வாக்குச்சாவடி அலுவலர்கள் பயிற்சி வகுப்பில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்பிச்சென்ற ஆசிரியர்கள் !
வாக்குச்சாவடி அலுவலர்கள் பயிற்சி வகுப்பில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்பிச்சென்ற ஆசிரியர்கள் !
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிறசி வகுப்பு ராணியார் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இந்த பயிற்சி வகுப்பானது காலை 9.30 மணி முதல் தொடங்கி மாலை வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பயிற்சியில் பங்கு பெறுபவர்களுக்கு வசதியாக மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் பயிற்சி நடைபெற்றதை நேற்று மதியம் 12.30 மணிக்கு மேல் கலெக்டர் உமாமகேஸ்வரி ஆய்வு மேற்கொண்டு சென்றார். மதியம் 1 மணிக்கு மேல் உணவு இடைவேளை விடப்பட்டது.
மேலும் மதிய உணவு அங்கேயே பொட்டலமாக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டன. அந்த நேரத்தில் ஆசிரியர்கள் பலர் உணவு பொட்டலங்களை வாங்கிவிட்டு வெளியே செல்ல முயன்றனர். மேலும் சிலரும் வெளியில் செல்ல முயன்றனர். இதனால் பள்ளியின் நுழைவு...









