சாரல் மழையால் சாலையில் வழுக்கி சரிந்த கோயில் தேர்- லேசான காயத்துடன் உயிர் தப்பிய பூசாரி!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டையில் அருள்மிகு பெரியநாயகி என்கிற அங்காளம்மன் கோயில் இருக்குது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மயான கொள்ளை திருவிழா நடப்பது வழக்கம். திருவிழாவை தொடர்ந்து மாசி தேரோட்டமும் நடப்பது வழக்கம்.
இந்தாண்டு திருவிழா கடந்த மார்ச் இரண்டாம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது.
இதற்காக எலவனாசூர்கோட்டை, உளுந்தூர்பேட்டை, அலங்கிரி, வீரமங்கலம், செம்பியன்மாதேவி, புகைப்பட்டி, வெள்ளையூர் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட ஊர்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் இடத்துக்கு சென்றிருந்தனர்.
காலை 10:30 மணிக்கு திருத்தேரில் அம்மன் சிலை வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்ட பின்பு சிறப்பு பூஜையும் தீபாராதனையும் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சக்த...









