கூஜ்பெகரில் நடந்தது இனப்படுகொலை -மம்தா
மேற்கு வங்காள மாநிலத்தில் நான்காம் கட்ட தேர்தலின்போது, கூஜ்பெகர் மாவட்டம், சிடால்குச்சி தொகுதியில் உள்ள 126வது வாக்குச்சாவடியில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. மத்திய பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது பாஜகவின் சதி என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி வருகிறார். துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து கூஜ்பெகர் மாவட்டத்திற்குள் அரசியல் கட்சி தலைவர்களி நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சிலிகுரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கூஜ்பெகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டது இனப்படுகொலை என்றும், மார்பு மற்றும் கழுத்தை குறிவைத்து சுடப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார். சிஐஎஸ்எப் வீரர்கள், தொழிலக விவகாரங்களை கையாள மட்டுமே பயிற்சி பெற்...









