புதன்கிழமை, ஜூன் 10
Shadow

HOME SLIDER

சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தி உடலுக்கு தீங்கு தரும் சானட்டரி நாப்கின்களை பயன்படுத்த வேண்டாம் நடிகை தியா மிர்சா வேண்டுகோள்

சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தி உடலுக்கு தீங்கு தரும் சானட்டரி நாப்கின்களை பயன்படுத்த வேண்டாம் நடிகை தியா மிர்சா வேண்டுகோள்

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகைகள்
ஐக்கிய நாடுகள் சபையில், இந்தியாவின் சுற்றுச்சுழலுக்கான நல்லெண்ணத் தூதராக பாலிவுட் நடிகை தியா மிர்சா பதவியேற்றிருக்கிறார். கென்யாவின் தலைநகரமான நைரோபியில், ஐக்கிய நாடுகள் சபையின் மூன்றாம் சுற்றுச்சுழல் மாநாடு நடந்தது. இதில் கலந்துகொண்ட தியா மிர்சா “மறுசுழற்சிக்கு எதிரான சானிட்டரி நாப்கின்கள் நம்  நாட்டின் சுற்றுச்சுழலைப் பாதிக்கின்றன. அதனால்தான், நான் மாதவிடாய் காலத்தில் சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டேன். ஒரு நடிகையாக நான் இதைக் கூறுவது கவனத்துக்குரிய விஷயம். ஏனென்றால், பல சானிட்டரி நாப்கின் நிறுவனங்கள் அவர்களின் விளம்பரங்களில் நடிக்க என்னை அணுகினார்கள். ஆனால், நான் அந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டேன்” என்று தெரிவித்தார். மேலும், அவர் கூறுகையில், “பெண்கள் சானிட்டரி நாப்கினுக்குப் பதிலாக, சுற்றுச்சுழலைப் பாதிக்காத, மக்கும் தன்மைகொண்ட நாப்கின்களை (biodegradable napkin...
‘சக்கப்போடு போடு ராஜா’ 2வது ட்ரெய்லர்

‘சக்கப்போடு போடு ராஜா’ 2வது ட்ரெய்லர்

CINI NEWS, HOME SLIDER, Trailer, டிரைலர்கள்
வி.டி.வி.கணேஷ் தயாரித்துள்ள 'சக்கப்போடு போடு ராஜா' படத்தில் சந்தானம் நடித்துள்ளார். இந்தப் படத்தை சேதுராமன் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு சிம்பு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முதல் ட்ரெய்லர் கடந்த மாதம் வெளியானது. படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.   https://youtu.be/fRbIqg5Kz7Q
நாப்கின்  பிரச்னைகளை பேசும் பேட் மேன்

நாப்கின் பிரச்னைகளை பேசும் பேட் மேன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அக்ஷய் குமார் நடிப்பில் இயக்குநர் பால்கி இயக்கியுள்ள திரைப்படம் 'PADMAN'. சோனம் கபூர், ராதிகா ஆப்தே நடித்துள்ள இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. நாப்கினின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் கதையம்சம் கொண்ட இப்படம் வரும் குடியரசுத் தினத்தன்று வெளியாகிறது. இப்படத்தின் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். https://youtu.be/-K9ujx8vO_A...
ஆர்.கே.நகர் தொகுதியை பேசாமல் ஏலம் விடுங்கள்..!  100 கோடியை தாண்டி பண வினியோகம் வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம்..!

ஆர்.கே.நகர் தொகுதியை பேசாமல் ஏலம் விடுங்கள்..! 100 கோடியை தாண்டி பண வினியோகம் வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆர்.கே.நகர் தொகுதியை பேசாமல் ஏலம் விடுங்கள்..! 100 கோடியை தாண்டி பண வினியோகம் வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம்..! தமிழகத்தில் இனி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் பேசாமல் அரசியல் கட்சிகளுக்கு ஏலத்தில் விட்டு விடலாம். எந்த கட்சியோ அல்லது எந்த வேட்பாளரோ அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கிறார்களோ அந்த தொகையை கொண்டு அந்த தொகுதிக்கு தேவையான சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் உட்பட தொகுதியின் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரலாம். இந்த முறையை தேர்தல் ஆணையம் கையாண்டால் பணம் பதுக்கல்... வெட்டு குத்து கலாட்டாக்கள்... கள்ள ஓட்டு புகார்... தேவையற்ற அலைச்சல்கள்... எதுவும் நடக்காது. அரசு பணமும் வீணாகாது. தமிழகத்தில் மட்டும் எப்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் அங்கே ஓட்டுக்கு பணமழை கொட்டுவது சமீபத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏற்கனவே பண மழை புகார் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதியில...
சிக்கல் தீர்ந்து ரிலீஸ் பரபரப்புக்கு ரெடியான தங்கர்பச்சானின் களவாடிய பொழுதுகள்

சிக்கல் தீர்ந்து ரிலீஸ் பரபரப்புக்கு ரெடியான தங்கர்பச்சானின் களவாடிய பொழுதுகள்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஐங்கரன் நிறுவனம் தயாரிப்பில் தங்கர் பச்சானின் இயக்கத்தில் உருவாகும் படம் ‘களவாடிய பொழுதுகள்’. நீண்ட கால காத்திருப்புக்கு பின் இந்த படம் வெளியாகிறது. https://youtu.be/miqHVx0edtI படம் பற்றி கூறிய பிரபுதேவா... “என் வாழ்நாளில் இது வரை நடிக்காத பாத்திரத்தில் என்னை மறந்து பொற்செழியன் என்னும் பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறேன்” என்றார். மக்களின் மனதில் வாழும் பாத்திரத்தை ஏற்று பிரகாஷ்ராஜ் நடித்திருக்கிறார். பூமிகாவின் பாத்திரமும் அனைவரையும் கவரக்கூடியது. இவர்களுடன் சிறப்பு தோற்றத்தில் சத்தியராஜ், கருப்பு ராஜா, சத்தியன் நடித்திருக்கிறார்கள். இசை - பரத்வாஜ், பாடல்கள் - வைரமுத்து, அறிவுமதி, கலை - கதிர், படத்தொகுப்பு - பி.லெனின், பிரேம், தயாரிப்பு - கருணாகரன், கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம் - தங்கர் பச்சான். படம் பற்றி கூறிய அவர்.. “ இது காதலிக்க போகிறவர்களுக்கு ஒர...
அரசியலுக்கு வருகிறாரா அரவிந்த்சாமி… அவரே அளித்த பதில்..!

அரசியலுக்கு வருகிறாரா அரவிந்த்சாமி… அவரே அளித்த பதில்..!

CINI NEWS, HOME SLIDER, நடிகர்கள்
‘தளபதி’ படம் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானவர் அரவிந்த் சாமி. மணிரத்னம் இயக்கிய இப்படத்தில் ரஜினிக்கு தம்பியாக அரவிந்த் சாமி நடித்திருந்தார். இப்படத்தில் அரவிந்த் சாமியின் நடிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது. இதையடுத்து ‘ரோஜா’, ‘மறுபடியும்’, ‘பாம்பே’, ‘இந்திரா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 1999ம் ஆண்டு வெளியான ‘என் சுவாசக் காற்றே’ என்ற படத்திற்குப் பிறகு சிறிய இடைவெளி விட்டு, ‘சாசனம்’ என்ற படத்தில் நடித்தார். பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கடல்’ படம் மூலம் ரீஎன்ட்ரீ ஆனார். ஜெயம் ரவியுடன் நடித்த ‘தனி ஒருவன்’ இவருக்கு சிறந்த வில்லன் நடிகருக்கான பெயரை பெற்றுத் தந்தது. தற்போது இவரது நடிப்பில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. மேலும் மணிரத்னம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார...
பலூன் பட புரமோஷனில் அக்கறை காட்டாத ஜெய்… பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்த்தார்…

பலூன் பட புரமோஷனில் அக்கறை காட்டாத ஜெய்… பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்த்தார்…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
சினிஷ் இயக்கத்தில் ஜெய் - அஞ்சலி - ஜனனி ஐயர் இணைந்து நடித்திருக்கும் படம் `பலூன்'. காதல் கலந்த திகில் படமாக உருவாகி உள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். காமெடி நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘எங்கேயும் எப்போதும்’ படத்திற்கு பின்னர் ஜெய் - அஞ்சலி மீண்டும் இணைந்து நடித்திருப்பதால் பலூன் படத்தின் மீதான எதிர்பாரப்பு கூடியிருக்கிறது. இந்த படத்தில் ஜெய் 3 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகைகள் அஞ்சலி, ஜனனி ஐயர், இயக்குனர் சினிஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். ஆனால், இப்படத்தின் கதாநாயகன் ஜெய் கலந்துக் கொள்ள வில்லை. இதுகுறித்து சினிஷ் பேசும்போது, ‘நடிகர் ஜெய் புரமோஷனை விரும்பாதவர். எனக்கு புரமோஷன் வேண்டாம். படம் நன்றாக ஓடினால்...
ஜெயிலில் சசிகலாவுக்கு சலுகைகள்: தகவல் உரிமை ஆணையத்தில் டி.ஐ.ஜி. ரூபா புகார்

ஜெயிலில் சசிகலாவுக்கு சலுகைகள்: தகவல் உரிமை ஆணையத்தில் டி.ஐ.ஜி. ரூபா புகார்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா பெங்களூர் ஜெயிலில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாவும், இதற்காக அவர், டி.ஜி.பி. சத்யநாராயணராவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாவும் பரபரப்பு புகார் தெரிவித்தார். இது குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார். இதில் சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மை என தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் டி.ஜி.பி.யாக இருந்த சத்ய நாராயனராவ், தன் மீது குற்றச்சாட்டுகள் கூறிய டி.ஐ.ஜி. ரூபா மீது பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் ரூ.4 கோடி கேட்டு மான நஷ்டஈடு வழக்கு தொடர்ந்தார். நேற்று இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது ரூபா தரப்பில் வக்கீல் வாதத்தை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து நீதிபதி இவ்வழக்கை வருகிற பிப்ரவரி மாதம் 16-ந்தே...
கதைக்காகத் தன் தோற்றத்தை மாற்றிக் கொண்ட’’இமை’’நாயகன்

கதைக்காகத் தன் தோற்றத்தை மாற்றிக் கொண்ட’’இமை’’நாயகன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இமை’ படத்துக்காக அதில் நாயகனாக நடிக்கும் சரிஷ் சிரமப்பட்டுத் தன் தோற்றத்தை மாற்றிக் கொண்டுள்ளார். படு கரடு முரடான வாலிபனுக்கும் கனி போன்ற அப்பாவிப் பெண்ணுக்கும் இடையில் மலரும் காதல் பற்றிய கதை தான் ‘இமை’. இப்படத்தில் நாயகனாக நடித்ததுடன் தயாரிப்பிலும் பங்கெடுத்துள்ளவர் சரிஷ். படத்தில் நடித்த சரிஷ் தன் அனுபவம் பற்றிக் கூறும் போது, “இது ஒரு ரவுடி சார்ந்த கதைதான் என்று கேள்விப்பட்டதுமே என் தோற்றத்தை இயக்குநர் கூறியபடி மாற்ற ஆரம்பித்தேன். கொழு கொழு உடம்பை இளைக்க வைத்தேன். தாடி வளர்க்கத் தொடங்கினேன். தலையைச் சரியாக வாராமல் முடியை வளர்த்தேன். என் நிறத்தை மங்கலாக்க வெயிலில் நின்று கறுத்தேன். இவ்வளவும் செய்து மாறிய பின் , என் தோற்றம் இயக்குநருக்குப் பிடித்து ஒரு வழியாகத் திருப்தி வந்த பிறகுதான் படப்பிடிப்புக்கே போனோம். படப்பிடிப்பில் நடித்துப் பார்த்த போது தான் நடிப்பு என்றால் எவ...
விஷால் ஆசைப்பட்ட வில்லன் வேடம்…!

விஷால் ஆசைப்பட்ட வில்லன் வேடம்…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஷால் பிலிம் பேக்டரி சார்பாக விஷால் நடித்து தயாரிக்கும் திரைப்படம் “ இரும்புத்திரை “. இப்படத்தில் கதாநாயகனாக விஷால் , கதாநாயகியாக சமந்தா நடிக்க பவர்புல்லான வில்லன் வேடத்தில் நடிகர் அர்ஜுன் நடிக்கிறார். ஜார்ஜ் C வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் , ஆண்டனி L ரூபன் படத்தொகுப்பில் உருவாகும் இப்படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. படத்தை இயக்குநர் மித்ரன் கூறியது :- இரும்புத்திரை படத்தின் கதையை முதலில் நான் விஷாலிடம் சொல்லும் போது அவர் இந்த கதை பிடித்திருந்தால் விஷால் பிலிம் பேக்டரியின் மூலம் வேறு யாரையாவது கதாநயாகனாக வைத்து இப்படத்தை தயாரிக்கலாம் என்ற முடிவில் தான் கதையை கேட்டார். நான் கதையை சொல்லி முடித்ததும் இப்படத்தின் கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த கதையில் நானே நடிக்கிறேன். நானே தயாரிக்கிறேன். நாம இந்த படத்தை பண்றோம். ஆனால் நான் வில்லன் வேடத்தில் தான் நடிப்பேன் என்றார். நான் தான்...