கோயிலில் ஸ்ரீ சனீஸ்வரபகவானுக்கு சிறப்பு யாகம், அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இந்த சனிப் பெயர்ச்சி பூஜை, ஆராதனைகளை ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமியை தரிசித்தனர்....
அரசு வாகனங்களில் பம்பர்களை கழற்ற உத்தரவு

அரசு வாகனங்களில் பம்பர்களை கழற்ற உத்தரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அரசு வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ‘கிராஸ் பார்’ (பம்பர்) கம்பிகளை உடனடியாக அகற்றவேண்டும் என்று தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, முதல்-அமைச்சர் அலுவலகம், அனைத்து அமைச்சர்களின் சிறப்பு தனி உதவியாளர்கள், அனைத்து அரசு செயலாளர்கள், அனைத்து மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர்கே.சண்முகம் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:- வாகனங்களில் ‘கிராஸ் பார்’(பம்பர்) என்ற கம்பிகளை அகற்றுவது தொடர்பாக கடந்த நவம்பர் 10-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது. அதில், ‘வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ‘கிராஸ் பார்’ கம்பிகளை அகற்றுவதற்கு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை மனுவாக தாக்கல் செய்ய வேண்டும். குறிப்பாக மிக மிக முக்கியமானவர்கள் மற்றும் மிக முக்கிய நபர்கள் மற்றும் மற்ற வாகனங்களில் இந்த ‘கிராஸ் பார்’ கம்பிகளை அகற்றுவது குறித்து எட...
டிச., 28 முதல் தென் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

டிச., 28 முதல் தென் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  டிச., 28 முதல் தென் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு* சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் டிச., 28 முதல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழக கடலோர மாவட்டங்கள், நாகை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிச., 29 மற்றும் 30ல் கடலூர், தஞ்சை, திருவாரூர் நாகப்பட்டிணம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  ...
103 கிலோ தங்கம் மாயம் – சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருட்டு வழக்கு பதிவு

103 கிலோ தங்கம் மாயம் – சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருட்டு வழக்கு பதிவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  103 கிலோ தங்கம் மாயமானது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து தங்கம் மாயமான வழக்கு சூடு பிடித்துள்ளது. சென்னையில் கடந்த 2012-ம் ஆண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் சுரானா நிறுவனத்தில் சோதனை நடத்தினர். இதில் 400.47 கிலோ தங்கம் சிக்கியது. சட்ட விரோதமாக தங்கத்தை இறக்குமதி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்த நகைகளை சுரானா நிறுவனத்தில் லாக்கரில் வைத்திருந்தனர். இந்த நகைகளில் 103.86 கிலோ தங்கம் மாயமானது. அது எப்படி காணாமல் போனது என்பது தெரியவில்லை. இதுபற்றிய அதிர்ச்சி தகவல் சமீபத்தில்தான் தெரிய வந்தது. இதையடுத்து 103 கிலோ தங்கம் மாயமானது பற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இ...
ரஜினியின் உடல் நிலை தொலைபேசியில் விசாரித்த மோகன்பாபு!

ரஜினியின் உடல் நிலை தொலைபேசியில் விசாரித்த மோகன்பாபு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
ரஜினியின் உடல் நிலை தொலைபேசியில் விசாரித்த மோகன்பாபு! உயர் ரத்த அழுத்தம் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத் ஜுப்ளிஹில்சில் உள்ள மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளார். ரஜினிகாந்த், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள தகவல் அறிந்ததும் அவரது நெருங்கிய நண்பரும், தெலுங்கு நடிகருமான மோகன்பாபு கடும் அதிர்ச்சி அடைந்தார் தற்போது திருப்பதியில் உள்ள மோகன்பாபு, ரஜினியின் உடல் நிலை குறித்து அவரது மனைவி லதா ரஜினிகந்த், மகள் ஐஸ்வர்யா ஆகியோரிடம் தொலைபேசியில் விசாரித்தார். “கவலைப்படும் படியாக எதுவும் இல்லை. சாதாரண ரத்த அழுத்தம் தான்” என அவர்கள் மோகன்பாபுவிடம் தெரிவித்துள்ளனர். இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்த மோகன்பாபு, “ரஜினிகாந்த் உறுதியான மனமும், திடமான உடலும் கொண்டவர். விரைவில் பூரண குணம் அடைந்து ஷுட்டிங்கில் கலந்து கொள்வார்” என குறிப்பிட்டார்....
ரஜினி உடல்நிலையில் முன்னேற்றம்!

ரஜினி உடல்நிலையில் முன்னேற்றம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
  ரஜினி அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் - ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை: ரத்த அழுத்த மாறுபாடு நேற்று இருந்ததைவிட இன்று கட்டுக்குள் உள்ளது. ரஜினியின் அவர்களின் உடல்நிலையை பரிசோதித்ததில் எந்த ஆபத்தான முடிவு வரவில்லை.
“தலைவி” படத்தில் ஆர்.எம்.வீரப்பன் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி

“தலைவி” படத்தில் ஆர்.எம்.வீரப்பன் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ள திரைப்படம் தலைவி. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. தலைவி படத்தில் எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். அவரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இந்நிலையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவு நாளையொட்டி என் புது லுக் டிசம்பர் 24ம் தேதி காலை வெளியாகும் என்று அரவிந்த்சாமி ட்வீட் செய்தார். அதன்படி புதிய லுக் 25ம் தேதி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதில் அரவிந்த் சாமியுடன் சமுத்திரக்கனியும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர் கெட்டப்புடன் அரவிந்த் சாமி இருக்கும்போது, அவருக்கு அருகில் கண்ணாடியுடன் தான் இருக்கும் புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சமுத்திரக்கனி. எம்.ஜி.ஆருக்கு மிக நெருங்கிய நண்பரான ஆ...
‘தினமலர்’ கோபால்ஜி தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் மாநில தலைவராக தேர்வு

‘தினமலர்’ கோபால்ஜி தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் மாநில தலைவராக தேர்வு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ‘தினமலர்’ கோபால்ஜி தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் மாநில விசுவ இந்து பரிஷத் தலைவராக இருந்த ராமகோபாலன் மறைவைத்தொடர்ந்து, தலைவர் பதவி காலியாக இருந்தது. இந்த நிலையில், நசென்னை தியாகராயநகரில் உள்ள தலைமை அலுவலகத்தில்  விசுவ இந்து பரிஷத் பொதுக்குழுக்கூட்டம்  நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக, அகில உலக முன்னாள் செயல்தலைவர் வேதாந்தம் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர். அதன்படி, தற்போதைய மாநிலத்தலைவர் ரத்தினசாமி போஷகராகவும், புதிய மாநில தலைவராக தினமலர் ஆர்.ஆர்.கோபால்ஜியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பொதுச்செயலாளராக சோமசுந்தரம், துணைத் தலைவர்களாக கிரிஜா சேஷாத்திரி, ஆர்.பி.கிருஷ்ணமாச்சாரி, எம்.ஜெ.துளசிராம், கவுசிக் என் சர்மாவும், செயல் தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்...