செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

அழகான மனிதரை சந்தித்ததில் பெருமை… பிரபல நடிகரை புகழும் துருவ் விக்ரம்!

அழகான மனிதரை சந்தித்ததில் பெருமை… பிரபல நடிகரை புகழும் துருவ் விக்ரம்!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
அழகான மனிதரை சந்தித்ததில் பெருமை... பிரபல நடிகரை புகழும் துருவ் விக்ரம்! நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ‘வர்மா’ படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது தந்தை விக்ரமுடன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் துருவ் விக்ரம். இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவு செய்து வருவார். தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து எடுத்த செல்பி புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதில் ’இந்த அழகான மனிதரை சந்தித்ததால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. துருவ் விக்ரம் அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது....
கோப்ரா திரைப்படம் ஓடிடி-யில் ரிலீசா… தயாரிப்பு நிறுவனம் விளக்கம்!

கோப்ரா திரைப்படம் ஓடிடி-யில் ரிலீசா… தயாரிப்பு நிறுவனம் விளக்கம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கோப்ரா திரைப்படம் ஓடிடி-யில் ரிலீசா... தயாரிப்பு நிறுவனம் விளக்கம்! டிமாண்ட்டி காலனி, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தத் திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. இதனிடையே இந்த திரைப்படத்தை பிரபல ஓடிடி தளம் ஒன்று வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், இது ஒரு பொய்யான தகவல், இதில் உண்மை இல்லை என்று இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்திருக்கிறது....
திருமணம் பற்றி பேசுவதை நிறுத்துங்க… சுனைனா வருத்தம்!

திருமணம் பற்றி பேசுவதை நிறுத்துங்க… சுனைனா வருத்தம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
திருமணம் பற்றி பேசுவதை நிறுத்துங்க... சுனைனா வருத்தம்! காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலம் அறிமுகமான சுனைனா, தொடர்ந்து நீர் பறவை, வம்சம், உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். 2019 ஆம் ஆண்டு இறுதியில் வெளியான சில்லுக்கருப்பட்டி திரைப்படம் சுனைனாவிற்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. சமீபத்தில் டிரிப் என்னும் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ராஜ ராஜ சோரா என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சுனைனா அளித்த பேட்டியில், ‘கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன. பல வகையான கதாபாத்திரங்கள் கிடைத்துள்ளன. மேலும் சில இயக்குனர்கள், என்னை மனதில் கொண்டு கதைகளை எழுதியுள்ளது உற்சாகம் அளிக்கிறது” என்கிறார் சுனைனா. தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தொடர்ந்து வெளியாகும் செய்திகளை மறுத்த அவர் இவை அனைத்தும் வந்ததிகளே என்றும் திருமணம் செய்த...
கமல் படத்தில் இருந்து விலகியது ஏன்? லாரன்ஸ் விளக்கம்!

கமல் படத்தில் இருந்து விலகியது ஏன்? லாரன்ஸ் விளக்கம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கமல் படத்தில் இருந்து விலகியது ஏன்? லாரன்ஸ் விளக்கம்! நடிகர் கமலின் 232 வது படம் ‘விக்ரம்’. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசையமைக்க இருக்கும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முதலில் இந்த கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருந்தது. சில காரணங்களால் விக்ரம் படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவில்லை. அதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. ராகவா லாரன்ஸ் தற்போது ருத்ரன் படத்தில் பிசியாக நடிப்பதாலும், அதன்பின் சந்திரமுகி 2 படத்தின் வேலைகள் இருப்பதாலும் கமலின் விக்ரம் படத்தில் நடிக்க முடியாமல் போன காரணம் என்று லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார்....
ஒரே நாளில் இரட்டை விருந்து கொடுக்கும் அஜித்!

ஒரே நாளில் இரட்டை விருந்து கொடுக்கும் அஜித்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஒரே நாளில் இரட்டை விருந்து கொடுக்கும் அஜித்! அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹுமா குரேஷி நடித்துள்ளார். வலிமை படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மே 1ஆம் தேதி அஜித் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் கடந்த மாதம் தெரிவித்திருந்தார். இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன், மோஷன் போஸ்டரையும் மே 1 ஆம் தேதி படக்குழுவினர் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது....
யோகி பாபு மீது புகார்!

யோகி பாபு மீது புகார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
யோகி பாபு மீது புகார்! தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தினர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த புகார் மனுவில், நடிகர் யோகிபாபு மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. புகார் மனு விவரம்; நடிகர் யோகிபாபு நடித்துள்ள மண்டேலா என்ற திரைப்படம், சமீபத்தில் வெளியானது. அந்த படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. படம் முழுவதும் இது போன்ற காட்சிகள் உள்ளன. முடிதிருத்தும் மற்றும் மருத்துவ சமுதாயத்தைச் சேர்ந்த 40 லட்சம் மக்களை இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் மற்றும் நடிகர் யோகிபாபு ஆகியோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது....
முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே பெட்ரோல்!

முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே பெட்ரோல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே பெட்ரோல்! தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் மீண்டும் இன்று முதல் விதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் கூடும் இடங்களில் இருந்து தொற்று பரவாமல் இருக்க சுகாதாரத்துறை அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் நிரப்ப வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல் வழங்கப்படும் என்று விற்பனையாளர் சங்கம் அறிவித்து இருந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அடிப்படையில் பெட்ரோல் நிரப்ப வரும் வாகன ஓட்டிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இன்று காலையில் இருந்து சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் முகக்கவசம் அணிந்து வருகிறார்களா என்று ஊழி...
தமிழகத்தில் கொரோனாவை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன!

தமிழகத்தில் கொரோனாவை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் கொரோனாவை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன! தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு குறைந்து வந்த நிலையில் கடந்த மாதம் மீண்டும் அதிகரிக்க தொடங்கி விட்டது. வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரசின் தாக்கம், மற்ற மாநிலங்களில் அதிகரித்து வந்த கொரோனா வைரஸ் ஆகியவை காரணமாக தமிழகத்திலும் கொரோனா நோய் தொற்று இப்போது மிக வேகமாக பரவ தொடங்கி விட்டது. இதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும் அதையும் தாண்டி கொரோனா மிக வேகமாக பரவி விட்டது. தமிழகத்தில் கடந்த மாதம் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து இருந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் எதுவும் பலன் அளிக்கவில்லை. மக்கள் கூட்டம் கூட்டமாக பிரசாரத்தில் கூடியதால் பலருக்கு கொரோனா தொற்று பரவியது. இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகி விட்டது. கொரோனா பரிசோதனை தற்போது அ...
திருப்பதி ஏழுமலையானை போல்  நித்யானந்தாவின் காஸ்டியூம்..!

திருப்பதி ஏழுமலையானை போல் நித்யானந்தாவின் காஸ்டியூம்..!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம்
திருப்பதி ஏழுமலையானை போல் நித்யானந்தாவின் காஸ்டியூம்..! சாமியார் நித்யானந்தாவின் புதிய புகைப்படங்களை கைலாச முகநூல் பக்கத்தில் நித்யானந்தா டீம் வெளியிட்டுள்ளது. உலகநாயகனுக்கு பிறகு விதவிதமான கெட்டப்புகள் அதிகம் போட்டவர் நித்யானந்தா தான் என்று இவரது சீடர்கள் பெருமையாக கூறுகின்றனர் ஒரு பக்கம் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை வேகமெடுக்க, மறுபக்கம், குஜராத் ஆசிரம வழக்கு நெருக்கடி ஏற்படுத்த, நித்யானந்தா எங்கே இருக்கிறார் என அவரது சீடர்கள் தேடிக் கொண்டிருக்கின்றனர். அவரோ, எங்கோ இருந்தபடி தினசரி தனது பேஸ்புக் பக்கம் மூலம் சீடர்களுக்கு அறிவுரைகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார். இந்தியாவிலிருந்து தப்பிய நித்யானந்தா தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள ஈக்வேடார் நாட்டின் அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாசா என்று பெயரிட்டு தனி நாடாக மாற்ற ஐ.நாவுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல்...
மூச்சுதிணறலால் அவதி… நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

மூச்சுதிணறலால் அவதி… நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
மூச்சுதிணறலால் அவதி... நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி! மனித உரிமை காக்கும் கட்சியின் நிறுவனரான நடிகர் கார்த்திக்குக்கு, கடந்த மாதம் 21-ந் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதுரை, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கார்த்திக் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரம் முடிந்து சென்னை திரும்பிய அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள கார்த்திக்குக்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தொற்று இல்லை என்று தெரியவந்...