வெள்ளிக்கிழமை, நவம்பர் 13
Shadow

HOME SLIDER

‘புஷ்பா’ உள்ளிட்ட கேங்ஸ்டர் படங்களை பார்த்து கொலை குற்றத்தில் ஈடுபட்ட 3 சிறுவர்கள்

‘புஷ்பா’ உள்ளிட்ட கேங்ஸ்டர் படங்களை பார்த்து கொலை குற்றத்தில் ஈடுபட்ட 3 சிறுவர்கள்

HOME SLIDER, NEWS, செய்திகள்
அல்லு அர்ஜூன் நடித்த 'புஷ்பா' திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இந்த படத்தை பார்த்துவிட்டு, தாங்களும் குற்ற உலகில் பிரபலம் அடைய வேண்டும் என கருதி 3 சிறுவர்கள் ஒருவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் ஜகாங்கீர்புரி பகுதி மருத்துவமனையில் ஷிபு என்ற நபர் கத்தி குத்து காயங்களுடன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தபோதே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் 3 சிறுவர்கள் சேர்ந்து ஷிபுவை கத்தியால் குத்தியது சிசிடிவி காணொளி மூலம் தெரிய வந்தது. அந்த சிறுவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, தாங்கள் புஷ்பா உள்ளிட்ட கேங்ஸ்டர் படங்களை பார்த்து, அதில் வரும் கதாபாத்திரங்களை போல ஆக வேண்டும் என விரும்பியதாகவும், இதனால் ஒருவரை கொலை செய்து அதை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பிரபலம் அடைய இருந்ததாகவும் தெரி...
பிரபல நடிகை வீட்டில் துணிகளை திருடிய தனுஷ்!

பிரபல நடிகை வீட்டில் துணிகளை திருடிய தனுஷ்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகைகள்
    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நடிகை நிக்கி கல்ராணி. இவர் டார்லிங், ராஜவம்சம் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினியாக நடித்தவர். கடந்த சில தினங்களுக்கு முன் நடிகை நிக்கி கல்ராணி, அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் `தன்னுடைய வீட்டில் வேலைப் பார்ப்பதற்காக தனியார் ஏஜென்ஸி மூலம் தனுஷ் என்பவரை நியமித்திருந்தாகவும். கடந்த ஜனவரி 11ஆம் திகதி தனுஷ், சில பொருள்களை எடுத்துச் சென்றதாகவும் குறிப்பிட்டிருந்தார்.   அதன்பிறகு வீட்டில் சோதனை நடத்திய பிறகு விலை உயர்ந்த கேமரா, 40 ஆயிரம் ரூபாய் உள்பட சில பொருள்கள் காணவில்லை. எனவே தனுஷிடம் விசாரணை நடத்தி திருட்டுப்போன பொருள், பணத்தை மீட்டு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் அண்ணாசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேல...
2022 டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு

2022 டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு

HOME SLIDER, sports, விளையாட்டு செய்திகள்
  2022 ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. மொத்தம் 45 போட்டிகள் கொண்ட இந்த தொடர், வரும் அக்டோபர் 16ந் தேதி தொடங்கி நவம்பர் 13ந்தேதிவரை இந்த போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகின்றது. அடிலெய்டு, பிரிஸ்பேன், கீலாங், ஹோபார்ட், மெல்போர்ன், பெர்த் மற்றும் சிட்னி உள்ளிட்ட இடங்களில் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரையிறுதிப் போட்டிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்திலும், அடிலெய்டு ஓவல் மைதானத்திலும் முறையே நவம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் நடைபெறும்.  இறுதிப் போட்டி நவம்பர் 13ந்தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாட தகுதி...
தந்தை சொத்தில் மகள்களுக்கும் பங்கு உண்டு –  உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தந்தை சொத்தில் மகள்களுக்கும் பங்கு உண்டு – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

HOME SLIDER, NEWS, செய்திகள்
    தந்தை சொந்தமாக சம்பாதித்த சொத்தில் மகள்களுக்கும் பங்கு உண்டு என்ற சட்டம் 1956-ம் ஆண்டுக்கு முன்னரும் செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 1956-ம் ஆண்டு, இந்து வாரிசு உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி,  மூதாதையரின் சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே பங்கு உண்டு என இருந்தது இதன்பின் கடந்த 2005-ம் ஆண்டு இந்து வாரிசு உரிமை சட்டம் பிரிவு 6-ல்,  திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, மூதாதையர்களின் சொத்தில் மகள்களுக்கும் சம உரிமை உண்டு என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த அருணாச்சலா என்பவர் தொடர்ந்த வழக்கு ஒன்றில், ’1956-ம் ஆண்டுதான் வாரிசு உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்பாகவே குடும்ப தலைவர் இறந்து விட்டால், அவருடைய ஆண் வாரிசுகளுக்கு மட்டும் தான் சொத்து செல்லுமா அல்லது மகள்களுக்கும் சொத்தில் உரிமை உண்டா என்பது...
குழந்தைகளுக்கு முக கவசம் தேவை இல்லை: மத்திய அரசு

குழந்தைகளுக்கு முக கவசம் தேவை இல்லை: மத்திய அரசு

helth tips, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரோனாவின் 3-வது அலை சிறுவர்-சிறுமிகளையும் விட்டு வைக்கவில்லை. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் குழந்தைகள் மற்றும் சிறார் தொடர்பான திருத்திய கொரோனா வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:- * 5 வயது மற்றும் அதற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு முக கவசம் தேவை இல்லை. 6-11 வயதிற்குட்பட்டவர்கள், பெற்றோரின் நேரடி மேற்பார்வையின் கீழ் பாதுகாப்பாகவும், சரியான முறையிலும் குழந்தையின் திறனை பொறுத்து முக கவசம் அணியலாம். 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் பெரியவர்களை போல முக கவசம் அணிய வேண்டும். * கொரோனா, ஒரு வைரஸ் தொற்று ஆகும். தீவிரமற்ற கொரோனா தொற்றை சமாளிப்பதில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு (ஆன்டிமைக்ரோபியல்) எந்தப் பங்கும் இல்லை. எனவே அறிகுறியற்ற மற்றும் லேசான பாதிப்புகளுக்கு சிகிச்சை அல்லது நோய்த்...
இனி மாஸ்க் அணிய வேண்டாம் -இங்கிலாந்து அரசு

இனி மாஸ்க் அணிய வேண்டாம் -இங்கிலாந்து அரசு

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள்
    இங்கிலாந்து மக்கள் அடுத்த வாரம் முதல் முகக்கவசம் அணிய தேவையில்லை என அறிவித்துள்ள பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கொரோனா பரவலால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஒன்றான இங்கிலாந்தில், ஓமைக்ரான் வகை பரவல் கடந்த ஆண்டு இறுதியில் வேகமெடுத்தது. இதனையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி முதல் அங்கு கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் முதல் விலக்கிக் கொள்ளப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மக்கள் இனி முகக்கவசம் அணிய தேவையில்லை எனவும், வீட்டில் இருந்தே பணியாற்ற தேவையில்லை, இரவு நேர விடுதிகள் போன்ற இடங்களுக்கு செல்வதற்கு அவசியமாக்கப்பட்டிருந்த கோவிட் பாஸ்கள் இனி தேவையில்லை, அதே ...
இன்றைய ராசிபலன் – 21.01.2022 – வெள்ளிக்கிழமை

இன்றைய ராசிபலன் – 21.01.2022 – வெள்ளிக்கிழமை

HOME SLIDER, ராசிபலன்
      மேஷம் ஜனவரி 21, 2022 குடும்பத்தில் இருந்துவந்த தன நெருக்கடி தொடர்பான பிரச்சனைகள் குறையும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் சிறு சிறு மாற்றங்கள் செய்தால் நல்ல லாபத்தை அடையலாம். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் அஸ்வினி : சாதகமான நாள். பரணி : ஆதரவு கிடைக்கும். கிருத்திகை : விருப்பம் நிறைவேறும். --------------------------------------- ரிஷபம் ஜனவரி 21, 2022 உடல் தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறைவதற்கான சூழ்நிலைகள் அமையும். வழக்கு சார்ந்த பணிகளில் நிதானம்...
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 42 ஆயிரம் ரொக்கம் கிடைக்குமாம்!

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 42 ஆயிரம் ரொக்கம் கிடைக்குமாம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
  கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 42 ஆயிரம் ரொக்கம் கிடைக்குமாம். இந்த பரிசு தொகை குடுப்பது ஆஸ்திரியாவில். ஆஸ்திரியாவின் மக்கள் தொகையில் ஏறக்குறைய 72 சதவீத மக்கள் கொரோனாவுக்கு எதிராக முழுமையான தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டுள்ளனர். மேற்கு ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும்போது ஆஸ்திரியா குறைந்த அளவிலேயே தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரிய அரசு பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் லாட்டரி சீட்டை அறிமுகப்படுத்த உள்ளது. ஒவ்வொரு நாளும் ஆஸ்திரியாவில் கொரோனாவின் மாறுபாடான ஒமைக்ரான் தொற்று அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதனால் ஆஸ்திரியா அரசாங்கம் மற்றுமொரு ஊரடங்கைத் தவிர்க்கும் வகையில் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி பொதுமக்கள் ஏற்கெனவே தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்தாலும் இனிமேல் தடுப்பூசி செலுத்துபவரா...
காதலை காட்டி கிட்னியை தானமாக வாங்கிய பின் காதலனை கழற்றிவிட்ட பலே காதலி!

காதலை காட்டி கிட்னியை தானமாக வாங்கிய பின் காதலனை கழற்றிவிட்ட பலே காதலி!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
    காதலுக்கு கண் இல்லை என்பார்கள்... ஆனால் பாவம் இவருக்கோ காதலால் கிட்னி இல்லாமல் போய்விட்டது.   அமெரிக்கா எல்லைக்கு அருகே மெக்சிகோவில் நாட்டின் அமைந்துள்ள மாகாணம் பாஜா கலிபோர்னியா. இங்கு வசிக்கும் உசீல் மார்டினெஸ் என்பவர் இளம் பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். அவர் அந்த பெண்னை உயிருக்கு உயிராக காதலித்து உள்ளார். ஒருகட்டத்தில் தனது காதலியின் தாயாருக்கு கிட்னி தேவை என்பதை  அறிந்து தனது கிட்னியை  தானமாகக் கொடுத்துள்ளார். ஆனால் காதலி  கிட்னி ஆப்ரேஷன் முடிந்த சில வாரங்களில் காதலை  பிரேக் செய்து கொண்டுள்ளார்.மேலும், வேறு ஒருவரையும் உடனடியாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இதைப் பார்த்து உடைந்து போன உசீல் டிக்டாக்கில் புலம்பி வருகிறார். இது தொடர்பாக உசீல் மார்டினெஸ் தனது டிக்டாக் வீடியோவில், "எனது காதலிக்கு கிட்னி தேவைப்பட்டது. அவருக்குச் சரியான டோனர் ...
சானியா மிர்சா ஓய்வு பெறுவதாக அறிவிப்பு..!

சானியா மிர்சா ஓய்வு பெறுவதாக அறிவிப்பு..!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
  இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா 2003-ம் ஆண்டு முதல் இந்தியாவிற்காக விளையாடி வருகிறார். இதுவரை 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். 14-வது ஆஸ்திரேலியன் ஓப்பன் டென்னிஸ் போட்டிகளில் கலந்துகொண்டிருக்கும் சானியா மிர்சா 19 வருடங்களாக விளையாடி வருகிறார்.   இந்த நிலையில் ஆஸ்திரேலியன் ஓப்பன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் முதல் சுற்றில் கலந்துகொண்டார் சானியா மிர்சா. பெண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா - உக்ரைனின் நாடியா கிச்னோக் இணை ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி - ஸ்டோர்ம் சான்டெர்ஸ் ஜோடியுடன் மோதியது. இதில்  சானியா மிர்சா  ஜோடி தோல்வி அடைந்தது. இதை தொடர்ந்து சானியா மிர்சா டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். சானியா மிர்சா கூறும் போது  ‘இனி நான் விளையாடப்...