வெள்ளிக்கிழமை, நவம்பர் 13
Shadow

HOME SLIDER

என் தந்தை போல என்னால் நடிக்க முடியாது – கவுதம் கார்த்திக்

என் தந்தை போல என்னால் நடிக்க முடியாது – கவுதம் கார்த்திக்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  என் தந்தை போல என்னால் நடிக்க முடியாது - கவுதம் கார்த்திக் தேவராட்டம் படத்தில் கவுதம் கார்த்திக் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நெல்லையில் டிரைலர் வெளியான தியேட்டர்களுக்கு விசிட அடித்த பின் கூறியது: இதுபோல பல்வேறு கதைகளில் நடிக்க ஆசைப்படுகிறேன். எனது தந்தை (கார்த்திக்) மிகப்பெரிய நடிகர். அவரைப் போல் என்னால் நடிக்க முடியாது. முடிந்த அளவுக்கு அவரைபோல் நடிக்க முயற்சி செய்வேன். எனது தந்தை அரசியல் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் பிரசாரம் செய்தார். என்னை பொறுத்தவரை இப்போது அரசியலில் நுழையும் எண்ணம் இல்லை. நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கவே ஆசைப்படுகிறேன்....
தேர்தல் பிரசாரத்தில் சாதியை பயன்படுத்துகிறார் மோடி? – பிரியங்கா கடும் கண்டனம்

தேர்தல் பிரசாரத்தில் சாதியை பயன்படுத்துகிறார் மோடி? – பிரியங்கா கடும் கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதிக்குட்பட்ட முன்ஷிகஞ்ச் பகுதியில் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோரின் குறைகளை கேட்க விரும்பாத நிலையில் பா.ஜனதாவினர் உள்ளனர். வேலைவாய்ப்பு குறித்து இளைஞர்களுக்கு போலி வாக்குறுதி அளிக்கப்படுகிறது. உத்தரபிரதேசத்தில் பிரசாரத்தின்போது, பிரதமர் மோடி தனது சாதியை பயன்படுத்தி உள்ளார். அவர் என்ன சாதி என்று இப்போதுவரை எனக்கு தெரியாது. அதை தெரிந்து கொள்ளவும் நாங்கள் விரும்பவில்லை. எதிர்க்கட்சிகள், தேர்தல் பிரசாரத்தில் சாதியை பயன்படுத்தாமல், வளர்ச்சி பற்றியே பேசுகிறார்கள். தனிப்பட்ட விமர்சனம் செய்வது இல்லை. ஆனால், சாதி என்பது முக்கியமானது என்று நினைக்கும் அளவுக்கு பிரதமரை மாற்றியது எது? அந்த அளவுக்கு அவர் கீழிறங்கி விட்டார். அமேதி தொகுதியில் போட்டியிடும...
பா.ஜ.க.,வின் அத்துமீறல்களை மவுனமாக வேடிக்கை பார்க்கும்  தேர்தல் கமிஷன் –  ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

பா.ஜ.க.,வின் அத்துமீறல்களை மவுனமாக வேடிக்கை பார்க்கும் தேர்தல் கமிஷன் – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம் கூறியதாவது: தேர்தல் கமிஷன், நாட்டு மக்களை பெரிதும் ஏமாற்றி விட்டது. பா.ஜனதாவின் அத்துமீறல்கள், பிரதமர் மோடியின் உரைகள், பா.ஜனதாவால் செலவழிக்கப்படும் பெருமளவு பணம் ஆகியவற்றை தேர்தல் கமிஷன் மவுனமாக வேடிக்கை பார்க்கிறது. எதிர்க்கட்சி வேட்பாளர்களின் சிறு செலவுகள் என்று கூறப்படுவதை எல்லாம் அவர்களின் செலவுக்கணக்கில் சேர்க்கிறது. அதே அணுகுமுறையை மேற்கொண்டால், பா.ஜனதா வேட்பாளர்கள் அனைவரும் தகுதியிழப்புக்கு ஆளாக வேண்டி இருக்கும். பா.ஜனதா தனது தோல்வியை மறைக்க ‘தேசியவாதம்’ என்ற கோஷத்தை எழுப்பி வருகிறது. பா.ஜனதா ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இங்கு எல்லோரும் தேசவிரோதியாகவா இருந்தார்கள்? எல்லோரும் தேசபக் தர்கள்தான். எந்த தேசபக்தரையும் தேசவிரோதியாக கருத முடியாது. ஊடகங்களை கையில் போட்டுக்கொண்டு, இந்த பிரசாரத்தை பா.ஜனதா மேற்கொண்டு வருகிறது. ...
ஜோதிகா அண்ணி அக்காவாக நடிக்கும் கார்த்தி படம்..!

ஜோதிகா அண்ணி அக்காவாக நடிக்கும் கார்த்தி படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
வயாகம்18 ஸ்டூடியோஸ்' , 'பேரலல் மைண்ட்ஸ்' இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில்  கார்த்தி அக்காவாக ஜோதிகா நடிக்கும் புதிய படம் கோவாவில் ஆரம்பம். ஜீத்து ஜோசப் இயக்குகிறார். கார்த்தி அக்காவாக ஜோதிகா நடிக்கும் பெயரிடபடாத “கார்த்தி/ஜோதிகா” இப்படத்தின் முதல் பார்வை அதிகாரப்பூர்வமாக வெளியானவுடனே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்படத்தை மிகவும் புகழ்பெற்ற (த்ரிஷ்யம், பாபநாசம் புகழ்) இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்குகிறார். பேரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன் சூரஜ், ‘வயாகாம்18 ஸ்டூடியோஸ்’ உடன் இணைந்து தயாரிக்கிறார். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க, அவருடன் ஆன்சன் பால்  (ரெமோ, மாபெரும் வெற்றிபெற்ற ஆப்ரஹாமிண்டே சந்ததிகள் புகழ்) மற்றும் இன்னும் சிலரும் விரைவில் இணைவார்கள். கோவிந்த் வசந்த் (96 புகழ்) இசையமைக்க, ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நேற்று தொடங்கியது...
வரலாற்றில் முதல் முறையாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்து தந்தைக்கும் முஸ்லிம் தாய்க்கும் பிறந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ்..!

வரலாற்றில் முதல் முறையாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்து தந்தைக்கும் முஸ்லிம் தாய்க்கும் பிறந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ்..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  வரலாற்றில் முதல் முறையாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்து தந்தைக்கும் முஸ்லிம் தாய்க்கும் பிறந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ்..! ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் உள்ள சட்டத்திட்டங்களின்படி ஒரு முஸ்லிம் ஆண்மகன் பிறமதத்தை சேர்ந்த பெண்களை திருமணம் செய்துகொள்ள அனுமதி உண்டு. அதேவேளையில், ஒரு முஸ்லிம் பெண் பிறமதங்களை சேர்ந்த ஆண்களை திருமணம் செய்துகொள்ள அனுமதி கிடையாது இந்நிலையில், இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த கிரண் பாபு என்பவர் அதே மாநிலத்தை சேர்ந்த சனம் சாபூ சித்திக் என்ற முஸ்லிம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர், பிழைப்புக்காக ஐக்கிய அமீரக நாடுகளின் தலைநகரான அபுதாபி நகருக்கு தனது மனைவியுடன் வந்து இங்கு குடியேறினார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இங்குள்ள ஒரு மருத்துவமனையில் இந்த தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், முஸ்லிம் தாய்க்கு பிறந்த அந்த குழந்...
நடிகர் சங்கத்துக்கு விரைவில்  தேர்தல் – நாசர் அறிவிப்பு

நடிகர் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் – நாசர் அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  சென்னை தியாகராய நகரில் தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் இன்று காலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. செயற்குழு கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் நாசர், நடிகர் சங்க தேர்தல் தேதி சட்டரீதியாக அறிவிக்கப்படும் என கூறினார். நடிகர் சங்க துணை தலைவர் நடிகர் பொன்வண்ணன் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, இந்த கூட்டத்தில் தேர்தல் பற்றிய ஆலோசனையே முக்கிய விசயமாக இருந்தது. தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் மிகவிரைவில் நியமிக்கப்படுவார். தேர்தல் தேதியை அவர் அறிவிப்பார். நாளை முதல் தேர்தல் வேலைகள் நடைபெறும். இதேபோன்று நடிகர் சங்க கட்டிட வேலைகளை முடிக்க கடும் முயற்சிகள் செய்து வருகிறோம் என கூறினார்....
தமிழ் வீரன் வைகோவின் குரல் மீண்டும் பாராளுமன்றத்தில் ஒலிக்கும் – வைரமுத்து நெகிழ்ச்சி

தமிழ் வீரன் வைகோவின் குரல் மீண்டும் பாராளுமன்றத்தில் ஒலிக்கும் – வைரமுத்து நெகிழ்ச்சி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நாடாளுமன்றத்தில் விரைவில் தமிழ் வீரனின் குரல் ஓங்கி ஒலிக்கும்! வைகோவை சந்தித்தபின் வைரமுத்து பேட்டி மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களை, இன்று மாலை 6 மணி அளவில் அவரது அண்ணாநகர் இல்லத்தில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் சந்தித்த்து, 17ஆவது நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் 40 தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டதற்காக நன்றி தெரிவித்தார். அது வைகோ மகன்  துரை வையாபுரியும் உடன் இருந்தார். வைகோவை  சந்தித்து விட்டு வந்து செய்தியாளர்களிடம் கவிஞர் வைரமுத்து கூறியதாவது:- “திராவிட இயக்கத்தின் சிங்க முகத்தைப் பார்க்க வந்தேன்; போர்வாளை வாழ்த்த வந்தேன். அண்மைக் காலமாக நான் மகிழ்ச்சியில் இருக்கிறேன். தாய்க் கழகத்தோடு, கலைஞர் வளர்த்த பேரியக்கத்தோடு, தளபதியோடு புரட்சிப் புயல் வைகோ அவர்கள் தோழமையாக, நட்பாக, அன்பாக, குடும்பமாக இணைந்து கொள்கைக் கூட்டணியை வளர்த்தெடுக்கிறா...
சாந்தனு நடிக்கும் ‘இராவண கோட்டம்’

சாந்தனு நடிக்கும் ‘இராவண கோட்டம்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சாந்தனு நடிக்கும் 'இராவண கோட்டம்' மதயானை கூட்டம் படம் மூலம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குனர் விக்ரம் சுகுமாறன். கதிர், ஓவியா நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஜிவி பிரகாஷ் இப்படத்தை தயாரித்திருந்தார்.   https://twitter.com/imKBRshanthnu/status/1122166610695839746   தற்போது இயக்குனர் விக்ரம் சுகுமாறன் ஆறு ஆண்டுகள் கழித்து தனது அடுத்த படத்தை தொடங்கியுள்ளார். இந்த படத்திற்கு 'இராவண கோட்டம்' என்று வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நாயகனாக சாந்தனு நடிக்கவுள்ளார். கண்ணன் ரவி இப்படத்தை தயாரிக்க உள்ளார்  ...
வாக்கு எண்ணும் மையத்துக்குள் பெண் அதிகாரி நுழைந்த விவகாரம் – மதுரை கலெக்டர் அதிரடி மாற்றம்

வாக்கு எண்ணும் மையத்துக்குள் பெண் அதிகாரி நுழைந்த விவகாரம் – மதுரை கலெக்டர் அதிரடி மாற்றம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  வாக்கு எண்ணும் மையத்துக்குள் பெண் அதிகாரி நுழைந்த விவகாரம் தொடர்பாக வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை முடிவில் மதுரை கலெக்டர் உட்பட தொடர்புடைய அதிகாரிகளை இடமாற்றம் செய்து நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது உள்ளது. இது தொடர்பாக நீதிபதிகள் நேற்றிரவு 7 மணியளவில் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:- மதுரை மாவட்ட கலெக்டர் நடராஜன், மேற்கு மதுரை சட்டசபை தொகுதி தேர்தல் அதிகாரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர், போலீஸ் உதவி கமிஷனர் (குற்றப்பிரிவு) மோகன்தாஸ் ஆகியோர் தாசில்தார் சம்பூரணம், மாநகராட்சி ஊழியர்கள் சூர்யபிரகாசம், ராஜபிரகாஷ், சிவராமன் ஆகியோரை மின்னணு வாக்கு எந்திரங்கள் உள்ள மையத்துக்குள் அனுமதிக்க காரணமாக இருந்துள்ளனர். இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த அதிகாரிகளை எல்லாம் கூண்டோடு இடமாற்றம் செய்ய வேண்டும். இவர்கள் மீது...