துப்பாக்கிச்சூடு நடத்தியவரை கட்சியில் இணைத்து 2 மணிநேரத்தில் நீக்கிய பா.ஜ.க
மோடி அரசு கடந்தாண்டு நிறைவேற்றிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடுமுழுவதும் கடும் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக டெல்லி ஷாகீன்பாக் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் மூன்று மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அதேபோல் டெல்லியில் நடைபெற்ற ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் மற்றும் புறநகர் பகுதியில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை மோடி அரசு காவல்துறை - துணைராணுவம் கொண்டு கலைத்தது.
அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறையை ஏற்படுத்தும் நோக்கில், இந்துத்வா கும்பல் பல வகைகளில் முயற்சித்தது. அதில் ஷாகீன்பாக் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது கபில் பைஸ்லா என்ற கபில் குர்ஜார் என்பவர் போராட்டம் நடைபெற்ற இடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
கடந்த பிப்ரவரி 1ம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போர...









