செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

கணவரை அடித்ததை வீடியோ எடுத்து வெளியிட்ட அனிதா ஹசானந்தனி!

கணவரை அடித்ததை வீடியோ எடுத்து வெளியிட்ட அனிதா ஹசானந்தனி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
கணவரை அடித்ததை வீடியோ எடுத்து வெளியிட்ட அனிதா ஹசானந்தனி! தமிழில் வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் அறிமுகமானவர் அனிதா ஹசானந்தனி. விக்ரம் நடித்த சாமுராய், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சுக்ரன், மகாராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ஐஸ்வர்யாராயின் தால் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தெலுங்கு, இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். கடந்த 2013-ம் ஆண்டு, ரோகித் ரெட்டி என்பவரை அனிதா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆரவ் ரெட்டி என்று பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில், நடிகை அனிதா, ‘அனைத்து மனைவிகளும் விரும்பும் ஒரு மேஜிக்’ என்று கூறி தனது கணவரை கன்னத்தில் அறைவதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார். தயவு செய்து இதை வீட்டில் செய்து பார்...
செருப்படி கேள்விக்கு தன் ஸ்டைலில் பதிலளித்த பார்த்திபன்!

செருப்படி கேள்விக்கு தன் ஸ்டைலில் பதிலளித்த பார்த்திபன்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
செருப்படி கேள்விக்கு தன் ஸ்டைலில் பதிலளித்த பார்த்திபன்! தமிழகம் முழுவதும் கொரோனா 2-வது அலை பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகிறார்கள். கொரோனா பரவலை தடுக்க அரசு 2 வாரங்கள் ஊரடங்கு பிறப்பித்தும் அடங்கவில்லை. இதையடுத்து இன்று முதல் தளர்வுகள் இல்லாத ஊரடங்கை அறிவித்து உள்ளது. இந்த ஊரடங்கில் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும் என்று பிரபலங்கள் வற்புறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் தனது சமூக வலைதள பக்கத்தில் ‘நாளை சிரிக்க, சிறக்க இன்று உள்ளிருப்போம் உறவே' என்ற விழிப்புணர்வு பதிவை வெளியிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்து ரசிகர் ஒருவர் வெளியிட்ட பதிவில், “உள்ளிருந்தா உணவு யாரு தருவாங்க'' என்று கேள்வி எழுப்பினார். இது வலைத்தளத்தில் பரபரப்பானது. இதையடுத்து அந்த ரசிகருக்கு பதில் அளித்து பார்த்திபன் மீண்டும் வெளியிட்டுள்ள பதிவில், “சரி...
தமிழகம் முழுவதும் 4,380 வாகனங்களில் காய்கறிகள் விற்பனை- தமிழக அரசு ஏற்பாடு!

தமிழகம் முழுவதும் 4,380 வாகனங்களில் காய்கறிகள் விற்பனை- தமிழக அரசு ஏற்பாடு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகம் முழுவதும் 4,380 வாகனங்களில் காய்கறிகள் விற்பனை- தமிழக அரசு ஏற்பாடு! இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையொட்டி கடந்த 2 நாட்களாக அனைத்து கடைகளையும் திறக்க அனுமதிக்கப்பட்டது. மக்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக இந்த தளர்வு வழங்கப்பட்டது. ஏராளமானோர் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர். என்றாலும் காய்கறி, பழம் ஆகியவை மக்களின் அன்றாட தேவைக்கு மிகவும் அவசியமாகும். எனவே அவற்றை அரசு மூலம் வாகனங்களில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒரு வார காலம் நடமாடும் வாகனங்கள் மூலம் நாள்தோறும் வீதி வீதியாக வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. வீதி, வீதியாக சென்று வீடுகளிலேயே இவை விற்பனை செய்யப்படுகின்றன. வேளாண் துறை சார்பில் தோட்டக்கலையினர் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவர...
தமிழகம் முழுவதும் தளர்வில்லா ஊரடங்கு அமலுக்கு வந்தது!

தமிழகம் முழுவதும் தளர்வில்லா ஊரடங்கு அமலுக்கு வந்தது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகம் முழுவதும் தளர்வில்லா ஊரடங்கு அமலுக்கு வந்தது! தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்கள், உயர் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள், சட்டமன்ற குழு உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களை கலந்து பேசி முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. எனவே முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து மக்கள் நடமாட்டத்தை குறைக்க தமிழகத்தில் படிப்படியாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆரம்பத்தில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரை...
தடுப்பூசி உற்பத்தியை தடுத்து நாட்டின் சுகாதாரத்துறையை நாசமாக்கியது பாமகவின் அன்புமணி ராமதாஸ்… ஷாக் ஆகாம தொடர்ந்து படிங்க…

தடுப்பூசி உற்பத்தியை தடுத்து நாட்டின் சுகாதாரத்துறையை நாசமாக்கியது பாமகவின் அன்புமணி ராமதாஸ்… ஷாக் ஆகாம தொடர்ந்து படிங்க…

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தடுப்பூசி உற்பத்தியை தடுத்து நாட்டின் சுகாதாரத்துறையை நாசமாக்கியது பாமகவின் அன்புமணி ராமதாஸ்... ஷாக் ஆகாம தொடர்ந்து படிங்க... 138 கோடி மக்கள் வாழக்கூடிய இந்தியா,  கொரோனாவை சமாளிக்க தனியார் நிறுவனங்களின் தயவை எதிர்பார்த்து காத்து, விழி பிதுங்கி  நிற்கிறது. இந்தியாவில் அரசின் பொதுத் துறை தடுப்பூசி தன்னிறைவு குலைந்தழிந்து போனதற்கு முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர்  அன்புமணியே காரணம்! – ஆங்கில பத்திரிகை அம்பலப்படுத்துகிறது! ‘’தடுப்பூசி உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாகத் திகழ்ந்த நமது இந்தியா இன்று இரண்டு தனியார் நிறுவனத்தின் தயவை நம்பி இருப்பது ஏன்?’’ என்ற கேள்வி இன்று அனைவர் மனதிலும் எழுகிறது! மே 8 ஆம் தேதி ஒரு பொது நல வழக்கில் இந்த கேள்வி மதுரை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளால் எழுப்பப் பட்டது. இந்த கேள்வி நம்மை போன்ற பொதுமக்களுக்கு நாளும் மனதில் உறுத்திக் கொண்டு இருந்தது தா...
பிரபல நடிகருக்கு சகோதரியாக நடிக்கும் ஜோதிகா!

பிரபல நடிகருக்கு சகோதரியாக நடிக்கும் ஜோதிகா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பிரபல நடிகருக்கு சகோதரியாக நடிக்கும் ஜோதிகா! கேஜிஎப் படம் மூலம் மிகவும் பிரபல இயக்குனராக மாறியவர் பிரசாந்த் நீல். இவர் அடுத்ததாக கேஜிஎப்-2 படத்தை இயக்கிய முடித்துவிட்டு, தற்போது பிரபாஸ் நடிப்பில் சலார் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். இந்த நிலையில் இப்படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிகை ஜோதிகா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் பிரபாஸுக்கு சகோதரியாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது....
பேமிலிமேன் 2 வெப் தொடருக்கு சீமான் எதிர்ப்பு !

பேமிலிமேன் 2 வெப் தொடருக்கு சீமான் எதிர்ப்பு !

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பேமிலிமேன் 2 வெப் தொடருக்கு சீமான் எதிர்ப்பு ! சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் வெப் தொடர் ‘தி பேமிலிமேன் 2’. இந்த தொடர் வரும் ஜூன் மாதம் நான்காம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த தொடரின் டிரைலர் வெளியானது. இந்த டிரைலர் மாபெரும் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருந்தாலும் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரை வெளியிடக்கூடாது என்று கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நாம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்தத் வெப்தொடரை வெளியிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். இந்த நிலையில் சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் ’அமைதியாக இருங்கள், நம்பிக்கையுடன் இருங்கள்’ என்று பதிவு செய்து மார்ட்டின் லூதர் கிங்கின் பொன்மொழியான ’முழுப்பாதையும் தென்படாவிட்டாலும் முதலடியை எட...
45 லட்சம் ஏர் இந்தியா பயணிகளின் கிரெடிட் கார்டு உள்ளிட்ட விவரங்கள் கசிவு!

45 லட்சம் ஏர் இந்தியா பயணிகளின் கிரெடிட் கார்டு உள்ளிட்ட விவரங்கள் கசிவு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
45 லட்சம் பயணிகளின் கிரெடிட் கார்டு உள்ளிட்ட விவரங்கள் கசிவு -ஏர் இந்தியா அதிர்ச்சி தகவல்! ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பயணம் செய்த பயணிகளின் கிரெடிட் கார்டுகள், பாஸ்போர்ட் மற்றும் தொலைபேசி எண்கள் உள்ளிட்ட பத்து வருட வாடிக்கையாளர் தரவு கசிந்துள்ளதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இ மெயில் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் கூறியுள்ளதாவது: 2011 ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் 2021 பிப்ரவரி 3-ம் தேதி வரை பதிவு செய்யப்பட்ட சுமார் 45 லட்சம் வாடிக்கையாளர்களின் விவரங்கள் கசிந்துள்ளது. ஜெனீவாவை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்ட பயணிகள் அமைப்பான சீடாவில் இருந்து வாடிக்கையாளர்களின் பெயர்கள், பிறந்த தேதி, தொடர்பு தகவல் மற்றும் டிக்கெட் தகவல்களும் கசிந்துள்ளன. சீடா பிஎஸ்எஸ் பயணிகள் சேவை அமைப்பின் எங்கள் தரவு செயலி (பயணிகளின் தனிப்பட்ட தகவல்களை சே...
ஆயுர்வேத மருந்து வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்!

ஆயுர்வேத மருந்து வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்!

helth tips, HOME SLIDER, NEWS, செய்திகள்
 ஆயுர்வேத மருந்து வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்! ஆந்திர பிரதேச மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணபட்டினம் என்ற கிராமத்தைச் சேர்ந்த போரிகி ஆனந்தயா என்ற ஆயுர்வேத மருத்துவர் கொரோனாவுக்கு மருந்து வழங்கி வருகிறார். அந்த மருந்து கொரோனா வராமல் தடுப்பது மட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களை குணமாக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மருந்து இலவசம் என்றும் அறிவிப்பு வெளியிட்டதால் அதனை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர். அந்த கிராமத்திற்கு செல்லும் சாலைகள் கார்கள், ஆம்புலன்சுகளால் நிரம்பி வழிகின்றன. பெருமளவிலான கூட்டத்தால், சுமார் 3 கிலோமீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் மேலும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே மருத்துவமனைகளில் இருந்த கொரோனா நோயாளிகளை அழைத்துக்கொண்டு அவர்களின் உறவினர்களும் அங்கு வி...