செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

கொரோனா பரவல் எதிரொலி… ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் டாக்டர்!

கொரோனா பரவல் எதிரொலி… ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் டாக்டர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கொரோனா பரவல் எதிரொலி... ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் டாக்டர்! நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் டாக்டர். இளம் நடிகை பிரியங்கா மோகன் இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள, இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை மார்ச் 26-ந் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். இருப்பினும் சட்டசபை தேர்தல் காரணமாக படத்தின் ரிலீஸை தள்ளிவைத்தனர். இதையடுத்து ரம்ஜான் பண்டிகைக்கு இப்படம் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். தற்போது கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருவதால், திரையரங்குகளில் 50 சதவீத...
கொரோனா அச்சம்… வீட்டிலும் முகக் கவசம் அணிந்தே இருப்பேன் – நடிகை பிரியா வாரியர்!

கொரோனா அச்சம்… வீட்டிலும் முகக் கவசம் அணிந்தே இருப்பேன் – நடிகை பிரியா வாரியர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
கொரோனா அச்சம்... வீட்டிலும் முகக் கவசம் அணிந்தே இருப்பேன் - நடிகை பிரியா வாரியர்! மலையாளத்தில் ஒரு அடார் லவ் படத்தில் கண் அடித்து பிரபலமான பிரியா வாரியர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு: “எனது அப்பா, அம்மா, பாட்டி, தம்பி எல்லோரும் ஒரே வீட்டில் இருக்கிறோம். வீட்டில் 60 வயதை தாண்டியவர்கள் இருக்கிறார்கள். எனவே கொரோனா காலத்தில் ஜாக்கிரதையாக இருக்கிறேன். கொரோனாவில் இருந்து தப்பிக்க படப்பிடிப்பில் தினமும் ஆவி பிடிக்கிறேன். வெந்நீரில் மஞ்சள் கலந்து குடிக்கிறேன். படப்பிடிப்பு முடிந்து வேறு நகரங்களில் இருந்து வீட்டுக்கு போகும்போது 2 நாட்கள் யாருடனும் சேராமல் தனியாக இருப்பேன். சாப்பாட்டை எனது அறைக்கு அனுப்ப சொல்வேன். முக்கியமாக எனது தாத்தா, பாட்டி அருகில் நான் போகவே மாட்டேன். வீட்டில் எங்கு சுற்றினாலும் முகக் கவசம் அணிந்தே இருப்பேன். 2 நாட்கள் எந்த அறிகுறிய...
கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி – பினராயி விஜயன்

கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி – பினராயி விஜயன்

HOME SLIDER, NEWS, politics
கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாகவே தடுப்பூசி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார் மாநிலத்தில் புதிதாக 22,414 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 22 பேர் நோய் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 5,431 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தடுப்பூசிகளை வாங்கி கொள்ளுமாறு மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், கொரோனாவால் மாநிலங்கள் ஏற்கெனவே நிதிச் சுமையில் உள்ளன. மாநிலங்களை மேலும் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளிவிடாமல் மத்திய அரசே மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை இலவசமாக வழங்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கேரள அரசு இலவசமாகவே தடுப்பூசியை வழங்கும் என்றார். முன்னதாக கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க கோரி பிரதமர் மோடிக்கு பினராயி விஜயன் கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது...
தீடிரென்ற கடலில் லேண்ட் ஆன விமானம்!

தீடிரென்ற கடலில் லேண்ட் ஆன விமானம்!

HOME SLIDER, உலக செய்திகள், உலகம்
தீடிரென்ற கடலில் லேண்ட் ஆன விமானம்! அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் cocoa கடற்கரையில் நடைபெற்ற ஏர்ஷோ நிகழ்ச்சியில் விமானம் ஒன்று பழுதடைந்தால் விமானி விமானத்தை அவசரமாக கடலில் தரையிறக்கிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது . அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் cocoa கடற்கரையில் ஏர்ஷோ எனப்படும் விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், TBM Avenger என்ற ஒற்றை என்ஜின் விமானமும் பங்கேற்றது. வானில் பறந்து கொண்டிருந்த TBM Avenger விமானத்தில் தீடிரென்று இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், துரிதமாக செயல்பட்ட விமானி விமானத்தை தரையிறக்க முடிவு செய்து கடற்கரை ஓரம் ஆழம் இல்லாத இடத்தில், அதேசமயம் மக்கள் இல்லாத இடத்தில் மிக துல்லியமாக விமானத்தை தரை இறங்கியுள்ளார். கடற்கரையில் விளையாடி கொண்டிருந்த குழந்தைகள் இந்த காட்சியை கண்டு ஆச்சர்யமும், அச்சமும் அடைந்தனர். விமானம் க...
விவேக் நினைவாக மரக்கன்றுகள் நட்ட மாநாடு படக்குழுவினர்!

விவேக் நினைவாக மரக்கன்றுகள் நட்ட மாநாடு படக்குழுவினர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விவேக் நினைவாக மரக்கன்றுகள் நட்ட மாநாடு படக்குழுவினர்! நகைச்சுவை நடிகர் விவேக், கடந்த சில தினங்களுக்கு முன் மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். இது திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிக அளவில் மரங்களை நட்டு இயற்கையை பாதுகாக்க விரும்பியவர் விவேக். அதனால் அவர்மீது அபிமானம் கொண்ட பலரும் தங்கள் பகுதியில் மரக்கன்றுகளை நட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் மாநாடு படக்குழுவினர் விவேக் நினைவாக மரக்கன்றுகளை நட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தி உள்ளனர்....
அடங்காதே படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு!

அடங்காதே படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அடங்காதே படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு! ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அடங்காதே’. இதில் ஹீரோயினாக சுரபி நடித்துள்ளார். மேலும் சரத்குமார், மந்திரா பேடி, தம்பி ராமையா, யோகி பாபு, அபிஷேக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீ கிரீன் புரோடக்ஷன்ஸ் சார்பில் எம்.எஸ்.சரவணன் இப்படத்தை தயாரித்து இருக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நீண்ட காலமாக உருவாகி வந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிந்து சென்சாரில் யூ/ஏ சான்றிதழ் பெற்றிருக்கிறது. இதையடுத்து விரைவில் தியேட்டரில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்....
அரசியல் நிருபராக களமிறங்கும் ஸ்ருதிஹாசன்!

அரசியல் நிருபராக களமிறங்கும் ஸ்ருதிஹாசன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
அரசியல் நிருபராக களமிறங்கும் ஸ்ருதிஹாசன்! பிரபாஸ் நடிப்பில் ராதே ஷ்யாம், சல்லார், ஆதிபுருஷ் ஆகிய படங்கள் தயாராகின்றன. இதில் சல்லார் திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார். இந்த வருடம் ஜனவரியில் ஸ்ருதி நடிப்பதை சல்லார் படக்குழு முறைப்படி அறிவித்தது. தெலுங்கு, கன்னடத்தில் தயாராகும் சல்லார் திரைப்படம், தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒரேநேரத்தில் வெளியிடப்பட உள்ளது. இந்தப் படத்தை பிரசாந்த் நீல் இயக்குகிறார். ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக இது தயாராகிறது. இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசனின் வேடம் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அவர் இதில் அரசியல் நிருபராக நடிக்கிறார். இது மிக முக்கியமான வேடம் என்கிறது படக்குழு. சென்ற வருட இறுதியில் சல்லார் திரைப்படம் தொடங்கியது. இந்த வருட ஆரம்பத்தில் படப்பிடிப்பை நடத்தினர். தற்போது ராதேஷ்யாம் படத்தின் இறுதிக்கட்ட பட...
படப்பிடிப்பு தளத்தில் சுதந்திரமாக இருக்க முடியவில்லை- பூஜா ஹெக்டே!

படப்பிடிப்பு தளத்தில் சுதந்திரமாக இருக்க முடியவில்லை- பூஜா ஹெக்டே!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
படப்பிடிப்பு தளத்தில் சுதந்திரமாக இருக்க முடியவில்லை- பூஜா ஹெக்டே! ஜீவா ஜோடியாக முகமூடி படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. தற்போது நெல்சன் இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே அளித்துள்ள பேட்டி வருமாறு:- “கொரோனாவுக்கு முந்தைய வாழ்க்கை, கொரோனாவுக்கு பிந்தைய வாழ்க்கை என்று கொரோனா எல்லோரது வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனாவுக்கு முன்பு ஜாலியாக சுற்றிய மாதிரி இப்போது சுற்ற முடியாத நிலைமை உள்ளது. கொரோனா முன்னால் எல்லோரும் சமம். அதற்கு பணக்காரன், ஏழை என்ற வித்தியாசம் கிடையாது. எல்லோரையும் தாக்குகிறது. விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டி உள்ளது. பாதுகாப்புக்கு எல்லா முன் எச்சரிக்கை நடவடிக்கையையும் எடுக்க வேண்டி உள்ளது. குடும்பத்தில் உள்ளவர்கள் வீட்டோடு இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நா...
ஓடிடி-யில் வெளியாகிறதா ‘தலைவி’? – படக்குழு விளக்கம்!

ஓடிடி-யில் வெளியாகிறதா ‘தலைவி’? – படக்குழு விளக்கம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
ஓடிடி-யில் வெளியாகிறதா ‘தலைவி’? - படக்குழு விளக்கம்! ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘தலைவி’. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி இப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும் சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை கடந்தாண்டு ஜூன் 26-ந் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். கொரோனா லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் படம் திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை. இதையடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு திரையரங்குகள் மீண்டும் இயங்கத் தொடங்கியதால், படம் வருகிற ஏப்ரல் 23-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது மீண்டும் கொரோனா 2-வது அலை காரணமாக பாதிப்புகள் அதிகரித்து வருவதால், திரையரங்குகளில் 50 % இருக்...
‘அரண்மனை 3’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘அரண்மனை 3’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
‘அரண்மனை 3’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு! ‘அரண்மனை’ பேய் படம் இதுவரை 2 பாகங்கள் வந்துள்ளன. சுந்தர்.சி இயக்கிய இந்த 2 பாகங்களும் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய நிலையில், தற்போது அரண்மனை படத்தின் 3-ம் பாகம் தயாராகி உள்ளது. ஏற்கனவே 2 பாகங்களை இயக்கி வெற்றிகண்ட சுந்தர் சி தான் இந்த படத்தையும் இயக்கி உள்ளார். இதில் கதாநாயகனாக ஆர்யாவும், அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் ஆகிய 3 கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும் விவேக், யோகிபாபு ஆகியோர் காமெடி வேடங்களில் வருகின்றனர். இப்படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி நாளை (ஏப்ரல் 22) காலை 11 மணிக்கு பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்...