என் உடையை தேர்வு செய்வது என் மனைவி தான் – இசையமைப்பாளர் யுவன்
இசையமைப்பாளர் யுவன் பேசும்போது,
சூர்யாவுக்கும் கார்த்திக்கும் ரொம்ப நன்றி. நீண்ட நாள் கழித்து இணைந்து வேலை செய்வது மகிழ்ச்சி. 2D ராஜா சாருக்கும் நன்றி. படத்தின் ரீ ரெக்கார்டிங் வேலைகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. இன்று அல்லது நாளைக்குள் முடித்துவிடுவேன். முத்தையாவுடன் எனக்கு இது முதல் படம். படம் சிறப்பாக உள்ளது. அதிதி மற்றும் அனைத்து கலைஞர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். எனக்கு இந்த படம் மிகவும் பிடித்துள்ளது. இதை கார்த்தியிடமும் கூறினேன்.
யுவன் மற்றும் கார்த்தி என்ற கூட்டணியின் மேஜிக் பையா, பருத்திவீரன், நான் மகான் அல்ல என அனைத்துப் படமும் ஆல்பம் ஹிட். அந்த மேஜிக் எப்படி நிகழ்கிறது?
நாங்கள் ஒரே குடும்பம் போன்று தான். பள்ளி முதல் இதுவரை நாங்கள் ஒன்றாக தான் பழகியுள்ளோம். இப்போது பெரிய ரசிகர் பட்டாளமே அவருக்குள்ளது. எங்களுக்குள் இருக்கும் அன்பும், அதை தாண்டிய இறைவனின் அரு...









