செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

4 ஆயிரம் கிலோமீட்டர் பைக் டிரிப் சென்ற அஜித்!

4 ஆயிரம் கிலோமீட்டர் பைக் டிரிப் சென்ற அஜித்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் அஜித், சுமார் 4 ஆயிரம் கிலோமீட்டர் பைக் டிரிப் சென்றுள்ளாராம். நடிகர் அஜித் வாரணாசியில் உள்ள ரோட்டோர கடையில் உணவு அருந்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் சில தினங்களுக்கு முன் வெளியாகி வைரலானது. அவர் எதற்காக அங்கு சென்றார் என்பது குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் அஜித், சிக்கிமிற்கு பைக் டிரிப் சென்றதாகவும், செல்லும் வழியில் வாரணாசியில் உணவு அருந்தியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது என்றும் கூறப்படுகிறது. சென்னையில் இருந்து சிக்கிமிற்கு சென்று வர சுமார் 4 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்யவேண்டும். இதன்மூலம் நடிகர் அஜித் சுமார் 4 ஆயிரம் கிலோமீட்டர் பைக் டிரிப் சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது....
கொல்கத்தாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டதும் மயங்கிய நர்ஸ்!

கொல்கத்தாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டதும் மயங்கிய நர்ஸ்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நாடு முழுவதும் சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. அதன்படி மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 35 வயதான நர்ஸ் ஒருவருக்கு திடீரென உடல்நல குறைவும், மயக்கமும் ஏற்பட்டது. உடனடியாக அவர் நில் ரத்தன் சிர்சார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், தடுப்பூசி போட்டதால் அவர் மயக்கமடைந்ததற்கான காரணம் குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் அனைத்தும் இயல்பாகவும், ரத்த அழுத்தம், ஆக்சிஜன் அளவு உள்ளிட்டவை அனைத்தும் நல்ல நிலையில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் அந்த நர்சுக்கு நாள்பட்ட ஆஸ்துமா இருந்ததாக கூறி...
இந்தியாவில் பறவை காய்ச்சல் பாதிப்புக்கு 5ஜி சோதனை காரணமா?!

இந்தியாவில் பறவை காய்ச்சல் பாதிப்புக்கு 5ஜி சோதனை காரணமா?!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இந்தியாவில் பறவை காய்ச்சல் பாதிப்புக்கு 5ஜி சோதனை காரணமா?! இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த பாதிப்புக்கு ரிலையன்ஸ் ஜியோ துவங்கி இருக்கும் 5ஜி சோதனை சான் காரணம் என கூறி வைரலாகும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பறவைகள் இறப்புக்கு ஜியோ 5ஜி சோதனை தான் காரணம், ஆனால் பறவை காய்ச்சல் தான் காரணம் என மக்கள் நம்ப வைக்கப்படுகின்றனர் என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், மத்திய அரசு இந்தியாவில் 5ஜி சோதனை துவங்க இதுவரை அனுமதி அளிக்கவில்லை என தெரியவந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஏவியன் காய்ச்சல் தொற்று அதிகரித்து இருப்பதே பறவைகள் இறக்க முக்கிய காரணம் ஆகும். மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவி சங்கர் பிரசாத் இந்தியாவில் 5ஜி தொழில்...
அரக்கோணம் தொகுதியும்.. திமுக செண்டிமெண்ட்டும்!

அரக்கோணம் தொகுதியும்.. திமுக செண்டிமெண்ட்டும்!

HOME SLIDER, NEWS, politics
    . அரக்கோணம் தொகுதியும்.. திமுக செண்டிமெண்ட்டும்! தமிழக சட்டசபை தேர்தலுக்கு எல்லா அரசியல் கட்சிகளும் தயாராகி வருகிறது. ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு விதமான அரசியல் நகர்வுகளை செய்து வருகிறது. திமுகவை பொறுத்தவரை பி.கே என்றழைக்கப்படும் நபரின் ஐபேக் டீமை நம்பி களத்தில் இறங்கி இருக்கிறது. நடைபெற உள்ள 2021 சட்டசபை தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சியை பிடிக்கும் என யாரோ கொளுத்தி போட... முந்தைய வரலாற்றை திருப்பி பார்த்த திமுக இந்த முறை எப்படியும் தொகுதியை கைப்பற்றி விட வேண்டும் என முனைப்புடன் வேட்பாளரை தேடியது. இதற்கு காரணம் அரக்கோணம் தனித் தொகுதி பட்டியல் இனத்தவருக்கான ரிசர்வ் தொகுதி. ஏற்கனவே கடந்த 2 முறையும் அங்கே ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வாக இருப்பது சு.ரவி. ஆளுங்கட்சி எம் எல் ஏ. என்பதால் செல்வாக்குக்கும், பணத்திற்கும் குறைவு இருக்காது. ...
சீனாவில் ஐஸ்கிரீம் மூலமும் பரவிய கொரோனா

சீனாவில் ஐஸ்கிரீம் மூலமும் பரவிய கொரோனா

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம்
சீனாவில் ஐஸ்கிரீம் மூலமும் பரவிய கொரோனா ஜப்பானில் கொரோனா பரவலைத் தடுக்க கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், சீனாவில் ஐஸ்கிரீம் மூலமும் கொரோனா பரவியிருக்கும் தகவல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் ஐஸ்கிரீம் மூலமும் கொரோனா வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டியன்ஜின் என்ற இடத்தில் இயங்கும் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம்களில் கொரோனா தொற்றை கண்டறிந்த அதிகாரிகள், அந்த ஆலையை மூடி சீல் வைத்தனர். மேலும், அங்கிருந்த பணியாளர்களை தனிமைபடுத்தி, கண்காணித்து வருகின்றனர்...
கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் உயிரிழப்பு – நார்வேயில் அதிர்ச்சி

கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் உயிரிழப்பு – நார்வேயில் அதிர்ச்சி

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம்
கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் உயிரிழப்பு - நார்வேயில் அதிர்ச்சி கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை 94 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் 20 லட்சத்தைக் கடந்துள்ளது. இதனால், கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாட்டில் உள்ள மருத்துவர்களும் இறங்கியுள்ளனர். சில நாடுகளில் உள்ள தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு சோதனை முயற்சி நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், நார்வேயில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் உயிரிழந்திருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ப்ளூம் பெர்க் வெளியிட்டுள்ள தகவலின்படி, நார்வேயில் கொரோனா வைரஸூக்கு எதிரான ஃபைசர் பயோன்டெக் (Pfizer-Bio NTech) என்ற தடுப்பூசி செலுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த 23 ...
கொரோனா வைரஸ்,  கட்டுப்பாடு எதுவும் இல்லாத உலகின் முதல் நாடு நியூசிலாந்து! 

கொரோனா வைரஸ்,  கட்டுப்பாடு எதுவும் இல்லாத உலகின் முதல் நாடு நியூசிலாந்து! 

helth tips, HOME SLIDER, politics, உலக செய்திகள், உலகம்
  கொரோனா வைரஸ்,  கட்டுப்பாடு எதுவும் இல்லாத உலகின் முதல் நாடு நியூசிலாந்து! உலகம் முழுவதும் கடந்த ஒரு வருடமாக கொரோனா வைரஸ் மனித இனத்தை ஆட்டி படைத்து வரும் நிலையில் இன்னும் அமெரிக்கா இந்தியா பிரேசில் உள்பட பல நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் இந்த நிலையில் உலகின் முதல் கொரோனா இல்லாத நாடு என நியூசிலாந்து நாடு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா இல்லாத நாடாக அதிகாரபூர்வமாக நியூசிலாந்து நாட்டில் அறிவித்ததை அடுத்து ஊரடங்கு உள்பட அனைத்துக் கட்டுப்பாடுகளும் விலக்கி கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது கடந்த சில நாட்களாக ஒருவர்கூட கொரோனாவால் பாதிக்கப் படவில்லை என்பதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் கூட சிகிச்சை பெற்று வரவில்லை என்பதால் கொரோனா நோய் இல்லாத நாடு என நியூசிலாந்து அறிவிக்கப்பட்டது மேலும் கொரோனா தொடர்பான கட்டுப்பாடு எதுவும் இல்லாத உலகி...
ஆட்சி செய்பவர்கள்  கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதது ஏன்?  காங்கிரஸ் எம்.பி. கேள்வி

ஆட்சி செய்பவர்கள்  கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதது ஏன்?  காங்கிரஸ் எம்.பி. கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆட்சி செய்பவர்கள்  கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதது ஏன்?  காங்கிரஸ் எம்.பி. கேள்வி இந்தியாவில்  பாரத் பயேடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் மற்றும் சீரம்  கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளை அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, இரு தடுப்பூசிகளும் போடும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. முன்கள பணியாளர்களுக்கு  கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக போடப்படுகிறது. இந்த நிலையில், ஆட்சி செய்பவர்கள்  கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதது ஏன் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பியுமான மனிஷ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து  மனிஷ் திவாரி கூறியதாவது: அரசு பிரதிநிதிகள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதது ஏன்?. பிற நாடுகளில் அரசின் சார்பில் பிரதமர்களும், சுகாதார அமைச்சர்களும் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளும்போது இந்தியாவில் மட்டும் அரசுப் பிரதிநிதிகள...
புதுவையில் காங்கிரஸை கழற்றிவிடும் திமுக… முதல்வர் வேட்பாளர் இவர் தான்!

புதுவையில் காங்கிரஸை கழற்றிவிடும் திமுக… முதல்வர் வேட்பாளர் இவர் தான்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
புதுவையில் காங்கிரஸை கழற்றிவிடும் திமுக… முதல்வர் வேட்பாளர் இவர் தான்! தமிழகத்துடன் புதுச்சேரி யூனியன் பிரதேசமும் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. இங்கு திமுக முன்னெடுக்கும் வியூகம் அரசியல் அரங்கை புருவம் உயர்த்த வைத்திருக்கிறது. ஆம், காங்கிரஸை கழற்றிவிட்டு அங்கு களம் காண இருக்கிறது திமுக. இதற்காக முதல்வர் வேட்பாளரையும் தயார் செய்துவிட்டது. தமிழகத்தின் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஜெகத்ரட்சகன் தான் திமுக தயார் செய்து வைத்திருக்கும் அந்த முதல்வர் வேட்பாளர்! சுமார் 11 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட அரக்கோணம் தொகுதியில் வெற்றி பெற்ற ஜெகத், அதைவிட சுமார் ஒரு லட்சம் வாக்குகள் குறைவாகக் கொண்ட மொத்த புதுவைக்கும் முதல்வர் ஆவது பெரிய காரியம் இல்லை என களம் இறங்கிவிட்டார். திங்கட்கிழமை பாண்டிச்சேரியில் திமுக மாநில நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது...
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 12 காளைகள் அடக்கியவருக்கு கார் பரிசு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 12 காளைகள் அடக்கியவருக்கு கார் பரிசு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  முனியாண்டி கோவில் காளை உள்பட 3 கோவில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அதனை யாரும் பிடிக்கக்கூடாது என்பதால் காளையர்கள் ஓரங்கட்டி நின்றனர். அதன்பின் மாலை 5 மணி வரை ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டன. மொத்தம் 719 காளைகள் வாடிவாசல் வழியாக சீறிபாய்ந்தன; 700 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர். இதில் 12 மாடுகளை பிடித்த கண்ணன் என்ற வீரர் காரை பரிசாக வென்றார். 9 காளைகளை பிடித்த கருப்பணனுக்கு 2-வது பரிசும், 8 காளைகளை பிடித்த சக்தி என்பவருக்கு 3ம் பரிசும் வழங்கப்பட்டது....