செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

‘மக்கள் நீதி மய்யத்தில் அடுத்த எலிமினேஷன் யார்?’ கமல்ஹாசனை கலாய்க்கும் கஸ்தூரி!

‘மக்கள் நீதி மய்யத்தில் அடுத்த எலிமினேஷன் யார்?’ கமல்ஹாசனை கலாய்க்கும் கஸ்தூரி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
மக்கள் நீதி மய்யத்தில் அடுத்த எலிமினேஷன் யார் என்பதை பார்ப்போம் கலாய்க்கும்  கஸ்தூரி நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெற முடியாமல் படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து, மக்கள் நீதி மய்யத்தில் இருந்து துணை தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ், பொதுச் செயலர் குமரவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் திடீரென கட்சியில் இருந்து விலகினர். அவரை தொடர்ந்து, மக்கள் நீதி மய்யத்தில் இருந்து மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மப்ரியா கட்சியில் இருந்து விலகுவதாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒருவர் பின் ஒருவராக மக்கள் நீதி மய்யத்தில் இருந்து அக்கட்சியை சார்ந்தவர்கள் விலகி வருவதை கலாய்க்கும் விதமாக, நடிகை கஸ்தூரி பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் "மதுரவாயில் தொகுதியில் போட்டியிட்ட  பத்மபிரியா, வேளச்சேரி தொகுதி போட்டியிட்ட சந்தோஷ் பாப...
‘இந்தியா உறுதியாக இருங்கள்’ ஆஸ்திரேலிய பல்கலை. கட்டிடத்தில் மூவர்ண மின்விளக்கு பிரதிபலிப்பு

‘இந்தியா உறுதியாக இருங்கள்’ ஆஸ்திரேலிய பல்கலை. கட்டிடத்தில் மூவர்ண மின்விளக்கு பிரதிபலிப்பு

HOME SLIDER, உலக செய்திகள், உலகம்
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரசால் மிகப்பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள இந்தியாவுக்கு உலக நாடுகள் மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன. மேலும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்தியாவுடன் துணை நிற்பதாக  உலகின் பல்வேறு நாடுகளும் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ஆஸ்திரேலிய நாட்டின் தலைநகர் சிட்னியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் கொரோனா பாதிப்பில் இருந்து இந்தியா மீண்டு வர துணை நிற்பதாக தெரிவித்துள்ளது. அப்பல்கலைக்கழகத்தின் பிரதான நூலக கட்டிடத்தில் இந்திய தேசிய கொடியை பிரதிபலிக்கும் வகையில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அந்த மின்விளக்கு பிரதிபலிப்பில் ‘இந்த பெருந்தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுவர இந்தியா உறுதியாக இருங்கள்’ என்று எழுதப்படுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக...
நாயை வைத்து உடற்பயிற்சி செய்யும் ஆண்ட்ரியா!

நாயை வைத்து உடற்பயிற்சி செய்யும் ஆண்ட்ரியா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
நாயை வைத்து உடற்பயிற்சி செய்யும் ஆண்ட்ரியா! தமிழ் சினிமாவில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. அதனைத் தொடர்ந்து சரத்குமாருடன் பச்சைக்கிளி முத்துச்சரம், கார்த்தியுடன் ஆயிரத்தில் ஒருவன், அஜித்துடன் மங்காத்தா, கமலுடன் விஸ்வரூபம், உத்தமவில்லன், தனுஷுடன் வடசென்னை, விஜய்யுடன் மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களையும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் பதிவு செய்வார். இந்நிலையில், தற்போது ஒருகையில் நாயை வைத்து உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது....
யுவனுடன் இணைந்து பாடிய ஏ.ஆர்.ரகுமான் மகன்!

யுவனுடன் இணைந்து பாடிய ஏ.ஆர்.ரகுமான் மகன்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
யுவனுடன் இணைந்து பாடிய ஏ.ஆர்.ரகுமான் மகன்! இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகன் அமீனும் இணைந்து முகமது நபிகளை புகழும் வகையில் ஒரு பாடலை வெளியிட்டுள்ளனர். 'தலா அல் பத்ரு அலாய்னா' எனும் இந்தப்பாடல் மக்களின் வேண்டுகோளை ஏற்று, மதீனா நகருக்கு முகம்மது நபிகள் (Pbuh), வருகைபுரிந்த போது மக்களால் பாடப்பட்டது. பெரும் வரலாற்றை உள்ளடக்கிய, மதீனா நகரில் உருவான இந்தப்பாடல் மிகவும் புகழ் பெற்றது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீனும் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர். இப்பாடல் ரம்ஜான் தினத்தை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது....
சிம்பு – ஹன்சிகாவின் ‘மஹா’ படத்தை ஓடிடி-யில் வெளியிட தடை கோரி இயக்குனர் வழக்கு!

சிம்பு – ஹன்சிகாவின் ‘மஹா’ படத்தை ஓடிடி-யில் வெளியிட தடை கோரி இயக்குனர் வழக்கு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES
சிம்பு - ஹன்சிகாவின் ‘மஹா’ படத்தை ஓடிடி-யில் வெளியிட தடை கோரி இயக்குனர் வழக்கு! நடிகை ஹன்சிகாவின் 50-வது படம் ‘மஹா’. யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மதியழகன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், தனக்கு தெரியாமல் படத்தை முடித்து, ஓ.டி.டி. தளத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் முயற்சிகள் நடப்பதாகவும், படத்தை வெளியிட தடை கோரியும் இயக்குனர் யு.ஆர்.ஜமீல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், படத்தை இயக்க தனக்கு 24 லட்சம் ரூபாய் ஊதியம் தருவதாக ஒப்புக்கொண்ட தயாரிப்பு நிறுவனம், இதுவரை 8 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே தந்துள்ளதால், மீதமுள்ள 15 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை வழங்க உத்தரவிட வேண்டும...
ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் தனுஷ்!

ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் தனுஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் தனுஷ்! நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் அண்ணாத்த. சிவா இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதன் படப்பிடிப்பிற்காக கடந்த ஒரு மாதமாக ஐதராபாத்தில் தங்கி இருந்த ரஜினிகாந்த், சில தினங்களுக்கு முன் சென்னை திரும்பினார். விரைவில் டப்பிங் பணிகளில் கலந்துகொள்ள உள்ள அவர், அது முடிந்ததும், அடுத்த மாதம் உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார். அமெரிக்கா சென்று வந்த பின் நடிகர் ரஜினிகாந்த் அடுத்த படத்திற்கு தயாராக் உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே நடிகர் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று வந்த பின், நடிகர் தனுஷ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக புதிய...
இதுவரை எந்த ஹீரோயினும் நடித்திராத வேடத்தில் நடித்துள்ளேன் – பூஜா ஹெக்டே!

இதுவரை எந்த ஹீரோயினும் நடித்திராத வேடத்தில் நடித்துள்ளேன் – பூஜா ஹெக்டே!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
இதுவரை எந்த ஹீரோயினும் நடித்திராத வேடத்தில் நடித்துள்ளேன் - பூஜா ஹெக்டே! தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பின்னர் தெலுங்கு, இந்தி படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையானார். தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். கொரோனா பரவல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, தெலுங்கில் பிரபாசுக்கு ஜோடியாக ராதே ஷ்யாம், அகில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் படத்தில் இதுவரை எந்த கதாநாயகிகளும் நடித்திராத, ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறாராம் பூஜா ஹெக்டே. ஸ்டாண்ட் அப் காமெடி செய்பவராக இந்தப்படத்தில் நடித்து உள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார். ...
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு- இடைக்கால அறிக்கை தாக்கல்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு- இடைக்கால அறிக்கை தாக்கல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு- இடைக்கால அறிக்கை தாக்கல்! தூத்துக்குடியில் 2018-ம் ஆண்டு நடந்த போலீஸ் துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிர் இழந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்தது. இதைத்தொடர்ந்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான இடைக்கால அறிக்கையை நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை குழு இன்று தாக்கல் செய்துள்ளது. நீதிபதி அருணா ஜெகதீசன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையை வழங்கினார். மேலும், கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையையும் முதலமைச்சரிடம் வழங்கினார்....