கமல் -திமுக 2 பலவீனங்கள் ஒன்றிணைந்து அதிமுக என்ற இமயமலையோடு மோதப் பார்கிறார்கள் – அமைச்சர் ஜெயக்குமார்
கமல் -திமுக 2 பலவீனங்கள் ஒன்றிணைந்து அதிமுக என்ற இமயமலையோடு மோதப் பார்கிறார்கள் - அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘தனித்து போட்டி என கூறிவந்த கமல் தற்போது கூட்டணிக்கு ஆள் பிடிக்கும் வேலையை பார்கிறார். கூட்டணி அமைப்பது கட்சியின் விருப்பம் என்றும், கூட்டணி அமைக்கும்போது ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் உடன்பட வேண்டும் எனவும், கமல் ரஜினியுடன் இணைவது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் கூறினார். மேலும், அதிமுக மாபெரும் இயக்கம் என கூறிய அவர், 2021ல் அதிமுக தான் ஆட்சி அமைக்கும் எனவும், அதிமுகவை விட வலிமைப்பெற்ற சக்தி எதுவும் இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘கமலின் விஸ்வரூபம் படத்தை தடை செய்தபோது எம்.ஜி.ஆர் பற்றி பேசாதது ஏன்? என கேள்வி எழுப்பிய அவர், உள் ஒன்...









