பிரபாஸின் பிரம்மாண்ட படத்தில் இணையும் ராஷி கண்ணா!
தமிழில் இமைக்கா நொடிகள் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ராஷி கண்ணா. இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு, விஷாலுக்கு ஜோடியாக அயோக்யா, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் போன்ற வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம்வரும் ராஷி கண்ணா, சுந்தர் சி-யின் அரண்மனை 3, விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார், ஜீவாவுக்கு ஜோடியாக மேதாவி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிறமொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் ராஷி கண்ணா.
இந்நிலையில், நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க உள்ள படத்தில் நடிகை ராஷி கண்ணாவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே ...
நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் பிரபுதேவாவின் படம்!
பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பொன் மாணிக்கவேல்’. நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இதில் பிரபுதேவா முதல்முறையாக போலீசாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி, மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் உள்ள இப்படம், விரைவில் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாம். இதற்கான பேச்சுவார்த்தையும் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கேஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் படமாக இது உருவாகி உள்ளது. சமீபத்தில் பிர...
கொரோனா நிதி திரட்ட விஸ்வநாதன் ஆனந்துடன் செஸ் விளையாடும் அமீர்கான்!
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்த இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. திரைப் பிரபலங்கள் பலரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்தவகையில், பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான், செஸ் விளையாடி, கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்ட உள்ளார்.
‘செக்மேட் கோவிட்’ என்கிற பெயரில் வருகிற ஜூன் 13ஆம் தேதி அந்த நிதி திரட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் நடிகர் அமீர்கான் கலந்துகொண்டு இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்துக்கு எதிராக செஸ் விளையாட உள்ளார். செஸ் விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட நடிகர் அமீர்கான், ஏற்கனவே விஸ்வநாதன் ஆனந்துடன் செஸ் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....
நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சமுத்திரகனி படம்!
தனுஷின் ‘திருடா திருடி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுப்ரமணியம்சிவா. அதன்பின் பொறி, யோகி, சீடன் போன்ற படங்களை இயக்கிய அவர், வடசென்னை படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின் சமுத்திரகனியை வைத்து இவர் இயக்கியிருக்கும் படம் ‘வெள்ளை யானை’.
நடிகை ஆத்மியா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து, திரையரங்க வெளியீட்டிற்காக நீண்ட நாட்களாக காத்திருந்தது படக்குழு.
தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், இப்படத்தை நேரடியாக தொலைக்காட்சியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக முன்னணி தொலைக்காட்...
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 14-ந் தேதி தொடக்கம்!
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தது. கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பல பெற்றோர் தனியார் பள்ளிகளில் சேர்ப்பதை தவிர்த்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் சேர்த்தனர்.
இதனால் சுமார் 5 லட்சம் மாணவர்கள் கடந்த ஆண்டு கூடுதலாக சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் கொரோனா 2-ம் அலை தமிழகத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் ஏப்ரல் மாதத்தில் நடைபெற வேண்டிய மாணவர் சேர்க்கை பாதிக்கப்பட்டது. பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதோடு அரசு, தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தடைப்பட்டது.
இந்த நிலையில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வருகிற 14-ந் தேதி மு...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்லணையில் ஆய்வு!
திருச்சி மாவட்டம் கல்லணையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தூர்வாரும் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
நாளை மேட்டூர் அணையை திறந்து வைக்க உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கல்லணையில் ஆய்வு செய்தார்....
உலகிலேயே முதல் நாடாக எல்சல்வடாரில், பிட்காயினுக்கு சட்ட அங்கீகாரம்!
சத்தோஷி நகமோட்டோ என்ற ஜப்பானியரால் உருவாக்கப்பட்ட மெய்நிகர் நாணயம்தான் பிட்காயின் ஆகும்.
இந்த நாணயத்தை நாம் கையிலோ, பையிலோ வைத்துக்கொண்டு பயன்படுத்த முடியாது. கணினியில் கண்களால் மட்டுமே பார்க்க முடியும். பரிமாற்றம் செய்ய இயலும். இந்த நாணயம் இதுவரை உலகில் எந்தவொரு நாட்டிலும் சட்டபூர்வ அங்கீகாரத்தைப் பெறவில்லை. இந்த பிட்காயினை சட்டபூர்வ பணமாக மத்திய அமெரிக்க நாடான எல்சல்வடார் ஆக்கி உள்ளது. அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 84 வாக்குகளில் 62 வாக்குகள் விழுந்தன. அதைத் தொடர்ந்து அந்த நாட்டின் அதிபர் நயீப் புக்கெல் ஒப்புதல் அளித்தார்.
இதுபற்றி அவர் கூறுகையில்,“எல்சல்வடார் அரசு ஒரு வரலாற்றை உருவாக்கி உள்ளது. இந்த நடவடிக்கையால் வெளிநாட்டில் வசிக்கிற நம் நாட்டவர்கள் வீட்டுக்கு பணம் அனுப்புவது ...
தீங்கு செய்தால் வலுவான பதிலடி... ரஷியாவுக்கு ஜோ பைடன் கடும் எச்சரிக்கை!
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த ஜனவரி 20-ந் தேதி பதவி ஏற்றார். அப்போது அந்த நாட்டை கொரோனா தொற்று ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. இப்போது அந்த தொற்றில் இருந்து அமெரிக்கா மீண்டுவந்து விட்டது.
இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது முதல் வெளிநாட்டுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். 8 நாள் ஐரோப்பிய பயணத்தில் முதல் கட்டமாக அவர் நேற்று இங்கிலாந்து சென்றார். மனைவி ஜில் பைடனுடன் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் அவர் சபோல்கில் உள்ள அமெரிக்க விமானப்படை தளமான மில்டன்ஹாலில் வந்து தரை இறங்கினார்.அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஐரோப்பிய பயணத்தின் இறுதிகட்டமாக சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகருக்கு செல்லும் ஜோ பைடன், அங்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசுகிறார். பருவநிலை மாற்றம், உக்ரைனில் ரஷிய ராணுவ த...
சர்வதேச டெஸ்ட் வீரர்கள் தரவரிசை - இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 5-ம் இடம்!
டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில், பேட்ஸ்மேன்களில் இந்திய கேப்டன் விராட் கோலி 5- வது இடத்திலும், ரிஷப் பண்ட் மற்றும் ரோகித் சர்மா (747 புள்ளிகள்) கூட்டாக இணைந்து 6-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.
ஜூன் 18 முதல் நியூசிலாந்திற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கோலி இந்தியாவை வழிநடத்துவார். ஒரு இடத்தைப் பெற்ற பந்த் மற்றும் ரோகித் தலா மதிப்பீட்டு புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
பந்துவீச்சாளர் தரவரிசையில் தமிழக வீரர் அஸ்வின் மட்டும் 2-வது இடத்தில் நீடித்து, டாப் 10 வரிசையில் இருக்கும் ஒரே இந்திய வீரர் ஆவார்.
அதேபோல் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா 2-வது இடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4-வது இடத்திலும் தொடர்ந்து நீடிக்...