செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

பொங்கல் பண்டிகை நாட்களில் கோவிலுக்கு செல்ல பொது மக்களுக்கு தடை

பொங்கல் பண்டிகை நாட்களில் கோவிலுக்கு செல்ல பொது மக்களுக்கு தடை

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தமிழக அரசின் புதிய கட்டுப்பாட்டின்படி, 14-01-2022 முதல் 18-01-2022 வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காணும் பொங்கல் நாளான ஜனவரி 16ம் தேதி (ஞாயிறு) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை ஜனவரி 31ம் தேதிவரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் ஒருபகுதியாக  பொங்கல் விடுமுறை நாட்களில்  கோவிலுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு வார நாட்களில் இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்த கட்டுப்பாடுகள் நிறைவடையும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை ஜனவரி 31ம் தேதிவரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்த...
இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் இன்று தொடக்கம்

இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் இன்று தொடக்கம்

HOME SLIDER, sports, விளையாட்டு செய்திகள்
  நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையிலும், இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடர் இன்று தொடங்குகிறது. டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு  அரங்கில் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டிகளை காண ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் இந்த தொடரில் பங்கேற்றுள்ள நிலையில்,  கொரோனா பாதிப்பால் ஆண்கள் இரட்டை ஆட்டங்களில் இருந்து இந்தியாவின் சுமீத் ரெட்டி மற்றும் மனு அத்ரி ஆகியோரும் விலகி உள்ளனர். இந்தியாவின் சாய் பிரனீத்தும் போட்டியில் பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ளார். பி.வி.சிந்து மற்றும் கே.ஸ்ரீகாந்த் ஆகியோர் இந்த தொடரில் சிறப்பாக விளையாடி பட்டம் வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிந்து கடைசியாக 2018-லும், ஸ்ரீகாந்த் 2017-லும் பட்டத்தை வென்றுள்ளனர். மேலு...
இன்றைய முக்கியச் செய்திகள் 11.01.22

இன்றைய முக்கியச் செய்திகள் 11.01.22

HOME SLIDER, kodanki headlines news, செய்திகள்
முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் பெயரில், மதுரையில் சர்வதேச தரத்தில் நூலகம் அமைக்கப்படும் என கடந்த சட்டப் பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். மதுரையில் கலைஞர் நினைவு நூலகத்திற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார். அஜித்குமார் நடித்துள்ள வலிமை திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டதற்கு, வேதனை தெரிவித்து அவரது ரசிகர்கள் கோவையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து இன்று முதல் வியாழக்கிழமை வரை நான்காயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தயாராகி வரும் நிலையில், 300 மாடுபிடி வீரர்கள், 150 பார்வையாளர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட...
ரசிகர்களை ஏமாற்றிய அஜீத்! திடீர் போஸ்டரால் பரபரப்பு

ரசிகர்களை ஏமாற்றிய அஜீத்! திடீர் போஸ்டரால் பரபரப்பு

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
ரசிகர்களை ஏமாற்றிய அஜீத்! திடீர் போஸ்டரால் பரபரப்பு அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் வலிமை. இப்படம் பொங்கல் தினத்தில் வெளியாக இருந்தது. இந்நிலையில் படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்த நிலையில் ஓமிக்ரான் பரவல் தீவிரம் காரணமாக தள்ளி வைக்கப்படுகிறது என அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார். பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்படம் வெளியாகவில்லை என்ற வேதனையில் அதனை வெளிப்படுத்தும் விதமாக அஜித் ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இது சமூக வலைத்தளத்தில் அதிவேகமாக பரவிவருகிறது கோவை ரயில் நிலையம் அருகே அஜித் புகைப்படங்களுடன் அடங்காத அஜீத் குரூப்ஸ் கோவை என ஒட்டப்பட்ட அந்த போஸ்டரில் குறிப்பிட்டிருப்பது, "ஏமாற்றம்! ஏமாற்றம்!! ஏமாற்றம்!!! மனசு ரொம்ப வலி(மை)க்குது it's ok" என்று அச்சிட்டு அவர்களின் மனக்குமுறல்களை போஸ்ட...
நான் செய்த முட்டாள்தனம் நடிகை வனிதா விஜயகுமார் ஓப்பன் டாக்

நான் செய்த முட்டாள்தனம் நடிகை வனிதா விஜயகுமார் ஓப்பன் டாக்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள், வீடியோ
  நான் செய்த முட்டாள்தனம் நடிகை வனிதாவிஜயகுமார் ஓப்பன் டாக் I "my mistakes" actress vanitha open talk   https://www.youtube.com/watch?v=VabE3aX9Xa0
பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா ஏற்பாடுகள் மும்முரம்!

பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா ஏற்பாடுகள் மும்முரம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா ஏற்பாடுகள் மும்முரம்! பழனி முருகன் கோவிலில் வருகிற 12-ந்தேதி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக வார இறுதி நாட்களில் தரிசன தடை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. எனினும் பழனியில் தைப்பூச திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக பக்தர்கள் ஒருவழி பாதையில் மலைக்கோவிலுக்கு செல்லும் குடமுழுக்கு அரங்கு பகுதிகளில் நிழற்பந்தல் போடும் பணி நடக்கிறது. இதேபோல் தற்காலிக பஸ்நிலையம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது....
குறைந்த விலை 5ஜி ஐபோன் வெளியீட்டு விவரம்!

குறைந்த விலை 5ஜி ஐபோன் வெளியீட்டு விவரம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
குறைந்த விலை 5ஜி ஐபோன் வெளியீட்டு விவரம்! ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்.இ. 3 மாடல் வெளியீடு பற்றி பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள், புதிய ஐபோன் எஸ்.இ. 3 மாடலை இந்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய 27 இன்ச் ஐமேக், எம்1 ப்ரோ மற்றும் எம்1 மேக்ஸ் சிப்செட்கள் கொண்ட டாப் எண்ட் மேக் மினி மாடல்களையும் ஆப்பிள் அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஐபோன் எஸ்.இ. 3 மாடலில் ஏ14 அல்லது ஏ15 பயோனிக் சிப்செட் மற்றும் 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஒட்டுமொத்த தோற்றம் முந்தைய ஐபோன் எஸ்.இ. 2 போன்றே காட்சியளிக்கும். மேலும் டச் ஐ.டி. சென்சார் ஹோம் பட்டனுடன் பொருத்தப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும...
நாடு முழுவதும் இன்று முதல் சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி!

நாடு முழுவதும் இன்று முதல் சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளது. ஒமைக்ரான் வைரசும் பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி டோஸ் அளவு 151.57 கோடியை தாண்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அடுத்த கட்டமாக 2022 ஜனவரி 10 முதல் சுகாதாரப் பாதுகாப்பு,  முன்னணிப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தொடங்கும் என்று டிசம்பர் 25ந்தேதி அன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அதன்படி இன்று  கொரோனா பூஸ்டர் டோஸ், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்னணிப் பணியாளர்களுக்கு வழங்கும் நடவடிக்கை தொடங்குகிறது. கூட்டு நோய்களால் பாதிக்கப்பட்ட 60 வயதை தாண்டிய மூத்த குடிமக்கள் பூஸ்டர் டோஸ் பெறுவதற்காக மருத்துவரின் சான்றிதழ் அல்லது மருந்துச் சீட்டைச் சமர்ப...
குடிமகனின் விருப்பத்தின்படி கருணை கொலை செய்த கொலம்பிய அரசு!

குடிமகனின் விருப்பத்தின்படி கருணை கொலை செய்த கொலம்பிய அரசு!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள்
குடிமகனின் விருப்பத்தின்படி கருணை கொலை செய்த கொலம்பிய அரசு! லத்தீன் அமெரிக்கா நாடான கொலம்பியாவை சேர்ந்தவர் விக்டர் எஸ்கோபர் (60). நீரிழிவு நோய் மற்றும் இதய கோளாறினால் பாதிக்கப்பட்டிருந்த இவர், உடல்நிலை மோசமடைந்து எப்போதும் வீல் சேரிலேயே நடமாடும் நிலை ஏற்பட்டது. மேலும், நுரையீரல் பாதிப்பால் அவருக்கு சுவாசிப்பதிலும் பிரச்னை ஏற்பட்டது. இதுபோன்ற பல்வேறு நோய்கள் இருந்ததால் தன்னை கருணை கொலை செய்ய அனுமதிக்குமாறு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், அரசிடம் பலமுறை இவர் மனு அளித்தார். ஆனால், அவை  நிராகரிக்கப்பட்டன. இதனால், அவர் கடும் மன வேதனை அடைந்தார். ‘குணப்படுத்த முடியாத நோய் உள்ளவர்களை  கருணை கொலை செய்யலாம்,’ என கடந்த 1997ம் ஆண்டு கொலம்பியா அரசு சட்டம் கொண்டு வந்தது. ஆனால், எஸ்கோபருக்கு அப்படிப்பட்ட நோய்  இல்லை. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்து வெற்றியும் பெற்றார். ...