திங்கட்கிழமை, நவம்பர் 16
Shadow

HOME SLIDER

மாதவன் மாறா’ படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டது அமேசான் ப்ரைம்!

மாதவன் மாறா’ படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டது அமேசான் ப்ரைம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடிப்பில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான 'மாறா' படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டது அமேசான் ப்ரைம் வீடியோ* காதலும் நம்பிக்கையும் நிறைந்ததோர் உலகத்தினுள் நம்மை அழைத்துச்செல்லும் இத்திரைப்படமானது காண்போரின் முகத்தில் புன்னகையைப் பூக்கச்செய்து இதயங்களைக் கவரும். ட்ரைலர் : http://amzn.to/MaaraTrailer திலீப் குமார் இயக்கத்தில், ப்ரமோத் பில்ம்ஸின் ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஷ்ருதி நல்லப்பா ஆகியோர் தயாரித்த இத்திரைப்படமானது மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஶ்ரீநாத் ஆகியோரை முன்னணி கதாபாத்திரங்களில் கொண்டுள்ளது இந்தியா மற்றும் 200 நாடுகளில் உள்ள ப்ரைம் சந்தாதாரர்கள் 'மாறா' படத்தை அமேசான் ப்ரைம் வீடியோவில் ஜனவரி 8 முதல் தமிழில் காணலாம் அமேசான் ப்ரைம் புத்தம்புதிய திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை, அமேசான் ஒர...
பிற்பகல் 12.30 மணிக்கு ‘மாஸ்டர்’ ரிலீஸ் அப்டேட்!

பிற்பகல் 12.30 மணிக்கு ‘மாஸ்டர்’ ரிலீஸ் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பிற்பகல் 12.30 மணிக்கு ‘மாஸ்டர்’ ரிலீஸ் அப்டேட்! லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’. கடந்த ஏப்ரல் மாதமே இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இப்படத்தை ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும் படத்தை தியேட்டரில் தான் வெளியிடுவோம் என படக்குழு திட்டவட்டமாக கூறியது இப்படத்தை வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி தியேட்டரில் ரிலீஸ் செய்ய உள்ளனர். ஏற்கனவே படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திய படக்குழு, தற்போது அடுத்த அப்டேட்டுக்காக மாஸான வீடியோ ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. அந்த டுவிட்டில் “ஒலிக்கும் பேர் ஒன்று அரங்கமே அதிர வைக்கும்... தடுக்கும் காலம் தாண்டி அது பரவி நிற்கும்” பிரம்மாண்டமான ரிலீஸ் அப்டேட் நாளை பிற்பகல் 12.30 மணிக...
அரசியலில் கமல்ஹாசன் ஜீரோ – முதல்வர் பழனிசாமி விமர்சனம்

அரசியலில் கமல்ஹாசன் ஜீரோ – முதல்வர் பழனிசாமி விமர்சனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
அரசியலில் கமல்ஹாசன் ஜீரோ - முதல்வர் பழனிசாமி விமர்சனம் தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளும் பிரசாரத்தை தொடங்கிவிட்டன. இதனால், தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது. குறிப்பாக, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டார். அவர் பல்வேறு மாவட்டங்களில் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். மேலும், அவர் தொடர்ந்து ஆளும் அதிமுக அரசையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதனால், அதிமுக-வுக்கும் கமல்ஹாசனுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவையில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது மக்கள் நீதியம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அதிமுக அரசை விமர்சிப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ம...
தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்!

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில், 32 மாவட்டங்கள் இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெல்லை மாவட்டத்தை பிரித்து, தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதேபோல், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியும், வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டையும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டும் என மொத்தம் 5 மாவட்டங்கள் புதிதாக உதயமானது. புதிய மாவட்டங்களுக்கு மாவட்ட கலெக்டர்களும் நியமிக்கப்பட்டனர். இந்தநிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரித்து, புதிதாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. அதற்கான அரசாணை ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்....
கேரள சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான குதிரைவால்!

கேரள சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான குதிரைவால்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
    இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்துள்ள ‘குதிரைவால்’ திரைப்படம், கேரள சர்வதேச திரைப்பட விழாவிற்கு இந்தியப் பிரிவில் திரையிட தேர்வாகியுள்ளது. 2018-ஆம் ஆண்டு வெளியான 'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறினார், இயக்குநர் பா. ரஞ்சித். அப்படம் அவ்வருடத்தின் சிறந்தப் படமாக கொண்டாடப்பட்டு விருதுகளைக் குவித்தது. அதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு, 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தையும் தயாரித்தார். அப்படமும் வெற்றி பெற்றது. இந்நிலையில், கடந்த ஆண்டு தனது நீலம் புரடொக்‌ஷன் மூலம், மேலும் 5 படங்களை தயாரிப்பதாக அறிவித்தார். அதில், ஒன்றுதான் ’குதிரைவால்’. இப்படத்தை யாழி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். மனோஜ் லியோனல் ஜேசன் மற்றும் ஷாம் சுந்தர் ஆகியோர் இப்படத்தை இயக்க, கலையரசன் - அஞ்சலி பாட்டில் நடித்துள்ளனர். இப்படத்தின், டீசர் கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி ...
பொங்கல் பரிசு 2500 டோக்கன் வழங்குவதில் முறைகேடா – ஸ்டாலின் அறிக்கை

பொங்கல் பரிசு 2500 டோக்கன் வழங்குவதில் முறைகேடா – ஸ்டாலின் அறிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மக்கள் வரிப்பணத்தை - மக்களுக்கே திரும்ப வழங்கும் ரூ.2500 பொங்கல் பரிசு மற்றும் டோக்கன் வழங்கும் பணிகளில் முறைகேடுகளுக்கு இடமளிக்கக்கூடாது; அதிமுகவினர் மூலம் டோக்கன் வழங்குவதை உடனே நிறுத்த வேண்டும்” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை. “பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 2500 வழங்கப்படும்” என 19.12.2020 அன்று முதலமைச்சர் திரு. பழனிசாமி தனது தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தைத் துவங்கி வைத்த போது அறிவித்தார். அரசாணையில் “ஜனவரி 4-ஆம் தேதியிலிருந்து இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பேச்சு, செய்திக் குறிப்பு அரசாணையில் மேற்கோள் காட்டப்பட்டு - இந்தத் தேதி அறிவிக்கப்பட்டாலும் - இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் அடுத்தடுத்து குழப்பங்களைச் செய்து - தேர்தலை மனதில் வைத்து, இது ஏதோ அ.தி....
நாளை நீங்கள் கூட முதல்வர் ஆகலாம் – பிரச்சார கூட்டத்தில் எடப்பாடி

நாளை நீங்கள் கூட முதல்வர் ஆகலாம் – பிரச்சார கூட்டத்தில் எடப்பாடி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து அதிமுகவின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் இன்று தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- தமிழக வரலாற்றிலேயே 30 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை அமைத்தது அ.தி.மு.க. தான். மேடையில் அமர்ந்து இருப்பவர்கள் யாரும் தொழிலதிபர்கள் கிடையாது, சாமானியர்கள். எதிரிகள் கூட உச்சரிக்க கூடிய தலைவர்தான் எம்.ஜி.ஆர்.  எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கத்தை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களுக்கும் வாரிசு கிடையாது. அவர்களுக்கு நாம்தான் வாரிசு. அதிமுகவையும் ஆட்சியையும் விமர்சிப்பவர்கள் தங்கள் குடும்பத்திற்காக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். தொண்டர்கள் கூட முதல்வராக கூடிய ஒரே கட்சி அ.தி.ம...
முழு ஓய்வு மருத்துவர்கள் ரஜினிக்கு கட்டளை

முழு ஓய்வு மருத்துவர்கள் ரஜினிக்கு கட்டளை

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  முழு ஓய்வு மருத்துவர்கள் ரஜினிக்கு கட்டளை நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பில் இருந்த போது அங்கே பணியாற்றிய சிலருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரஜினி உடனடியாக படப்பிடிப்பில் இருந்து ஓட்டல் திரும்பினார். பின்னர் ரஜினிக்கு வைரஸ் சோதனை நடத்தப்பட்டது. இதற்கிடையில் திடீரென ரத்த அழுத்த பாதிப்பால் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ரஜினி அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்தின் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் அனைத்தும் வந்துவிட்டன என்றும் அவற்றில் கவலைப்படும்படி எதுவும் இல்லை என்றும் ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனை இன்று காலை வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இன்று மதியம் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதனை செய்து அதன் பின்னர் அவரை டிஸ்சார்ஜ் செய்தார்கள். அவருக்கு ரத்த அழுத்தம்...
தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக

தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அதிமுகவின் தேர்தல் பரப்புரை கூட்டம் சென்னையில் தொடங்கிய நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் ஒரே மேடையில் பங்கேற்றனர். ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுகவின் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். அமைச்சர்கள், அதிமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் என 94 இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளன....
திருவேலீஸ்வரர் ஆயத்தில் சனிப்பெயர்ச்சி விழா

திருவேலீஸ்வரர் ஆயத்தில் சனிப்பெயர்ச்சி விழா

HOME SLIDER, NEWS, செய்திகள்
    திருவேலீஸ்வரர் ஆயத்தில் சனிப்பெயர்ச்சி விழா நாமக்கல்  பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையார் திருவேலீஸ்வரர் கோயிலில் உள்ள சனீஸ்வரபகவானுக்கு சனிப்பெயர்ச்சி விழா, இன்று ஞாயிற்றுக் கிழமை அதிகாலையில் நடைபெற்றது. இந்த திருவேலீஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ சனீஸ்வரபகவான் தனி சன்னதிகொண்டு அனுக்கிரஹ மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சனிப்பெயர்ச்சி இரண்டரை ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறும். இன்று டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி காலை 5.22 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சியடைந்தார். இதையொட்டி,  இக்கோயிலில் ஸ்ரீ சனீஸ்வரபகவானுக்கு சிறப்பு யாகம், அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இந்த சனிப் பெயர்ச்சி பூஜை, ஆராதனைகளை ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமியை தரிசித்தனர்....