சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

கொரானா வைரஸ் பீதியால் உலகம் முழுதும் இந்திய கலாச்சாரமான “வணக்கம்” பரவுகிறது!

 

 

கொரானா வைரஸ் பீதியால் உலகம் முழுதும் இந்திய கலாச்சாரமான “வணக்கம்” பரவுகிறது!

சீனாவின் ஹூகான் நகரில் தொடங்கிய கொரானா வைரஸ் இப்போது உலகளாவிய அளவில் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆக மாறி உள்ளது.

இந்த வைரஸ் குறிப்பாக ஒருவருக்கு ஒருவர் வரவேற்பை சொல்லும் விதமாக கை கொடுப்பதால் அதிகம் பரவுகிறது என்ற தகவலால் உலகம் முழுதும் இப்போது கை கொடுக்கவே அச்சப்படுகிறார்கள்.

உலக வல்லரசு நாடுகளின் தலைவன் எனவ்சொல்லிக் கொள்ளும் அமெரிக்க அதிபரையும் கொரானா பீதி விட்டுவிடவில்லை.

இந்தியா தவிர பெரும்பாலான நாடுகளில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது அவரை வரவேற்கும் விதமாக கை குலுக்கி வரவேற்பது வழக்கம்.

உயிர்க் கொல்லி நோயாக மாறியுள்ள கொரானா வைரஸ் கை கொடுத்தாலும் பரவும் என்பதால் கை கொடுக்கவோ கட்டிப்பிடிக்கவோ அச்சப்படுகிறார்கள்.

இதன் காரணமாக இந்திய குறிப்பாக தமிழ் கலாச்சாரப்படி ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது இருகரம் கூப்பி வணக்கம் சொல்லும் வழக்கத்தை உலகம் முழுதும் இப்போது கடைபிடிக்க தொடங்கி உள்ளனர்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு நிகழ்ச்சியில் தன்னை மறந்து கை குலுக்க போய் பின்னர் சுதாரித்துக் கொண்டு வணக்கம் சொன்னது குறிப்பிடத்தக்கது.

637 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன