தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் , பொருளாளர் எஸ்.ஆர் பிரபு மற்றும் நிர்வாகிகள் ஜி.எஸ்.டி தொடர்பாகவும் , சினிமா துறை சார்ந்த பிரச்சனைகள் தொடர்பாகவும் செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
தியேட்டர்களில் இனி படம் ரீலீஸ் இல்லை - விமர்சகர் ராமானுஜம்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவியிலிருந்து ராமநாராயனன் ராஜினாமா செய்த பின் தமிழக அரசிடம் நேரடியாக தொடர்பு கொள்ளும் ஆற்றல் வாய்ந்த தலைமை இல்லாமல் போனது. சங்கத்தில் கோஷ்டி பூசல் அதிகமானது. இதனால் தயாரிப்பாளர்கள் நலனுக்கான எந்த செயல் திட்டமும் நிறைவேற்ற முடியாத நிலையை கூறிவிஷால் தலைமையிலான அணி தேர்தலில் வெற்றி பெற்று தலைமையை கைப்பற்றியது.
ராமநாராயாணன் ராஜினாமாவுக்கு பின் தமிழ் திரைப்பட துறையில் தயாரிப்பு, பட வெளியீடு, விநியோக துறையில் பைனான்ஸ் கொடுப்பவர்களின் ஆதிக்கம் தலை தூக்கிப்து. தேர்ந்தெடுக்கப்பட்ட சினிமா அமைப்புகளின் முடிவுகள் செல்லாக்காசானது. தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் சிலரை ஒருங்கிணைத்து தமிழ் சினிமா வர்த்தக சபை என்கிற அமைப்பை பைனான்ஸ் தரப்பு தொடங்கி...
கேரளாவின் அடர்ந்த காட்டுக்குள் உருவாகும் ‘சூறாவளி’..!
மலையாள இயக்குனர்கள் பலருக்கும் தமிழில் படம் இயக்க வேண்டும் என்கிற ஆர்வம் நிறையவே உண்டு.. இதற்கு முன் பலர் அப்படி வந்து தங்களது திறமையை நிரூபித்துள்ளார்கள்.. அந்தவகையில் மலையாள திரையுலகில் இருந்து புதிய வரவாக தமிழுக்கு வந்திருப்பவர் தான் இயக்குனர் குமார் நந்தா.
மலையாளத்தில் ‘கொட்டாரத்தில் குட்டி பூதம்’, ‘முள்ளசேரி மாதவன் குட்டி நேமம் P.O’ ஆகிய படங்களை இயக்கியுள்ள இவர் மலையாள டிவி சீரியல்களில் பிரபல நடிகையான 'பிரஜூஷா (Prajusha)' கதையின் நாயகியாக நடிக்கும் ‘அகதி’ எனும் தமிழ் படத்தையும் இயக்கி முடித்துள்ளார். இந்தப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது..
இதை தொடர்ந்து அடுத்ததாக ‘சூறாவளி’ என்கிற படத்தை இயக்கவுள்ளார் குமார் நந்தா. கோல்டன் விங்ஸ் நிறுவனம் சார்பாக ஷ்யாம் மோகன் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு V.S. சஜி ஒளிப்பதிவு செய்ய...
சென்னையில் கலாஷேத்ரா பவுன்டேசன் பிரதான நுழைவு வாயிலின் எதிரே அமைந்துள்ள மைதானத்தில் மான்யா ஹஸ்தகலாவின் கைவினைப் பொருட்களின் கண்காட்சியை பிரபல நடிகை சாக்ஷி அகர்வால் இன்று தொடங்கி வைத்தார்.
இந்த கண்காட்சியின் சிறப்பு அம்சங்கள் குறித்து இதனை தொடங்கி வைத்த நடிகை சாக்ஷி அகர்வால் பேசும் போது,‘ இந்த கண்காட்சியில் இந்தியாவிலிருந்து பத்தொன்பது மாநிலங்களில் உள்ள கைவினை கலைஞர்களின் படைப்புகள் இடம்பெற்றிருக்கிறது. பாரம்பரியம் மாறாமல் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டகலம்காரி புடவைகள், ஆர்கானிக் மற்றும் இயற்கையான வண்ணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கைவினைப் பொருட்கள், வீட்டின் உள் அலங்காரத்திற்கான பொருட்கள், வரவேற்பறையில் வைக்கக்கூடிய கண்கவர் கலைப்பொருட்கள் என அனைத்து வகையான பொருட்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருக்கின்றன. இது ஒரு வித்தியாசமான கண்காட்சியாக நிச்சயமாக இருக்கும். ’ என்றார்.
இந்த கண்காட்சி...
இந்த உலகை முழுக்க நல்லதாகவே மாற்ற முடியாது. அதேபோல் உலகை முழுக்கவே கெட்டதாகவும் மாற்ற முடியாது என்ற மெசேஜோடு உருவாகி வெளிவரவிருக்கும் படம் திரிபுரம். இந்த படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளரும் ஆகிய வேதமணியிடம் படம் குறித்து கேட்டோம்.
’ஹாரர் த்ரில்லர் சின்ன மெசேஜுடன் படத்தை எடுத்திருக்கிறோம். கர்மவினை என்பது நம் எண்ணங்களையும் செயல்பாடுகளையும் பொறுத்தே அமைகிறது. நகரத்தில் வாழும் ஒரு வாலிபனின் வாழ்க்கையில் விதி நடத்தும் விளையாட்டுகள் தான் படத்தின் கதை. நான் 20 ஆண்டுகளாக திரைத்துறையில் தான் இருக்கிறேன். நான் டிவி சீரியல்களிலும் சில படங்களிலும் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கிறேன். கடும் போராட்டத்துக்கு பிறகு நானே தயாரித்திருக்கிறேன்.
பின்னணி இசை கோர்ப்பு பணி நடக்கிறது. அடுத்த மாதத்தில் படம் ரிலீஸ் ஆகும். விரைவில் இசை வெளியீடு நடக்கும்’ என்றார்.
ஹீரோ - அன்பு மயில்சாமி ( மயி...
ஆர். கண்ணன் இயக்கத்தில் கெளதம் கார்த்திக், ஷ்ரதா ஸ்ரீநாத், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘இவன் தந்திரன்’. விமர்சன ரீதியாக இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனிடையே ஜிஎஸ்டி வரி போக, தமிழக அரசு நகராட்சி வரியும் சேர்த்திருப்பதால் தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் திங்கட்கிழமை முதல் அனைத்து காட்சிகளையும் ரத்து செய்துள்ளது. இதனால் இயக்குநர் கண்ணன் கடும் அதிர்ச்சியடைந்தார்.இது தொடர்பாக இயக்குநர் கண்ணன் பேசிய ஆடியோ பதிவு ஒன்று வெளியிட்டார். அந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் இயக்குனர் ஆர். கண்ணன் கூறியிருப்பது இதுதான்:
அனைவருக்கும் வணக்கம். நான் டைரக்டர் ஆர்.கண்ணன் பேசுறேன். ‘இவன் தந்திரன்’ படத்தின் இயக்குனர். இப்ப படம் ரிலீஸ் ஆகி, சக்சஸ் புல்லா போயிட்டிருக்கு. அதுக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. ஒரு இயக்குனரா என் சகோதரர் பிரி...
தமிழ் திரையுலகில் ஒவ்வொரு சங்கத்திலும் ஏதாவது ஒரு சிக்கல் இருந்து கொண்டே இருக்கும்.
இந்த விவகாரம் கொஞ்சம் வித்தியாசமானது...
தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கம் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருந்த நிலையில் சங்கத்தின் பெயர் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் அதே பெயரை பரமகுடியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் விண்ணப்பித்து பெற்றார்.
இதன் காரணமாக ஏற்கனவே இயக்குனர் விக்ரமன் தலைவராகவும், R.K.செல்வமணி செயலாளராக இருந்த இயக்குனர் சங்கம் செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இது தொடர்பாக வழக்கு ஒன்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் சினிமா தொழிலாளர் சம்மேளனமான பெப்சி அமைப்பின் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
ரத்தான இயக்குனர் சங்கத்தின் சார்பில் பெப்சி தலைவர் பதவிக்கு R.K.செல்வமணி போட்டியிட்டார். அப்போது அந்த வேட்புமனுவை ஏற்க கூடாது ரத்து செய்யப்பட்ட சங்கத்தில் ...
ஐமாவதி சாம்பமூர்த்தி வழங்கும் வி.வி.எஸ். கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக என்.சாய்ராம் தயாரிக்கும் படத்திற்கு "மகேந்திரா" என்று பெயரிட்டுள்ளனர்.
இந்தப்படத்தில் மாநகரம் வெற்றிப் பட ஜோடியான சந்தீப் கிஷன் - ரெஜினா மீண்டும் இனையும் படம் இது.
மற்றும் ஜெகபதிபாபு, காவேரி, தணிகலபரணி, ரவிபாபு ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்தப்படம் தெலுங்கில் ரா ரா கிருஷ்ணய்யா என்ற பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது..அதையே மகேந்திரா என்ற பெயரில் மொழிமாற்றம் செய்திருக்கின்றார்கள்.
தீயவர்கள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த ஒருவன் சிறுவனாக இருந்த போதே நல்லவனாக வாழ்கிறான். தங்கள் வழிக்கு அவனைக் கொண்டு வர அவர்கள் முயற்சிக்க , அவர்களை தன் வழிக்கு கொண்டு வர அவன் முயற்சிக்கிறான் இதில் யார் ஜெயித்தார்கள் என்பது தான் கதை. இதை கமர்ஷியல் படமாக உருவாக்கி உள்ளார் இயக்குனர். காதல் காமெடி என பக்கா கமர்ஷியலாக மகேந்...