HOME SLIDER
கதிர்-சிருஷ்டி டாங்கே ஜோடியின் ரொமான்ஸ் ஆக்ஷன் “சத்ரு” மார்ச் 1ம் தேதி ரிலீஸ்!
ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம்,ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் “ சத்ரு “
இந்த படத்தின் கதாநாயகனாக கதிர் நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா,மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன் ராம்,ரகுநாத், கீயன், சாது,குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
ராட்டினம் படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தின் வில்லனாக நடிக்கிறார்.
ஒளிப்பதிவு - மகேஷ் முத்துசாமி
இசை - அம்ரிஷ்
பாடல்கள் - கபிலன்,மதன்கார்க்கி, சொற்கோ
எடிட்டிங் - பிரசன்னா.ஜி.கே
கலை - &nb...
மவுனம் கலைக்கும் பாடகி சின்மயி… வீடியோ பேட்டி பாகம் 3
https://youtu.be/4reCtJIyhEQ
மனம் திறக்கும் சின்மயி!
டப்பிங் யூனியன் ஊழலை போட்டு உடைக்கும் தாசரதி!! - பாகம் 3- #chinmayiInterview
https://youtu.be/4reCtJIyhEQ
“கிண்டில் கிட்ஸ்” பாடதிட்டத்தை தொடங்கி வைத்த வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ்..!
வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும் வேல்ஸ் கல்விக் குழுமநிறுவனருமான டாக்டர்ஐசரி .கே.கணேஷ் கிண்டில்கிட்ஸ் (Kindle Kids International curriculum)பாடத்திட்டத்தை ஈஞ்சம்பாக்கம் வேல்ஸ் சர்வதேசப்பள்ளியில் தொடங்கி வைத்தார். Hindu In-School நாளிதழ் ஆசிரியர் கிருத்திகாரெட்டி தலைமை விருந்தினராகவும் டாக்டர் ஆண்டோனியோஸ்ரகுபான்ஸே, (தலைவர்பிரிட்டிஷ்கவுன்சில்கல்விப்பணி) அவர்களும் சிறப்பு விருந்தினராய் வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இச்சர்வதேச ப்பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீரியபணியாற்றிய சிரிய பெருமக்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. உலகளாவிய பாலர் மற்றும்தொடக்கப் பள்ளிகளில் உள்ளசி.பி.எஸ்.இ(CBSE), ஐ.சி.எஸ்.ஈ (ICSE)ஐ.பி (IB) போன்ற பல்வேறுபாடதிட்டத்தை பயன்படுத்துவோரும் பின்பற்றும்வகையில் ஒரு முழுமையான பாடத்திட்டமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியா...
பூமரங் டீம் மீண்டும் இணைகிறது..!
பூமராங் என்ற ஆயுதம் எங்கிருந்து போனதோ அதே இடத்துக்கு திரும்ப வருவதில் பிரசித்தி பெற்றது. அது 'பூமராங்' என தலைப்பிடப்பட்ட படத்துக்கும் மிகவும் பொருத்தமானது. ஆம், மார்ச் 1ஆம் தேதி வெளியாகும் "பூமராங்" படத்திற்கு பிறகு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான கண்ணன், நடிகர் அதர்வாவுடன் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார். "தயாரிப்பு எண் 3" என்ற தலைப்பில் துவங்கப்படும் இந்த படத்தை இயக்குனர் கண்ணன் தன் மசலா பிக்ஸ் சார்பில் தயாரிக்கிறார்.
இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இயக்குனர் கண்ணன் கூறுகையில், "ஆம், நாங்கள் 'பூமராங்கிற்கு' பிறகு மீண்டும் இணைவதில் உற்சாகமடைகிறோம். 'பூமராங்' மிகச்சிறப்பாக உருவாகி இருப்பதில் நாங்கள் இருவரும் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். எங்கள் படத்தின் உரிமையை trident ஆர்ட்ஸ் ரவி அவர்கள் பெற்று இருப்பதை பெருமையாக கருதிகிறோம். மேலும், பூமராங் முடியும் முன்பாகவே ...
சிவகார்த்திகேயன்-நயன்தாரா Mr.லோக்கல் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!
'மிஸ்டர் லோக்கல்' படத்தின் உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் மிஸ்டர்.லோக்கல்’. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். காதல் கலந்த காமெடி படமாக உருவாகும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே,இ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹிப் ஹாப்’ தமிழா ஆதி இசையமைக்கிறார். இந்த நிலையில், படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை சக்தி பிலிம் பேக்டரி கைப்பற்றியிருக்கிறதுஇதனை அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்டருடன் பதிவு செய்துள்ளது.
https://twitter.com/SF2_official/status/1094196651936239616?s=19
சமீபத்திய ரிலீஸ் படமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ச...
சிவகார்த்திகேயன் படக்குழுவுக்கு பரிசு கொடுத்த நயன்தாரா..!
வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - நயன்தாரா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதி இசையமைக்கிறார். சென்னையின் பல்வேறு இடங்கள் மற்றும் சில வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. கடந்த புதன்கிழமையுடன் நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிவடைந்தது. கடைசி நாளில் படக்குழுவினர் அனைவருக்கும் வாட்ச் பரிசளித்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் நயன்தாரா. அவரது நடிப்பில் ‘ஐரா’, ‘கொலையுதிர் காலம்’ ஆகிய இரண்டு படங்களும் ரிலீசுக்குத் தயாராகி வருகின்றன. தற்போது விஜய் ஜோடியாக ‘தளபதி 63’ படத்தில் நடித்து வருகிறார்....
வர்மா படத்திலிருந்து விலகியது ஏன்? – இயக்குனர் பாலா விளக்கம்
தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தை ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளனர். பாலா இயக்க விக்ரம் மகன் துருவ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தை கைவிடுவதாக படத் தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் அறிவித்துள்ளது.
இதுகுறித்து டுவிட்டரில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இ4 என்டர்டெயின்மெண்ட் அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் வர்மா என்ற தலைப்பில் தயாரித்துள்ளது. தயாரிப்பு நிறுவனத்திடம் கொடுக்கப்பட்ட படத்தின் இறுதி வடிவம் எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. படத்தின் உருவாக்கத்தில் பல்வேறு வேறுபாடுகள் இருப்பதால், படத்தை கைவிட முடிவு செய்துள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தயாரிப்பாளர் தரப்பிலிருந்து...



