செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – இவான்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் மெட்வதேவ்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – இவான்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் மெட்வதேவ்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் - இவான்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் மெட்வதேவ்! கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் 2ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனில் மெட்வதேவும், பிரிட்டனின் டேன் இவான்சும் மோதினார்கள். தொடக்கம் முதலே மெட்வதேவ் சிறப்பாக விளையாடினார். முதல் செட்டை 6-3 என மெட்வதேவ் கைப்பற்றினார். தொடர்ந்து இரண்டாவது செட்டை 6-4, மூன்றாவது செட்டை 6-3 என கைப்பற்றி அசத்தினார். இறுதியில், மெட்வதேவ் 6-3, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்....
3வது டி20 போட்டி – வங்காளதேசத்தை எளிதில் வீழ்த்தியது நியூசிலாந்து!

3வது டி20 போட்டி – வங்காளதேசத்தை எளிதில் வீழ்த்தியது நியூசிலாந்து!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
3வது டி20 போட்டி - வங்காளதேசத்தை எளிதில் வீழ்த்தியது நியூசிலாந்து! நியூசிலாந்து அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் வங்காளதேசம் வென்று தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹென்றி நிகோலஸ் 36 ரன்னும், டாம் பிளெண்டல் 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதையடுத்து, 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. நியூசிலாந்து அணியினரின் பந்துவீச்சில் சிக்கி விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில், வங்காளதேசம்  19.4 ஓவரில் 76 ரன்க...
பிரகாஷ் ராஜுக்கு 2 நடிகைகள் ஆதரவு…. தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் திடீர் டுவிஸ்ட்!

பிரகாஷ் ராஜுக்கு 2 நடிகைகள் ஆதரவு…. தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் திடீர் டுவிஸ்ட்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
பிரகாஷ் ராஜுக்கு 2 நடிகைகள் ஆதரவு.... தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் திடீர் டுவிஸ்ட்! தெலுங்கு நடிகர் சங்க தலைவராக இருக்கும் நரேஷ் பதவி காலம் முடிவதால் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய செப்டம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து நடிகை ஜீவிதா, விஷ்ணு மஞ்சு, ஹேமா ஆகியோர் தனித்தனி அணிகளாக களத்தில் இறங்கியிருந்தனர் இந்நிலையில், தற்போது திடீர் டுவிஸ்டாக தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக கூறிவந்த நடிகைகள் ஹேமா, ஜீவிதா ஆகியோர் பிரகாஷ்ராஜின் அணியில் இணைந்து விட்டனர். இதனால் அவரது அணியின் பலம் கூடி உள்ளது. அதன் காரணமாக தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் பிரகாஷ் ராஜுக்கும், விஷ்ணு மஞ்சுவிற்கும் இடையே நேரடி போட்டி நடக்க இருக்கிறது. இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது அணி சார்பில் போட்டியிடுபவர்களின் பட்டி...
வீரம், அண்ணாத்த பட நடிகர் பாலா 2-வது திருமணம் செய்து கொண்டார்!

வீரம், அண்ணாத்த பட நடிகர் பாலா 2-வது திருமணம் செய்து கொண்டார்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
வீரம், அண்ணாத்த பட நடிகர் பாலா 2-வது திருமணம் செய்து கொண்டார்! தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில், அம்மா அப்பா செல்லம், அஜித்தின் வீரம், கார்த்தியுடன் தம்பி ஆகிய படங்களில் நடித்தவர் நடிகர் பாலா. இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியான இவர், மலையாள திரையுலகிலும் பிசியான நடிகராக இருந்து வருகிறார். தற்போது சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்திலும் நடிகர் பாலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த 2010-ம் ஆண்டு அம்ருதா சுரேஷ் என்பரை திருமணம் செய்துகொண்ட பாலா, அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக 2019-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். இவர்களுக்கு அவந்திகா என்ற மகள் உள்ளார். இதனிடையே கேரளாவை சேர்ந்த எலிசபெத் என்ற மருத்துவரை நடிகர் பாலா, ரகசியமாக 2-வது திருமணம் செய்துகொண்டதாக கடந்த மாதம் செய்திகள் வெளியாகின. இருப்பினும் இதுகுறித்து எந்தவித தகவலையும் வெ...
‘நானே வருவேன்’ படப்பிடிப்பு தாமதமாவது ஏன்? – வெளியான புதிய தகவல்!

‘நானே வருவேன்’ படப்பிடிப்பு தாமதமாவது ஏன்? – வெளியான புதிய தகவல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘நானே வருவேன்’ படப்பிடிப்பு தாமதமாவது ஏன்? - வெளியான புதிய தகவல்! காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பிரபலமானவர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் அடுத்ததாக ‘நானே வருவேன்’ திரைப்படம் உருவாக உள்ளது. தனுஷ் ஹீரோவாக நடிக்க உள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 17-ந் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை. இந்நிலையில், நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி தொடங்கப்படாததற்கான காரணம் வெளியாகி உள்ளது. அதன்படி பீஸ்ட் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால் ‘நானே வருவேன்’ படப்பிடிப்பு தேதியை செல்வராகவன் தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. வருகிற நவம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்...
1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்!

1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்! தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டாகவே பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை. ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. இடையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் மீண்டும் கொரோனா தொற்று பரவியதால் மூடப்பட்டது. 2-வது அலை கொரோனா தாக்கத்துக்கு பிறகு படிப்படியாக தொற்று குறையத் தொடங்கி உள்ளது. பல மாவட்டங்களில் தொற்று மிகவும் குறைந்துள்ளது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளை திறப்பது என்று தமிழக அரசு முடிவு எடுத்தது. அதன்படி கடந்த 1-ந் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன. வகுப்புகள் நடந்து வரும் அனைத்து பகுதிகளிலும் இதுவரை எந்த பிரச்சனையும் வரவில்லை. நோய் தொற்றும் தொடர்ந்து குறை...
பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டி- ஆடவர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றார் கிருஷ்ணா நாகர்!

பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டி- ஆடவர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றார் கிருஷ்ணா நாகர்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டி- ஆடவர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றார் கிருஷ்ணா நாகர்! ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16-வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இன்று நடைபெற்ற பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் தங்கம் வென்றார். இறுதிப்போட்டியில் ஹாங்காங் வீரர் மான் கையை 17-21, 21-16, 17-21 என்ற செட் கணக்கில் கிருஷ்ணா நாகர் வீழ்த்தினார். இதன் மூலம் பாராலிம்பிக் போட்டியில் இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என  19 பதக்கங்களை வென்றுள்ளது....
டோக்கியோ பாராலிம்பிக்- துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி!

டோக்கியோ பாராலிம்பிக்- துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
டோக்கியோ பாராலிம்பிக்- துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி! ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இன்று 50 மீட்டர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியின் ஒரே பிரிவில் இந்திய வீரர்கள் மணீஷ் நர்வால் தங்கம், சிங்ராஜ்  வெள்ளி பதக்கம் வென்றனர். 10 மீட்டர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் சிங்ராஜ் ஏற்கனவே வெண்கலம் வென்ற நிலையில் தற்போது வெள்ளி வென்றுள்ளார். பாராலிம்பிக்கில் 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என 15 பதக்கங்களுடன் பட்டியலில் 34வது இடத்தில் இந்தியா உள்ளது....
16 கோடி பேர்களின் “ஃபிட் இந்தியா” (Fit India) தூதுவராக நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தேர்வு!

16 கோடி பேர்களின் “ஃபிட் இந்தியா” (Fit India) தூதுவராக நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தேர்வு!

CINI NEWS, HOME SLIDER
  16 கோடி பேர்களின் “ஃபிட் இந்தியா” (Fit India) தூதுவராக நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தேர்வு! நடிகர் விஷாலின் தந்தையும், பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ஜி.கே.ரெட்டி, உயற்பயிற்சி செய்வதில் மிகுந்த ஆர்வம் உடையவர் என்பது அனைவரும் அறிந்தது தான். 82 வயதிலும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் அவருடைய உற்பயிற்சி வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாக்கி வியப்படைய செய்துள்ளது. இந்த நிலையில், மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள ‘ஃபிட் இந்தியா’ (Fit India) தூதுவராக ஜி.கே.ரெட்டி அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இயக்கமான ஃபிட் இந்தியாவை மக்கள் இயக்கமாக மாற்றுவதே பிரதமரின் நோக்கமாகும். இதன் மூலம் அனைத்து வயதினரும் தங்கள் அன்றாட வாழ்க்கையில் உடற்பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறது. மேலும், இந்த இயக்...
தடுப்பூசிகள் போட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பராகான்!

தடுப்பூசிகள் போட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பராகான்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
தடுப்பூசிகள் போட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பராகான்! இந்தி திரையுலக பிரபல பெண் இயக்குனர் பராகான். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார். இதற்கான படப்பிடிப்பில் பராகான் கலந்து கொண்டார். அவரோடு படப்பிடிப்பில் இன்னொரு நடுவராக இருக்கும் நடிகை ஷில்பா ஷெட்டியும் பங்கேற்றார். இந்த நிலையில் பராகானுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. 2 தடுப்பூசிகள் போட்ட பிறகும் அவருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பராகான் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் இரண்டு தடவை கொரோனா தடுப்பூசி போட்டு இருக்கிறேன். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுடன் தான் பணியாற்றினேன். ஆனாலும் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும்...