நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் செயலாளராக உள்ள ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை ஏப்ரல் 30ம் தேதிக்குள் காலி செய்ய உயர்நீதிமன்றம் கெடு!
சுமார் 2 கோடி வாடகை பாக்கி கேட்டு நில உரிமையாளர்கள் வழக்கில் உத்தரவு.
அடுத்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தக் கூடாது எனவும் தடை.
வானம் கலைவிழாவை தொடர்ந்து இயக்குனர் பா.இரஞ்சித்தின் அடுத்த அறிவிப்பு :
மார்கழியில் மக்களிசை,
நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ”மார்கழியில் மக்களிசை 2020” எனும் நிகழ்ச்சி சென்னையில் பல்வேறு அரங்கங்களில் 8 நாட்கள் நடைபெறவுள்ளதாக இயக்குனர் பா.இரஞ்சித் அறிவித்துள்ளார்.
திரைப்படங்கள் இயக்குவதைக் கடந்து பல்வேறு சமூக, கலைப் பணிகளையும் மேற்கொண்டு வருபவர் இயக்குனர் பா.இரஞ்சித். இவர் தனது நீலம் பண்பாட்டு மையம் மூலம் ஆவணப்படங்களை தயாரித்தல், நாடகங்களை அரங்கேற்றுதல் என சினிமாவை தாண்டிய பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். மேலும் இசை வரலாற்றில் முதல் முறையாக பாப், ராப், கானா, கிராமியம், கர்நாடக இசை என அனைத்து வகையான இசைகளையும், இசைக் கலைஞர்களையும் இணைத்து ‘Casteless Collective’ எனும் இசைக்குழுவையும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கினார்.
‘Casteless Collective’ இசைக்குழு இதுவரை இ...
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் “ராங்கி”. சுபாஸ்கரன் இப்படத்தை தயாரித்துள்ளார். நடிகை திரிஷா கதையின் நாயகியாக நடித்துள்ளார்.
இயக்குனர் A.r.Murgadoss இப்படத்தின் கதையினை எழுதியுள்ளார்.
இப்படத்தினை இயக்கி உள்ளார் இயக்குனர் M. சரவணன்.
இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார் இசையமைப்பாளர் C.சத்யா.
இத்திரைப்படத்தின் first single track “பனித்துளி விழுவதால் அணையாது தீபம்” பாடலை கபிலன் எழுதியுள்ளார். பிரபல பாடகி சின்மயி பாடியுள்ளார்
நடிகர் சிவகார்த்திகேயன் இப்பாடலை இன்று மாலை தனது Twitter ல் வெளியிட்டார்
https://www.youtube.com/watch?v=RZMi6ANmhek&feature=emb_logo...
சிம்பு நடித்துள்ள 'ஈஸ்வரன்' படத்துக்கு முன்பாக, ஜெய் நடித்துள்ள படத்தை இயக்கி முடித்துள்ளார் சுசீந்திரன். ஷிவ ஷிவா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் மீனாட்சி நாயகியாக நடித்துள்ளார். சத்ரு, சரத், ஜேபி, காளி வெங்கட், பால சரவணன், முத்துக்குமார், அர்ஜெய் ப்ரின்ஸ், அருள்தாஸ், இயக்குநர் முக்தார் கான் உள்ளிட்ட பலர் ஜெய்யுடன் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார் ஜெய். மேலும், இந்தப் படத்துக்காகத் தனது உடலமைப்பையும் மாற்றி நடித்துள்ளார். இது தொடர்பாக ஜெய் கூறியிருப்பதாவது:
"கமல் சார் 'மருதநாயகம்' படத்துக்காக உடலை மாற்றியதுபோல நான் என் உடலமைப்பை மாற்றவில்லை. நான் செய்ததெல்லாம் ஒல்லியாகத் தெரிய, கடுமையான உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றினேன். முதல் முறையாக திரையில் வேட்டி கட்டியதும் இந்தப் படத்துக்காகத்தான். நன்றாக இருந்தது. எனது சிறு வயதில் ...
தமிழ் சினிமாவில் கண்ட நாள் முதல் என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் ரெஜினா. அதனை தொடர்ந்து அவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். இதைத் தொடர்ந்து நாளடைவில் கவர்ச்சியில் களமிறங்கிய ரெஜினா தொடர்ந்து ஏராளமான தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் டிசம்பர் 13-ம் தேதி ரெஜினா தனது 30-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கு ரெஜினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புதிய புகைப்படத்தை வெளியிட்டு உங்களது வாழ்த்துகளுக்கும், ஆசிர்வாதங்களுக்கும் நன்றி. என தெரிவித்திருந்தார்.
மேலும் புகைப்படத்தின் கீழ் அடுத்த பக்கத்தில் எனது ஆடையில்லா புகைப்படம் உள்ளது எனவும் பதிவிட்டிருந்தார்...
புதுவை அரசு சார்பில் ஆண்டுதோறும் திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான இந்தியத் திரைப்பட விழா இன்று அலையன்ஸ் பிரான்சேஸ் அரங்கில் நடைபெற்றது.
கடந்த 2019 ஆண்டில் சிறந்த திரைப்படமாக இயக்குனர் பார்த்திபனின் “ஒத்த செருப்பு” படம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான புதுவை அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான விருதினை இயக்குனர் பார்த்திபனுக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி வழங்கினார். விருதுக்கான பாராட்டு பத்திரத்துடன் ரூ.1 லட்சம் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.
விழாவில் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் பேசுகையில், எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன். தற்போது அரசியலுக்கு வரும் நடிகர்களும் சிறப்பான ஆட்சியை வழங்குவார்கள். நடிகர்கள் என்பதால் அரசியலில் இருந்து ஒதுக்க வேண்டிய அவசியமில்லை என பேசினார்....
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 20-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை மீட்க உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்
- வைகோ
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 20-க்கும் மேற்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய அரசும்,
தமிழக அரசும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டது தொடர்பாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ‘இலங்கைக் கடற்படை, தமிழக மீனவர்களைக் கைது செய்வதும் அவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி கருவிகளைப் பறிமுதல் செய்வதும் தொடர்ச்சியாக நடந்து வருகின்றது.
இவ்வாறு எல்லை தாண்டி வந்து இலங்கைக் கடற்படையினர் பறிமுதல் செய்த 121 படகுகள் இலங்கை துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுக் கிடக்கின்றன.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, இப்படகுகளை மீட்பதற்கு இந்திய அரசு எவ...
2015-ம் ஆண்டு மார்டின் ப்ராகாட் இயக்கத்தில் துல்கர் சல்மான், பார்வதி மேனன், அபர்ணா கோபிநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் சார்லி. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கை பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஷ்ருதி நல்லப்பா இணைந்து, பிரமோத் ஃபிலிம்ஸ் சார்பாகத் தயாரித்துள்ளனர்.
திலீப் குமார் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஷிவதா, மௌலி, அலெக்ஸாண்டர் பாபு, எம்.எஸ்.பாஸ்கர், குரு சோமசுந்தரம், கிஷோர் மற்றும் அபிராமி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்திங்களில் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
தான் குழந்தையாய் இருக்கும் போது, கடலோர நகரம் ஒன்றின் சுவரில் வரையப்பட்ட ஓவியத்தை வைத்து அந்நியர் ஒருவர் சொன்ன கதையக் கேட்கிறாள் பாரு. அவள் வளர்ந்த பின் அந்த ஓவியத்தை வரைந்த மாறாவைத் ...
திருமணத்துக்குப் பின் கணவருடன் ஷூட்டிங் வந்த காஜல் அகர்வால் - வரவேற்ற சிரஞ்சீவி
அக்டோபர் 30-ம் தேதி மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கவுதம் கிச்லு - காஜல் அகர்வால் திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்குப் பின் காஜல் - கிச்லு தம்பதி மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றிருந்தனர். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார்.
திருமணத்துக்குப் பின் கணவருடன் படப்பிடிப்புக்கு வந்த காஜல் அகர்வாலுக்கு மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
திருமணத்துக்கு முன்னர் இந்தியன் 2, ஆச்சார்யா ஆகிய படங்களில் நடித்து வந்தார் காஜல் அகர்வால்.
இந்நிலையில் தேனிலவை முடித்த காஜல் அகர்வால் சிரஞ்சீவியின் ஆச்சார்யா படப்பிடிப்பில் இன்று இணைந்தார்
காஜல் அகர்வால் உடன் அவரது கணவர் கிச்லுவும் வந்திருந்தார்.
இருவரையும் சிரஞ்சீவி உள்ளிட்ட படக்க...
பிரபல செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகவுள்ளது.
சச்சின் தெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி உள்ளிட்ட இந்திய விளையாட்டு வீரர்கள் பலரின் வாழ்க்கை, திரைப்படமாக தயாரிக்கப்பட்டு உள்ளன. செஸ் விளையாட்டில் முடிசூடா மன்னனாக திகழும் விஸ்வநாதன் ஆனந்த்தின் வாழ்க்கை தற்போது திரைப்படமாக உருவாக உள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த். ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றவர். 1988-ல் இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆன ஆனந்த், 2000-ம் ஆண்டில், முதல்தடவையாக உலக சாம்பியன் ஆனார். தொடர்ந்து 2007, 2008, 2010, 2012 ஆகிய ஆண்டுகளில் உலக செஸ் சாம்பியன் பட்டங்களை அடுத்தடுத்து வென்று சாதனை செய்தார். சூசன் நினனுடன் இணைந்து மைண்ட் மாஸ்டர் என்கிற சுயசரிதை நூலை எழுதியுள்ளார்.
விஸ்வநாதன் ஆனந்த்தின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பது குறித்து பலர் அவரை...