செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற  வலியுறுத்தி  எதிர்க்கட்சி தலைவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற  வலியுறுத்தி  எதிர்க்கட்சி தலைவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற  வலியுறுத்தி  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் ராகுல்காந்தி, சரத்பவார், டி.ராஜா உள்ளிட்டோர் சந்தித்தனர்.   இந்த சந்திப்புக்கு பிறகு கூட்டாக எதிர்க்கட்சியினர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர்.அப்போது அவர்கள் கூறியதாவது:   விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் திரும்பப் பெறுவது மிகவும் முக்கியமானது என ஜனாதிபதியிடம் தெரிவித்தோம்.  முறையான விவாதம் இன்றி வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. வேளாண் மசோதா குறித்து ஆழமான விவாதம் நடத்த வேண்டும் என நாங்கள் கோரினோம். இந்த மசோதாவை தேர்வு குழுவுக்கு அனுப்ப வேண்டும் எனவும் மத்திய அரசைக் கேட்டுக்கொண்டோம். ஆனால், எங்களின் எந்த பரிந்துரையும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவசர கதியில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன” என்றனர்...
பாமக- வன்னியர் சங்கத்தை தடை செய்ய வேண்டும் -ஐகோர்ட்டில் முறையீடு

பாமக- வன்னியர் சங்கத்தை தடை செய்ய வேண்டும் -ஐகோர்ட்டில் முறையீடு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்க கோரி, பாமக மற்றும்  வன்னியர் சங்கத்தினர், சென்னையில் நேற்று போராட்டம் நடத்தினர். சென்னை வந்த பாமகவினரின் வாகனங்களை தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் தடுத்தனர். இதனால் பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 4 மணி நேரம் போக்குவரத்து முடங்கியது. போராட்டக்காரர்கள் வன்முறையிலும் ஈடுபட்டனர். பெருங்களத்தூரில் ரெயில் தண்டவாளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள், அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கற்களை வீசி அதை தடுத்து நிறுத்தினர். சென்னையின் பல்வேறு இடங்களில் பாமகவினர் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். பாமகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது இந்நிலையில், பொதுமக்களுக்கு இடையூறு...
TR தலைமையில் டிசம்பர் 5ல் புது சங்கம் நிதி திரட்ட தேதி தந்த சிம்பு!

TR தலைமையில் டிசம்பர் 5ல் புது சங்கம் நிதி திரட்ட தேதி தந்த சிம்பு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  TR தலைமையில் டிசம்பர் 5ல் புது சங்கம் நிதி திரட்ட தேதி தந்த சிம்பு! https://youtu.be/3B570nnHetM
பி.எம்.கேர்ஸ் நிதி ஏன் தணிக்கை செய்யப்படவில்லை? பா.ஜனதா ஒரு அரசியல் கட்சி அல்ல, பொய்களின் குப்பை – மம்தா பானர்ஜி

பி.எம்.கேர்ஸ் நிதி ஏன் தணிக்கை செய்யப்படவில்லை? பா.ஜனதா ஒரு அரசியல் கட்சி அல்ல, பொய்களின் குப்பை – மம்தா பானர்ஜி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பி.எம்.கேர்ஸ் நிதி ஏன் தணிக்கை செய்யப்படவில்லை? பா.ஜனதா ஒரு அரசியல் கட்சி அல்ல, பொய்களின் குப்பை - மம்தா பானர்ஜி மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- மத்தியில் உள்ள பா.ஜனதா அரசின் விருப்பத்திற்கு ஏற்ப எனது தலைமையிலான மாநில அரசாங்கம் செயல்படாது. விசாரணை முகமைகள் மூலம் எங்களை அவர்கள் அச்சுறுத்துகிறார்கள். அதற்கெல்லாம் நாங்கள் பயப்படவில்லை. அது (பா.ஜனதா) ஒரு அரசியல் கட்சி அல்ல, பொய்களின் குப்பை. பி.எம்.கேர்ஸ் நிதி எங்கே போய் விட்டது? அதன் எதிர்காலம் என்ன என்று யாருக்காவது தெரியுமா? ஏன் அது தணிக்கை செய்யப்படவில்லை?. கொரோனாவை கட்டுப்படுத்த அவர்கள் எங்களுக்கு என்ன கொடுத்தார்கள். ஆனால் பாடம் எடுக்கிறார்கள். புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக பிரச்சினையில் பா.ஜனதாவை எந்த கட்சிகளும் ஆதரிக்கவில்லை....
டிஆர் தலைமையில் ‘தமிழ் நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’வருகிற டிசம்பர்5ம் தேதி அறிவிப்பு?!

டிஆர் தலைமையில் ‘தமிழ் நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’வருகிற டிசம்பர்5ம் தேதி அறிவிப்பு?!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு பல மாதங்களாக தேர்தல் நடைபெறாமல் சமீபத்தில்தான் தேர்தல் நடந்தது. முரளி ராமசாமி தலைமையில் ஒரு அணியும், டி.ஆர். தலைமையில் ஒரு அணியும் சிலர் சுயேட்சைகளாகவும் போட்டியிட்டனர். கடந்த மாதம் 22ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பின்னர் நடந்த வாக்கு எண்ணிக்கையில் டிஆர் தோல்வியை தழுவினார். முரளி ராமசாமி வெற்றி பெற்றார். அதோடு, சுயேட்சையாக தேர்தலில் நின்ற கதிரேசன் வெற்றி பெற்றார். இந்த சூழலில், இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பலரும் தயாரிப்பாளர்களுக்கு அன்பளிப்புகள் கொடுத்தும், கள்ள வாக்குகள் செலுத்தியும் வெற்றி பெற்றார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.   அதோடு, தோல்வி அடைந்தவர்கள் பதிவாளர் அலுவலகத்தில் தேர்தல் முறையாக நடைபெற வில்லை என புகார் அளித்தார்கள்.   அதேநேரம், தனியாக ஒரு அமைப்பை தொடங்க திட்டமிட்டார்கள். இதற்காக...
தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்

தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்

HOME SLIDER, NEWS, செய்திகள்
இன்று மற்றும் நாளை தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் தெற்கு அந்தமான், அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நேற்று நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதி மற்றும் இந்தியப் பெருங்கடலை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் நிலை கொண்டுள்ளது. அடுத்த 36 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வரும் 2-ந்தேதி தென் தமிழக கடலோர பகுதியை நோக்கி நகரக்கூடும். இன்று மற்றும் நாளை தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிசம்பர் 1-ந்தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில்...
சிவகார்த்திகேயனும், ரகுல் ப்ரீத் சிங்-கும் இனைந்து நடிக்கும் ‘அயலான்

சிவகார்த்திகேயனும், ரகுல் ப்ரீத் சிங்-கும் இனைந்து நடிக்கும் ‘அயலான்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  நடிகர் சிவகார்த்திகேயனும், ரகுல் ப்ரீத் சிங்-கும் இனைந்து நடிக்கும் 'அயலான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய இயக்குனர் ரவிக்குமார் அயலான் படத்தை இயக்குகிறார். ஹீரோவாக சிவகார்த்திகேயனும், ஹீரோயினாக ரகுல் ப்ரீத் சிங்-கும் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் கருணாகரன், யோகி பாபு, பானு பிரியா, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் படதொகுப்பு செய்கிறார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. அயலான் படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் எதிர்பார்த்துவந்த நிலையில், தற்போது படக்குழு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கேஜேஆர் ஸ்டுடியோஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "அயலான் ப...
பேரறிவாளன் உள்பட7 பேர் விடுதலைக்கு திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும்- கனிமொழி

பேரறிவாளன் உள்பட7 பேர் விடுதலைக்கு திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும்- கனிமொழி

HOME SLIDER, politics, செய்திகள்
  பேரறிவாளன் உள்பட7 பேர் விடுதலைக்கு திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும்- கனிமொழி தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி, தி.மு.க. சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணத்தை தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி எம்பி.யுமான கனிமொழி இன்று (ஞாயிற்றுக்கிழமை) சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து தொடங்க உள்ளார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்த அவர், அங்கிருந்து கார் மூலம் நேற்று இரவு ஈரோட்டிற்கு வந்தார். ஈரோட்டுக்கு வந்த கனிமொழி எம்.பி.க்கு தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து  நிருபர்களுக்கு கனிமொழி எம்.பி. பேட்டி அளித்தபோது கூறியதாவது:- விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தேர்தல் பரப்புரை பிரச்சாரத்தை நாளை (இன்று) எடப்பாடியில் தொடங்க உள்ளேன். திமுக தேர்தல் அறிக்கை ...
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி டிச.2-ந்தேதி தமிழகத்தில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி டிச.2-ந்தேதி தமிழகத்தில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு

HOME SLIDER, NEWS, செய்திகள்
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி டிச.2-ந்தேதி தமிழகத்தில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்றும், அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை வலுவடைய வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறது. இந்த நிலையில், புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பின் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும். மேலும், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் டிச.2-ந்தேதி தமிழகத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் டிசம்பர் 2-ந்தேதி தென் தமிழகத்தில் அதி கனமழையும், வட தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....