செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

“பாக்சர்” ஆகும் நடிகர் அருண்விஜய்..!

“பாக்சர்” ஆகும் நடிகர் அருண்விஜய்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் அருண் விஜய் தனது முயற்சிகளை ஒருபோதும் கைவிட்டதில்லை. தனது எனர்ஜியால் எப்போதும் மிகச்சிறந்த கதாபாத்திரங்களை செய்ய தயாராக இருப்பவர். அவர் தனது படமான 'பாக்ஸர்' படத்தில் நடிக்க முழுமையாக ஊக்கத்தோடு இருக்கிறார். அவரது அனைத்து திறன்களையும் வெளிக்கொணரும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார். குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தை எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார். இந்த படத்தை பற்றி அருண் விஜய் கூறும்போது, "இந்த படத்தின்  தொடக்கத்தில் இருந்தே எல்லாமே என்னை கவர்ந்தது. இந்த படத்தின் அறிவுப்பு கூட எனக்கு ஆச்சர்யம் அளித்தது. ஆரம்பத்தில் ஜனவரி 2019 வாக்கில் திட்டமிட்டிருந்தோம். ஆனால், தயாரிப்பாளர் வி. மதியழகன் சார் எனக்கு பிறந்த நாள் பரிசாக முன்னதாகவே என் பிறந்த நாளில் படத்தை அறிவித்து என்னை  ஆச்சர்யப்படுத்தினார். எனக்கு விளையாட்டை ம...
சீதக்காதி அய்யா மெழுகு சிலையை திறந்தார்  இயக்குனர் மகேந்திரன்..!

சீதக்காதி அய்யா மெழுகு சிலையை திறந்தார் இயக்குனர் மகேந்திரன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
பேஸ்ஸன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணீதரன் இயக்கியிருக்கும் படம் சீதக்காதி. 75 வயது நாடக கலைஞராக அய்யா ஆதிமூலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. இந்த அய்யா கதாபாத்திரத்தின் பிரத்யேக மெழுகுச்சிலை சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் திறந்து வைக்கப்பட்டது. விழாவில் இயக்குனர் மகேந்திரன் கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார். இந்த அய்யா மெழுகுச்சிலையுடன் நின்று செல்ஃபி எடுத்து அனுப்பும் 100 பேருக்கு சீதக்காதி படத்தில் பிரீமியர் டிக்கெட்டுக்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அய்யா ஆதிமூலம் 75 வயதுடைய நாடக நடிகர். சமகாலத்திய மொத்த நாடக நடிகர்களின் ஒரு உருவம் தான் ஆதிமூலம். தனி மனிதர்களுக்கு மெழுகுச்சிலை வைப்பதை தான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் நாம் எழுதி, உருவாக்கிய ஒரு கதாபாத்திரத்திற்கு மெழுகுச்சிலை வைப்பது இது தான் முதல் முறை. 2...
தமிழ் படத்தில்  ஆபாச பட நாயகி மியா ராய்!

தமிழ் படத்தில் ஆபாச பட நாயகி மியா ராய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
விமல் -  ஆஷ்னா ஜவேரி, ஆனந்தராஜ் ,மன்சூரலிகான், சிங்கம்புலி நடிக்க AR முகேஷ் இயக்கத்தில் சர்மிளா மாண்ட்ரே தயாரிப்பில் உருவாகியுள்ள படம் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு ..   இந்த படத்தில் சன்னி லியோனின் உறவு முறை சகோதரி மியா ராய் லியோன் முக்கிய வேடத்தில் முதன் முறையாக அறிமுகமாகிறார். ஐரோப்பிய பட உலகில் ஆபாச பட நாயகிகளில் முதல் பெயர் இவரது பெயர்   தான். இவரை தமிழில் அறிமுகப் படுத்தி உள்ளனர். கவர்ச்சியை வாரி வழங்கி உள்ளார் மியா ராய் லியோன். படம் டிசம்பர் 7 ம் தேதி வெளியாகிறது. போலிஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார். ஆபாச பட நாயகி என்றெ விளம்பர படுத்தி தமிழ் சினிமாவை படுத்தி எடுக்கிறார்களோ......
ஆரி – ஐஸ்வர்யா தத்தாவின் “காதல் VS காதல்”

ஆரி – ஐஸ்வர்யா தத்தாவின் “காதல் VS காதல்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  காதல் vs காதல் ஆரி - ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் புதிய படம்.! ஆரி மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று காலை சென்னை முகபேரிலுள்ள ஸ்ரீ லக்ஷ்மி சாய் பாபா கோவிலில் பூஜையுடன் துவங்கியது.படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் சென்னையில் நடைபெறுகிறது. இந்த படத்தின் இரண்டு பாடல் காட்சிகள் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். காதல் கதை அம்சம் கொண்ட படங்களுக்கு என்றுமே ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு உண்டு. 60'களில் மதம் காதலுக்கு தடையாக இருந்தது .80'களில் ஜாதி தடையாக இருந்தது.2000-த்தில் அந்தஸ்து காதலுக்கு தடையாக இருந்தது. இன்று காதலே காதலுக்கு தடையாக உள்ளது.இதை பிரதிபலிக்கும் விதமாக எல்லா தரப்பினரையும் கவரும் கதை களம் தான் இப்படம். இந்த படத்தில் கடந்து போன காதலையும் பார்க்கலாம் இன்று நடந்து கொண்டிருக்கும் காதலையும் பார்க்கலாம். உங்க காதலை பார்க்க தயாராகுங்கள...
நாசர் மகனின் பிறந்த நாளில் சர்ப்ரைஸ் விசிட் அடித்து கேக் வெட்டி கொண்டாட்டத்தில் கலந்த விஜய்..!

நாசர் மகனின் பிறந்த நாளில் சர்ப்ரைஸ் விசிட் அடித்து கேக் வெட்டி கொண்டாட்டத்தில் கலந்த விஜய்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  விபத்தில் சிக்கி சிகிச்சை எடுத்துவரும் நடிகர் நாசரின் மகன் பிறந்தநாளை நடிகர் விஜய் கேக் வெட்டி கொண்டியுள்ளார். நடிகர் விஜய் -க்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல தரப்பினரும் ரசிகர்களாக இருக்கின்றனர். பொதுமக்கள் மட்டுமில்லாமல், பல பிரபலங்களும், அவர்களின் குடும்பத்தினரும் விஜய்யின் தீவிர ரசிகர்களாக உள்ளனர். அதனாலோ என்னவோ விஜய் தன் ரசிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் தருபவராக இருந்து வருகிறார். அந்த வகையில் நடிகர் நாசரின் மகன் ஃபைசல் தீவிர விஜய் ரசிகர். சில வருடங்களுக்கு முன்பு கார் விபத்தில் சிக்கிய ஃபைசல், கடந்த நான்காண்டுகளாக வீட்டிலிருந்து சிகிச்சை எடுத்து வருகிறார். தனது பிறந்த நாளுக்கு விஜய் வந்தால் நன்றாக இருக்கும் என்பது ஃபைசலின் நீண்ட நாள் கனவாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஃபைசலின் இந்த கனவு நினைவாகியிருக்கிறது. ஃபைசலின் பிறந்தநாளான நேற்று நாசர் வீட்டுக்கு ...
தமிழக அரசால் மட்டும் தமிழ் ராக்கர்சை ஒழிக்க முடியாது; அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழக அரசால் மட்டும் தமிழ் ராக்கர்சை ஒழிக்க முடியாது; அமைச்சர் கடம்பூர் ராஜூ

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளிவந்துள்ளது.  இப்படத்தை தமிழ் ராக்கர்சில் வெளியிடுவோம் என மிரட்டல் வந்தது.  இதனால் இணையதளங்களில் வெளியிட தடைக்கோரி தயாரிப்பு நிறுவனம் லைகா கேட்டுக்கொண்டது. தமிழ் ராக்கர்ஸ் உள்பட 2 ஆயிரம் இணையதள முகவரிகளை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து லைகா நிறுவனம் கோரிக்கையை விடுத்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் 2.0 படத்தை தமிழ் ராக்கர்ஸ் உட்பட 12,567 இணையதளங்களில் வெளியிட தடைவிதித்து உத்தரவிட்டது. 3டி தொழில் நுட்பத்தில் படம் தயாரான நிலையில் அதனை திரையில் பார்க்க வசதியாக பல்வேறு திரையரங்குகளில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.  எனினும், கடந்த 29ந்தேதி படம் வெளியான சில மணிநேரங்களில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.  இது தமிழ் திரையுலகில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ...
தொழில் அதிபர் ஆக வழி காட்டும் செட்டிநாடு புட்ஸ்..!

தொழில் அதிபர் ஆக வழி காட்டும் செட்டிநாடு புட்ஸ்..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
உயர்ந்த தயாரிப்பாக இருக்க வேண்டும், தரமானதாகவும், பாரம்பரியம் மாறாத சுவையுடன் திகழ வேண்டும் என்பதுதான் உணவு பொருட்களை வாங்கும் மக்களின் எண்ணமாகும். இதை முழுமையாக பூர்த்தி செய்கிறது செட்டிநாடு புட்ஸ் நிறுவனம். ஆரோக்கியமான உணவு என்றால் அனைவருக்கும் நிம்மதி பிறந்த உணர்வுதான். எப்போதும் பாரம்பரியம் மாறாத சுவையுடன் உணவுப் பொருட்களை தயாரித்து முதலிடம் வகிக்கின்றனர் செட்டிநாடு புட்ஸ் நிறுவனத்தினர். இவர்களின் தயாரிப்புகள் அனைத்தும் மக்களின் மனம் கவர்ந்தவை. ரெடி மிக்ஸ்சில் புளியோதரை பேஸ்ட், வத்தல் குழம்பு, செட்டிநாடு காரக்குழம்பு ஆகியவை மிகவும் பிரபலமானவை. அதுமட்டுமா! பொடி வகைகளில் இட்லி மிளகாய் பொடி, இட்லி பூண்டு பொடி, பருப்பு பொடி, கறிவேப்பிலை பொடி, பூண்டு அரிசி பொடியும் மிகவும் சிறந்த இடம் பிடித்தவை. இவர்களின் தயாரிப்புகள் அனைத்து வீட்டுச்சுவையுடன் தயாரிக்கப்படுகிறது. முக்கியமாக செட்...
குழந்தை திருமணத்திற்கு ஆதரவாக பேசிய பா.ஜ.க. –  தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

குழந்தை திருமணத்திற்கு ஆதரவாக பேசிய பா.ஜ.க. – தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ராஜஸ்தான் சட்டசபைக்கான தேர்தல் வருகிற டிசம்பர் 7ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசார பணிகளில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.  இந்த நிலையில், சோஜத் சட்டசபை தொகுதியின் பெண் வேட்பாளராக போட்டியிடும் பா.ஜ.க.வின் சோபா சவுகான் என்பவர் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். அவர் பேசும்பொழுது, குழந்தை திருமணம் நடைபெற தடையாக இருக்கமாட்டேன் என கூறினார்.  தடை செய்யப்பட்ட குழந்தை திருமணம் ராஜஸ்தானில் சில இடங்களில் இன்னும் தொடர்கதையாக நடந்து வருகிறது. இந்த நிலையில் சவுகானுக்கு இந்த விவகாரத்தில் விளக்கம் கேட்டு தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பி உள்ளார் ஆட்சி அதிகாரத்திற்காக மதத்தின் பெயராலும், சடங்கு சம்பிரதாயங்களின் பெயராலும் பல பொய் வாக்குறுதிகளை கொடுப்பது பாஜகவுக்கு ஒன்றும் புதிதில்லை. மத்தியில் ஆட்சியை பிடிப்பதற்காக நாட்டு மக்களுக்கு பல பொய்களை சொல்லி ஆட்சியை பிடித்துக்...
ரூ.10 லட்சம் செலவில் சமூக சேவகருக்கு வீடு கட்டி தரும் லாரன்ஸ்

ரூ.10 லட்சம் செலவில் சமூக சேவகருக்கு வீடு கட்டி தரும் லாரன்ஸ்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கஜா புயலால் வீடு இழந்தவர்களில் 50 பேருக்கு தனது சொந்த செலவில் வீடு கட்டித்தரப்போவதாக அறிவித்தார். அதற்கான பயனாளிகளை தேர்வு செய்யும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். முதல் கட்டமாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களை வைத்து ஒரு வயதான பெண்மணிக்கும், சமூக சேவகர் ஆலங்குடி கணேசனுக்கும் வீடு கட்டி தர இருக்கிறார். ஆலங்குடி கணேசனுக்கு 10 லட்ச ரூபாய் செலவில் லாரன்ஸ் கட்டித்தரும் வீட்டுக்கான பூமி பூஜை  நடைபெற்றது. இதுகுறித்து ராகவா லாரன்ஸ் கூறியதாவது:- ஏழையின் இதயத்தில் இரக்கம் அதிகமாக இருக்கும் என்பார்கள். வாழ்ந்தாலும் உள்ளத்தால் உயர்ந்த இடத்தை எட்டிப் பிடித்தவர் ஆலங்குடி 515 கணேசன். அனாதையாக பிறந்தவர் யாரும் இல்லை. ஆனால் யாரும் அனாதையாக இறக்கக் கூடாது என்கிற உயர்ந்த சிந்தனையால் ஏறக்குறைய 500 அனாதை சடலங்களை அந்தந்த மத முறைப்படி ஈமக்கிரியை செய்...
ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் திருமணம்

ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் திருமணம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் திருமணம் ஜோத்பூர் அரண்மனையில் நேற்று கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. அவர்கள் இந்து முறைப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் திருமணம் செய்து கொள்கின்றனர். பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை சென்று புகழ்பெற்ற பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா, தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனசை காதலித்து வந்தார். பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரையுலகில் மிகுந்த பரபரப்பாக பேசப்பட்ட இந்த ஜோடிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பிரியங்கா சோப்ரா இந்து மதத்தையும், நிக் ஜோனஸ் கிறிஸ்தவ மதத்தையும் பின்பற்றுபவர் என்பதால் இரண்டு முறையிலும் திருமணம் செய்ய அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் அரண்மனையில் டிசம்பர் 1 (நேற்று) மற்றும் 2-ந்தேதிகளில் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று ஜோத்பூரில் உ...