10 ஓவர் ஆட்டங்களாக மாறிய நட்சத்திர கிரிக்கெட் போட்டி..!
கடந்த சில ஆண்டுகளாக நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.
பிரபல நடிகர்கள் பங்கேற்று விளையாடும் இந்த போட்டி இதுவரை 20 ஓவர் போட்டிகளாக நடந்தன. இந்த ஆண்டு இது 10 ஓவர் நட்சத்திர கிரிக்கெட் போட்டியாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு ‘சி.சி.எல். டி10 பிளாஸ்ட்’ என்று பெயர் சூட்டி உள்ளனர்.
90 நிமிடம் நடைபெறும் இந்த கிரிக்கெட் போட்டியில் திரைப்பட நடிகர்கள் கலந்து கொண்டு ஆடுகிறார்கள்.
இந்த ஆண்டு நடைபெறும் சி.சி.சி. டி.10 பிளாஸ்ட் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.
நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் அணிகளின் அறிமுகவிழா ஐதராபாத்தில் நடந்தன. இதில் சென்னை ரைனோர்ஸ் அணி உரிமையாளர் ஸ்ரீகாந்த், கேரள ஸ்ட்ரைகர்ஸ் அணி உரிமையாளர் ராஜ்குமார், ஸ்ரீபிரியா ராஜ்குமார், மும்பை ஹீரோஸ் அணி உரிமையாளர் போனிகபூர், தெலுங்கு ...









