செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

சீனியர் கலைஞன் ஜனகராஜிற்கு விஜய் சேதுபதி செய்த மரியாதை

சீனியர் கலைஞன் ஜனகராஜிற்கு விஜய் சேதுபதி செய்த மரியாதை

HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள்
  சீனியர் கலைஞன் ஜனகராஜிற்கு விஜய் சேதுபதி செய்த மரியாதை J.B.J பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ஜெயசீலன் தயாரித்துள்ள படம் " ஒபாமா " இந்த படத்தில் பிரித்வி பாண்டியராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக பூர்நிஷா நடித்துள்ளார். மற்றும் ஜனகராஜ், கே.எஸ்.ரவிக்குமார், இயக்குனர் விக்ரமன், ரமேஷ் கண்ணா, தயாரிப்பாளர் T.சிவா,தளபதி தினேஷ், கோதண்டம்,கயல் தேவராஜ், செம்புலி ஜெகன் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் சிறப்பு தோற்றத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்துள்ளார். ஒளிப்பதிவு - தினேஷ் ஸ்ரீனிவாஸ் இசை - ஸ்ரீகாந்த் தேவா பாடல்கள் - கவிப்பேரரசு வைரமுத்து எடிட்டிங் - B.லெனின் நடனம் - சேகர் ஸ்டண்ட் - தபதி தினேஷ் மக்கள் தொடர்பு - மௌனம் ரவி, மணவை புவன் தயாரிப்பு - ஜெயசீலன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - நானி பாலா. படம் பற்றி இயக்குனர் நானி பாலா கூறியதாவது.. ...
உலக அழகி இறுதிப் போட்டி தள்ளிவைப்பு: இந்திய அழகி உள்பட 17 பேருக்கு கொரோனா!

உலக அழகி இறுதிப் போட்டி தள்ளிவைப்பு: இந்திய அழகி உள்பட 17 பேருக்கு கொரோனா!

HOME SLIDER, NEWS, செய்திகள்
உலக அழகி இறுதிப் போட்டி தள்ளிவைப்பு: இந்திய அழகி உள்பட 17 பேருக்கு கொரோனா! 2021-ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி போர்டோரிகோ நாட்டில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக பல்வேறு நாட்டு அழகிகள் அங்கு குவிந்தனர். இதில் இந்தியா சார்பில் மானசா வாரணாசி பங்கேற்றுள்ளார். உலக அழகி பட்டத்துக்கான இறுதிப்போட்டி நேற்று இரவு நடைபெறுவதாக இருந்தது. இந்தநிலையில் உலக அழகிப்போட்டி தள்ளி வைக்கப்படுவதாக போட்டி அமைப்பாளர்கள் திடீரென்று அறிவித்தனர். போட்டியில் பங்கேற்றுள்ள அழகிகளில் 17 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி படுத்தப்பட்டது. இதில் இந்திய அழகி மானசா வாரணாசிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து உலுக அழகி போட்டி அமைப்பாளர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 2021-ம் ஆண்டுக்கான உலக அழகி போட்டியில் பங்கேற்பாளர்களில் சிலருக்கு கொரோன...
தெருநாய்களுக்கு உணவளித்த பெண்ணிற்கு ரூ.8 லட்சம் அபராதம்!

தெருநாய்களுக்கு உணவளித்த பெண்ணிற்கு ரூ.8 லட்சம் அபராதம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தெருநாய்களுக்கு உணவளித்த பெண்ணிற்கு ரூ.8 லட்சம் அபராதம்! நவிமும்பையில் உள்ள என்.ஆர்.ஐ. ஹவுசிங் காம்ப்ளக்ஸ் கட்டிடத்தில் 40 குடியிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்பை சேர்ந்த பெண் அன்சு சிங். இவர் தெருநாய்களுக்கு கட்டிட வளாகத்தில் உணவளித்து வந்தார். இதனால் காம்ப்ளக்ஸ் நிர்வாகம் அப்பெண்ணை நாய்களுக்கு உணவு வழங்க தடை விதித்தது. ஆனால் அன்சு சிங் இந்த தடையை மீறி உணவளித்து வந்தார். இதனால் கட்டிட வளாகத்தில் உணவளித்த குற்றத்துக்காக ஹவுசிங் காம்ப்ளக்ஸ் நிர்வாகம் நாள்தோறும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் முதல் விதிக்கப்பட்ட அபாரதம் ரூ.8 லட்சம் வரையில் எட்டி இருப்பதாகவும், இது சட்டவிரோதமானது என அன்சு சிங் குற்றம்சாட்டி உள்ளார். இதே போல மற்றொரு பெண்ணும் தெருநாய்களுக்கு உணவளித்ததாக ரூ.6 லட்சம் வரையில் அபராதம் விதித்தது. இது பற்றி ஹவுசிங் காம்ப்ளக்ஸ் செயலாளர் வினிதா ஸ்ரீ...
ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் விடுதியில் சாப்பிட்ட 8 பேர் உயிரிழப்பு?: பெண் ஊழியர்கள் சாலை மறியல்!

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் விடுதியில் சாப்பிட்ட 8 பேர் உயிரிழப்பு?: பெண் ஊழியர்கள் சாலை மறியல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் விடுதியில் சாப்பிட்ட 8 பேர் உயிரிழப்பு?: பெண் ஊழியர்கள் சாலை மறியல்! திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே ஜமீன்கொரட்டூரில் தனியார் கப்பல் என்ஜினீயரிங் கல்லூரி வளாகம் உள்ளது. தற்போது செயல்படாமல் உள்ள இந்த கல்லூரி வளாகத்தில் உள்ள 7 தளங்கள் கொண்ட மாணவர் விடுதியை, காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் செயல்படும் தனியார் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்காக  வாடகைக்கு எடுத்துள்ளது. இதில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் தங்கி உள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு இங்கு தங்கி உள்ள  பெண் ஊழியர்களுக்கு 400 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே அவர்களை சக ஊழியர்கள் ஆம்புலன்ஸ் மூலம் பூந்தமல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இது குறி...
நெருப்போடு விளையாடும் கீர்த்தி பாண்டியன்!

நெருப்போடு விளையாடும் கீர்த்தி பாண்டியன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, நடிகைகள்
  80களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் அருண்பாண்டியன். அதிரடி படங்களுக்கு புகழ்பெற்றவர். பின்னர் தயாரிப்பாளராகி பல்வேறு பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்தார். அவரது மகள் கீர்த்தி பாண்டியன், தும்பா படம் மூலம் அறிமுகமான இவர் அன்பிற்கினியாள் படம் மூலம் கவனிக்கப்பட்டார். அப்பா - மகள் உறவு குறித்து பேசிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்திற்கு பிறகு ஷாலினி இயக்கத்தில் உருவாகும் 'கண்ணகி' படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்படும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கீர்த்தி பாணியன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருவார். இதற்கு ரசிகர்கள் பல லைக்குகளை குவிப்பார்கள். இந்நிலையில், கீர்த்தி பாண்டியன் நெருப்போடு விளையாடும் வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிற...
சர்க்கரைத் தூக்கலாய் ஒரு புன்னகை பாடல் வெளியீடு

சர்க்கரைத் தூக்கலாய் ஒரு புன்னகை பாடல் வெளியீடு

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
  ஏழை ரசிகர்கள் தர்ற பணம் தான் உங்களை கோடிஸ்வரர்கள் ஆக்குகிறது " சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை " படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கதாநாயகர்களை சரமாரியாக கேள்விகேட்ட தயாரிப்பாளர் K.ராஜன் நபீஹா மூவீஸ் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் நுபாயஸ் ரகுமான் தயாரித்துள்ள படத்திற்கு கவித்துவமாக " சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை " என்று பெயர் வைத்துள்ளனர் நடிகர் ருத்ரா நடிப்பில் மகேஷ் பத்மநாபன் இயக்கியுள்ள இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. படக்குழு உள்பட விழாவில் பல்வேறு திரை பிரமுகர்கள் கலந்துகொண்டனர். விழாவில் கலந்துகொண்டு தயாரிப்பாளர் பி.டி செல்வகுமார் பேசியதாவது, "இப்படியொரு அருமையான விழாவில் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் ஆர்.வி உதயகுமார், பேரரசு போன்றோர் கலந்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் ...
ஷாக் கொடுக்கும் “இறுதி பக்கம்” கோடங்கி விமர்சனம்

ஷாக் கொடுக்கும் “இறுதி பக்கம்” கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, விமர்சனம்
  அடேய் யார்ரா நீ... மொத படத்துலயே இப்படி ஒரு கதை சொல்ல முடியும் அதையும் அழகா சொல்ல முடியும்னு காட்டியிருக்கும் "இறுதி பக்கம்" இயக்குனர் மனோ கண்ணதாசன்... தம்பி நல்ல எதிர்காலம் இருக்கு உனக்கு. தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத கதைன்னு பட ரிலீசுக்கு முன்னாடி அலப்பறை கொடுத்த பல இயக்குனர்களை பட ரிலீசுக்கு அப்புறமா தேடினாலும் கிடைக்க மாட்டாங்க... ஆனா இந்த இறுதி பக்கம் கதையும், அது சொன்ன விதமும் கிளைமாக்ஸ் என எல்லாமும் தமிழ் சினிமாவுக்கு ரொம்ப புதுசு. ராஜேஷ் பாலகிருஷ்ணன் ரொம்ப ஜாலியா வந்து அழுத்தமா பதிந்து போகிறார். இயல் ஆக வந்திருக்கும் ஹீரோயின் அம்ருதா நல்ல அழகி அதே நேரம் வெயிட்டான ரோலை ரொம்ப ஈசியா சொல்லிட்டு போறதால அம்ருதா அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகலாம். காதல் எது காமம் எது செக்ஸ் அப்படின்னா என்னன்னு தனித்தனியா சொல்றதுலயும் இயக்குனர் மனோ தனி அழகுடா தம்பி. ஜெனீபரா நடிச...
சிவகார்த்திகேயன் நடிப்பில் ஜலபுலஜங்கு பாடல்!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஜலபுலஜங்கு பாடல்!!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சிவகார்த்திகேயன் நடிப்பில் ஜலபுலஜங்கு பாடல்!! சி.பி. சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரித்து, நடித்திருக்கும் திரைப்படம் ‘டான்’. இப்படத்தில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, சூரி ஆகியோரும் நடித்துள்ளனர்.  கல்லூரி வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘ஜலபுலஜங்கு’ பாடல் வெளியாகி ஒரு மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இப்பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரோகேஷ் இப்பாடல் வரிகளை எழுதியுள்ளார். இப்படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது....
கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் ரைட்டர்!

கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் ரைட்டர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் ரைட்டர்! பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய பா இரஞ்சித் தொடர்ந்து பல படங்களை மக்களுக்கு படைத்து வருகிறார். தற்போது அறிமுக இயக்குனர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி, திலீபன், இனியா மற்றும் ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியிருக்கும் “ரைட்டர்” படத்தினை தயாரித்திருக்கிறார். இப்படத்திற்கு “96” பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. காவல்துறையில் எழுத்தர் (ரைட்டர்) பணிபுரியும் கதாபாத்திரமாக தோன்றுகிறார் சமுத்திரக்கனி. காவல்நிலையத்தில் ரைட்டர்களின் வலியை அழுத்தமாக இயக்குனர் பதிவு செய்திருப்பதை படத்தின் டிரைலர் மூலம் காண முடிந்தது. ‘போலீஸ் பத்தி அவதூறு பரப்பவே ஒரு கூட்டம் இருக்கு’... ‘காக்கிகளின் சாம்ராஜ்யத்தில் தமிழகம...
தமிழகம் முழுவதும் தடையை மீறி அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழகம் முழுவதும் தடையை மீறி அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
தமிழகம் முழுவதும் தடையை மீறி அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்! தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்ற கோரி தமிழ்நாடு முழுவதும் இன்று அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல்-டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாக குறைக்க வேண்டும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்க வேண்டும், வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு வழங்க வேண்டும், பொங்கல் கொண்டாட அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகை அறிவிக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தேர்தல் நேரத்தில் தி.மு.க. அறிவித்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றாததை கண்டித்தும் மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்திருந்தனர். ...