நிர்மலாதேவியின் ரகசிய டைரி சிக்கியது- சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் விசாரணை சூடுபிடித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நிர்மலாதேவியை 5 நாட்கள் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 20-ந்தேதி முதல் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்று 3-வது நாளாக விசாரணை தொடர்கிறது.
விருதுநகரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்தே போலீசார் நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரையில் அவர் வெளியில் எங்கும் அழைத்துச் செல்லப்படவில்லை.
நிர்மலாதேவியை போலீஸ் காவலில் எடுப்பதற்கு முன்னர் அவரால் பாலியல் அழைப்புக்குள்ளான 4 மாணவிகளிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேவாங்கர் கல்லூரியில் ரகசியமாக விசாரணை நடத்தினர். அப்போது மாணவிகள் 4 பேரும் நிர்மலாதேவியின் பாலியல் தொல்லை குறித்து பரபரப்பு தகவல்களை ...









