சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

கொரானா வைரஸ் பீதியால் உலகம் முழுதும் இந்திய கலாச்சாரமான “வணக்கம்” பரவுகிறது!

கொரானா வைரஸ் பீதியால் உலகம் முழுதும் இந்திய கலாச்சாரமான “வணக்கம்” பரவுகிறது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா வைரஸ் பீதியால் உலகம் முழுதும் இந்திய கலாச்சாரமான "வணக்கம்" பரவுகிறது! சீனாவின் ஹூகான் நகரில் தொடங்கிய கொரானா வைரஸ் இப்போது உலகளாவிய அளவில் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆக மாறி உள்ளது. இந்த வைரஸ் குறிப்பாக ஒருவருக்கு ஒருவர் வரவேற்பை சொல்லும் விதமாக கை கொடுப்பதால் அதிகம் பரவுகிறது என்ற தகவலால் உலகம் முழுதும் இப்போது கை கொடுக்கவே அச்சப்படுகிறார்கள். உலக வல்லரசு நாடுகளின் தலைவன் எனவ்சொல்லிக் கொள்ளும் அமெரிக்க அதிபரையும் கொரானா பீதி விட்டுவிடவில்லை. இந்தியா தவிர பெரும்பாலான நாடுகளில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது அவரை வரவேற்கும் விதமாக கை குலுக்கி வரவேற்பது வழக்கம். உயிர்க் கொல்லி நோயாக மாறியுள்ள கொரானா வைரஸ் கை கொடுத்தாலும் பரவும் என்பதால் கை கொடுக்கவோ கட்டிப்பிடிக்கவோ அச்சப்படுகிறார்கள். இதன் காரணமாக இந்திய குறிப்பாக தமிழ் கலாச்சாரப்படி ஒருவரை...
குழந்தைகள் பாலியல் தடுப்பு சட்டமான போக்சோ கடுமையாக்கப்பட்டது!

குழந்தைகள் பாலியல் தடுப்பு சட்டமான போக்சோ கடுமையாக்கப்பட்டது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  போக்சோ’ சட்ட புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் (போக்சோ), கடந்த 2012-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தை மேலும் கடுமையாக்கும்வகையில், சமீபத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த திருத்தங்களை உள்ளடக்கிய புதிய ‘போக்சோ’ சட்ட விதிமுறைகளை மத்திய அரசு, அரசிதழில் வெளியிட்டுள்ளது. கடந்த 9-ந் தேதி அமலுக்கு வந்த அந்த விதிமுறைகளில் கூறப்பட்டு இருப்பதாவது:- குழந்தைகளை பராமரிக்கும் காப்பகங்கள், குழந்தைகளுடன் அன்றாட தொடர்பு கொண்ட பள்ளிக்கூடங்கள், விளையாட்டு அமைப்புகள் உள்ளிட்ட எந்த நிறுவனமாக இருந்தாலும், அங்கு பணியாற்றும் ஒவ்வொரு ஊழியரின் பின்னணி குறித்து போலீஸ் மூலம் அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் ஆகியோருக்கு தங்க...
அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்… கொரானா வைரஸ் தடுக்க – டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்… கொரானா வைரஸ் தடுக்க – டிரம்ப் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    சீனாவில் ஹூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 121 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5 ஆயிரத்து 43 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 34 ஆயிரத்து 300-க்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் 2 பேர் பலியாகி உள்ளனர். இந்த சூழலில் அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அமெரிக்கா முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்வதாக அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெள்ளை மாளிகையில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், '' நான் அதிகாரப்பூர்வமாக தேசிய அவசர...
கொரானா வைரஸ் பீதி ஏப்ரல் கடைசிக்கு தள்ளிப்போடப்பட்ட IPL கிரிக்கெட் போட்டி!

கொரானா வைரஸ் பீதி ஏப்ரல் கடைசிக்கு தள்ளிப்போடப்பட்ட IPL கிரிக்கெட் போட்டி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    கொரானா வைரஸ் பீதி ஏப்ரல் கடைசிக்கு தள்ளிப்போடப்பட்ட IPL கிரிக்கெட் போட்டி! உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் இந்த வைரசால் 70-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் பலியாகி உள்ளனர். தலைநகரான டெல்லியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மிகப்பெரிய அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மக்கள் அதிக அளவில் கூடும் நிகழ்ச்சிகளை ரத்து செய்ய வேண்டும் என உலக சுகாதார மையம் அறிவுரை வழங்கியுள்ளது. இதை மத்திய அரசும், மாநில அரசுகளும் கடைபிடிக்க தொடங்கியுள்ளன. முதற்கட்டமாக டெல்லி அரசு திரையரங்குகள், நீச்சல் குளங்கள், மக்கள் கூடும் மால்கள் போன்றவற்றை மூடியது. இந்த சூழலில் டெல்லியில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகளுக்கும் அனுமதி அளிக்க முடியாது என்று தெரிவித்தது. இதற்கிடையில் ஏப்ரல 15-ந்தேதி வரை அனைத்...
பிக்பாஸ் கவின் நடிக்கும் “லிப்ட்”

பிக்பாஸ் கவின் நடிக்கும் “லிப்ட்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  பாசிட்டிவான வார்த்தையில் டைட்டில் இருப்பது படத்திற்கே பாசிட்டிவாக இருக்கும். லிப்ட் என்ற டைட்டில்  அப்படியொரு பாசிட்டிவ் எனர்ஜியைக் கொண்டுள்ளது. ஈகா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் லிப்ட் படத்தை ஹேப்ஸி  தயாரிக்கிறார். படத்தின் கதையை வெகு வித்தியாசமாக எழுதி இயக்கி இருக்கிறார் வினித் வரபிரசாத். இவர் விளம்பரப் படங்கள் மூலம் பெரிதும் கவனம் பெற்றவர். பிக்பாஸ் மூலம் தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளையாக மாறிவிட்ட கவின் பிக்பாஸில் இருந்து வெளிவந்த உடன் நாயகனாக நடிக்கும் முதல்படம் இது.     கவின் ஜோடியாக  நடிகை அம்ரிதா ஐயர் நடிக்கிறார். மேலும் படத்தில் நடித்துள்ள மற்ற நடிக நடிகையர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாக இருக்கிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் போலவே படத்தின் டெக்னிக்கல் டீமும் செம்மயாக இணைந்திருக்கிறார்கள். படத்தில் கேமராமேனாக S யுவா இணைந்துள்ளார். பாடல்களிலும் பின்னணி இசையிலும் ம...
முதல்வர் பதவிக்கு ஆசையில்லை என்ற ரஜினி ஒரு அற்புதமான மனிதராம் – சொல்கிறார் பாரதிராஜா

முதல்வர் பதவிக்கு ஆசையில்லை என்ற ரஜினி ஒரு அற்புதமான மனிதராம் – சொல்கிறார் பாரதிராஜா

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    பாரதிராஜா வெளியிட்ட அறிக்கை:   எனது நாற்பது ஆண்டு கால நட்பில், இன்று இந்த சமூகம் உயர்ந்த உள்ளம், உயர்ந்த மனிதன், உயர்ந்த கலைஞன், சூப்பர் ஸ்டார் என கொண்டாடும் 'ரஜினி' என்ற மந்திரத்தை விட, 'ரஜினி' என்ற மனிதம் எப்படி வெளிப்படும் என்று நான் முன்பே அறிந்திருக்கிறேன். இன்று அந்த மனிதம் வெளிப்படையாக, மக்களுக்கு நன்மை பயக்கும் புது கொள்கைகளை வரவேற்கிறது. தமிழன் தான் ஆட்சிக்கு தலைசிறந்தவன் என்ற ரஜினியின் நாற்காலி கொள்கை, தமிழனின் வரலாறு, ஆகியவற்றின் மூலம் பேராசை என்ற சமூக விலங்கை உடைப்பதும் ரஜினி என்ற ஓர் உண்மைக்கே சாரும். ரஜினியின் அரசியல் கொள்கை, அரசியலாக அல்லாமல் தமிழுக்கும் தமிழ்மக்களுக்கும் நன்மை பயக்கும் விதமாக, சமயுக அரசியலில் யாரும் சிந்திக்காத ஒன்றாக, அன்று நான் அறிந்தவை, இன்று எம் தமிழக மக்களுக்கு ஓர் விதையாக கூட இருக்கலாம். ஆருயிர் நண்ப...
சாந்தனு – அதுல்யா ஜோடி நடிக்கும் படத்தில் பாக்யராஜ்!

சாந்தனு – அதுல்யா ஜோடி நடிக்கும் படத்தில் பாக்யராஜ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், ஃபர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் தயாரிப்பில், இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் கே. பாக்கியராஜ், சாந்தனு, அதுல்யா நடிக்கும் புதிய படம் லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பாக 'நட்புன்னா என்னான்னு தெரியுமா' உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தயாரித்த ரவீந்தர் சந்திரசேகர், ஃபர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ்' சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் ஆகியோருடன் இணைந்து, கே. பாக்கியராஜ், சாந்தனு, அதுல்யா ஆகியோர் நடிப்பில் இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் ஒரு புதிய படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். இப்படத்தின் துவக்கவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. தென்னிந்திய மொழிகளில் தொலைக்காட்சி தொடர்கள் இயக்கிய அனுபவத்துடன், மலையாளத்தில் 'லாவெண்டர்', தமிழில் 'ஜாம்பவான்' உள்ளிட்ட படங்களில் இணை - துணை இயக்குனராக பணியாற்...
முன்கூட்டியே முடியும் பார்லிமெண்ட் கூட்டத்தொடர்… சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல்களுக்கு மட்டுமே அனுமதி… இதெல்லாம் கொரானா பீதியால்!

முன்கூட்டியே முடியும் பார்லிமெண்ட் கூட்டத்தொடர்… சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல்களுக்கு மட்டுமே அனுமதி… இதெல்லாம் கொரானா பீதியால்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  முன்கூட்டியே முடியும் பார்லிமெண்ட் கூட்டத்தொடர்... சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல்களுக்கு மட்டுமே அனுமதி... இதெல்லாம் கொரானா பீதியால்! உலகை பெருமளவில் அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில் இந்தியாவில் மட்டும் சுமார் 25 ஆயிரம் பேர் மருத்துவர் கண்காணிப்பில் இருக்கிறார்கள். கொரோனா வைரசை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மாநில அரசுகளும் மருத்துவ பரிசோதனைகளை உடனுக்குடன் செய்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகளவில் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப முக்கிய விழாக்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. தற்போது பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத் தொடரை ஏப்ரல் மாதம் 3-ந்தேதி வரை நடத்த முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கிடையே, நாடு முழுவதும் கொரோனா வைரஸ...
கமலியாக மாறிய கயல் ஆனந்தியின் ஹைடெக் காதல் கதை!

கமலியாக மாறிய கயல் ஆனந்தியின் ஹைடெக் காதல் கதை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
      காதல், படிப்பு, கனவு எல்லாம் கலந்து குழப்பும் வயது கல்லூரிக் காலம். நல்ல கல்வி கற்று நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள்ளும் கனவு ஒருபுறமும், விரும்பியவனை அடையும் காதல் ஒருபுறமும், இருவேறு திசைகளில் இருக்கும் பருவத்தில் இருப்பவள் தான் கமலி. அவள் இந்த இரண்டும் இரண்டையும் அவள் அடைந்தாளா என்பதுதான் 'கமலி from நடுக்காவேரி'. ஐ.ஐ.டி. பின்னணியில் சொல்லப்பட்ட ஹைடெக் காதல் கதை. புதுமுகங்களை நம்பி ஒரு புதுமுக இயக்குநர் மக்களின் நல்ல ரசனையை நம்பி எடுத்த படம். கவிதையாக ஒரு காதல்.. தரமான ஒளிப்பதிவு, தெளிவான திரைக்கதை புதுமையான வசனங்கள் என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செதுக்கி இருக்கிறார் புதுமுக இயக்குநர் ராஜசேகர். ஆனந்தியின் நடிப்பு படம் வந்தபிறகு எல்லோராலும் பாராட்டப்படும். பின்னணி இசையும் பாடல்களும் திரைக்கதைக்கு உதவும் விதத்தில் அழகாக அமைத்திருக்கிறார் இசையமைப்பாளர்....

கொரானா பீதி… மார்ச் 31வரை டில்லியில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை – அர்விந்த் கெஜ்ரிவால்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரோனா எதிரொலியால் டெல்லியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லுரிகள் வரும் மார்ச் 31ம் தேதி வரை மூடப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அதாவது, தேர்வு நடைபெறாத பள்ளிகள் மற்றும் கல்லுரிகள், திரையரங்குகள் மூடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். துணைநிலை ஆளுநர் அனில் பைஜால்-வுடனான சந்திப்புக்கு பின் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார். அதேசமயம் பொதுமக்கள் ஓன்று கூடுவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக டெல்லி அரசு ஆரம்ப பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது....