செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

நீலம் புரொடக்சன்ஸ் புதிய படத்தின் போஸ்டரை வெளிட்ட பா.இரஞ்சித்!

நீலம் புரொடக்சன்ஸ் புதிய படத்தின் போஸ்டரை வெளிட்ட பா.இரஞ்சித்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அட்டக்கத்தி, மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை போன்ற படங்களை இயக்கிய பா.இரஞ்சித் தயாரிப்பாளராகவும் பயணித்து வருகிறார். இவர் 'நீலம் புரொடக்சன்ஸ்' தயாரிப்பில் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு, ரைட்டர், குதிரைவால் போன்ற படங்கள் வெளியாகி வெற்றி பெற்றது. இந்நிலையில் அறிமுக இயக்குனர் சுரேஷ் மாரி இயக்கும் படத்தை 'நீலம் புரொடக்சன்ஸ்' சார்பில் பா.இரஞ்சித் தயாரிக்கவுள்ளார். 'அட்டகத்தி' தினேஷ் நடிக்கும் இப்படத்திற்கு 'J.பேபி' என்ற தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பா.இரஞ்சித் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்துக் கூறியுள்ளார். அந்த போஸ்டரில் அட்டகத்தி தினேஷ், ஊர்வசி, லொள்ளு சபா மாறன் இடம்பெற்றுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது....
ஜேஜிஎம் படத்தின் போஸ்டர்!

ஜேஜிஎம் படத்தின் போஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா, தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் 'லைகர்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இப்படம் ஆகஸ்ட் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியிடப்பட உள்ளது. அதன்பின்னர் மீண்டும் இந்த கூட்டணி புதிய படத்தில் ஒப்பந்தமாகிவுள்ளனர். இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஜேஜிஎம் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து தயாரிக்கிறார்கள். பூரி ஜெகன்நாத் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்கி பல்வேறு நாடுகளில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அடுத்தாண்டு ஆகஸ்ட் 3ஆம...
கே.ஜி.எப்-2 டிரைலர் செய்த புதிய சாதனை!

கே.ஜி.எப்-2 டிரைலர் செய்த புதிய சாதனை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'யாஷ்' ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த  படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது இந்த டிரைலர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது டிரைலர் வெளியான 24 மணி நேரத்திற்குள் நாட்டின் அனைத்து மொழிகளையும் சேர்த்து 109 மில்லியனை கடந்து சாதனை படைத்துள்ளது. ...
முதல்வர் 4 நாள் டெல்லி பயணம்!

முதல்வர் 4 நாள் டெல்லி பயணம்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
கடந்த 2006-ம் ஆண்டு பாராளுமன்ற இரு அவைகளிலும் 7 எம்.பி.க்களுக்கு மேல் பலம் கொண்ட கட்சிக்கு டெல்லியில் அலுவலகம் கட்டிக்கொள்வதற்கு நிலம் ஒதுக்க மத்திய அரசு முடிவெடுத்தது. அதன்படி தி.மு.க.வுக்கு டெல்லியில் உள்ள தீன் தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் பா.ஜனதா அலுவலகம் அருகே 2013-ம் ஆண்டு நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த இடத்தில் தி.மு.க. அலுவலகமான ‘அண்ணா கலைஞர் அறிவாலயம்’ கட்டும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் டெல்லி சென்ற முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். அதன்படி டெல்லி அறிவாலய கட்டுமான பணிகள் கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் அறிவாலயத்தை திறக்கலாமா? என ஆலோசிக்கப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் கொரோனா பரவல் அதிகமாகி வந்ததால் திறப்பு விழா தேதி உடனே முடிவு செ...
ஏப்ரல் 1 முதல் உயர்கிறது சுங்கச்சாவடி கட்டணம்!

ஏப்ரல் 1 முதல் உயர்கிறது சுங்கச்சாவடி கட்டணம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் வருகிற 1-ந்தேதி முதல் வாகனங்களுக்கான சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. சென்னையில் வானகரம், சூரப்பட்டு ஆகிய இடங்களில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த 2 சுங்கச்சாவடிகளையும் அகற்ற வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் இந்த 2 சுங்கச்சாவடிகளும் இன்னும் அகற்றப்படவில்லை. அதே நேரத்தில் இந்த 2 சுங்கச்சாவடிகளிலும் வருகிற 1-ந் தேதி முதல் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டரை பெரும்புதூர், நல்லூர் ஆகிய இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளிலும் வருகிற 1-ந்தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது. கார், ஜீப், வேன் மற்றும் இலகுரக வாகனங்கள் ஒரு முறை செல்ல இதுவரை ரூ.30 கட்டணம் இருந்தது. அது குறைந்தபட்சமாக ரூ.5 உயர்த்தப்பட்டு ரூ.35...
ஸ்கை டைவிங் சாகசம் செய்த பிரபல நடிகை!

ஸ்கை டைவிங் சாகசம் செய்த பிரபல நடிகை!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் தமிழில் 'ஓய்' என்கிற படத்தில் ஹீரோயினாக மாறியவர் ஈஷா ரெப்பா. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவரது கை வசம் இரண்டு தமிழ் படங்களும் உள்ளது. கிடைத்த இடத்தை விட கூடாது என்பதில் மிக தெளிவாக இருக்கும் ஈஷா ரெப்பா, அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். நடிகை ஈஷா ரெப்பா தனது கோடை விடுமுறையை துபாயில் கொண்டாடி வருகிறார். அங்கே அவர் விமானத்தில் இருந்து குதித்து செய்த ஸ்கை டைவிங் சாகச வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. https://twitter.com/YoursEesha/status/1508364156860530688?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1508364156860530688%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fcinem...
போக்குவரத்துதுறை அமைச்சரானார் சிவசங்கர்… இராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம்!

போக்குவரத்துதுறை அமைச்சரானார் சிவசங்கர்… இராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம்!

HOME SLIDER, NEWS, அரசியல், தமிழக அரசியல்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையின்படி தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள ஆளுநர் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும்  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ் எஸ் சிவசங்கர் போக்குவரத்து துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக முதுகுளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜகண்ணப்பன் இருந்து வந்தார். அண்மையில், ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் (பிடிஓ) ராஜேந்திரன் என்பவரை சாதி பெயரை சொல்லி ராஜகண்ணப்பன் விமர்சித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ராஜகண்ணப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு...
துபாய் விமானத்திலிருந்து நெஞ்சுவலி காரணமாக அவசரமாக இறங்கிய அமைச்சர் துரைமுருகன் ஆஸ்பத்திரியில் அனுமதி!

துபாய் விமானத்திலிருந்து நெஞ்சுவலி காரணமாக அவசரமாக இறங்கிய அமைச்சர் துரைமுருகன் ஆஸ்பத்திரியில் அனுமதி!

HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
  தமிழக அமைச்சா் துரைமுருகன் இன்று காலை 9.50 மணிக்கு எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானத்தில் துபாய் செல்ல சென்னை விமானநிலையம் வந்தாா். அவருடைய வீசாவில் ஏதோ பிரச்னை என்பதால் பயணத்தை ரத்து செய்துவிட்டு, விமான நிலையத்திலிருந்து வீட்டிற்கு சென்றுவிட்டாா். அதன்பின்பு அமைச்சரின் விசாவில் உள்ள பிரச்னையை சரி செய்து, புதிய விசா வாங்கிவிட்டு இன்று மாலை 6.50 மணிக்கு சென்னையிலிருந்து துபாய் செல்லும் ஏா்இந்தியா விமானத்தில் அமைச்சா் துரைமுருகனுக்கு டிக்கெட் போடப்பட்டது. அமைச்சரும் இன்று மாலை 5.30 மணிக்கு சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு வந்துவிட்டாா். ஏா் இந்தியா விமான நிறுவன அதிகாரிகள் அமைச்சரை வரவேற்று விமானநிலையத்திற்குள் அழைத்து சென்றனா். அவருக்கு போா்டிங் பாஸ், பாதுகாப்பு சோதனை, சுங்கச்சோதனை, குடியுரிமை சோதனை அனைத்தும் முடித்து விமானத்திற்குள் ஏறியும் அமா்ந்துவிட்டாா். ஆனால் வ...
தனுஷுடன் இணைந்த ஸ்வீடன் நடிகை!

தனுஷுடன் இணைந்த ஸ்வீடன் நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் 'நானே வருவேன்'. இந்த திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் நாயகியாக இந்துஜா நடிக்கிறார். சமீபத்தில் இதன் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், இப்படத்தில் எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. பலரும் எதிர்ப்பார்த்திருக்கும் இப்படத்தில் ஸ்வீடன் நாட்டு நடிகை இணைந்திருக்கும் தகவலை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டரை தனுஷ் அவருடைய வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இதனை எல்லி அவுரம் அவருடைய வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருள்ளார். இதன்மூலம் இப்படத்தில் இ...
நிறைவடைந்த மாரி செல்வராஜின் மாமன்னன் முதற்கட்ட படப்பிடிப்பு!

நிறைவடைந்த மாரி செல்வராஜின் மாமன்னன் முதற்கட்ட படப்பிடிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர், அடுத்ததாக தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். இப்படம் அனைவரின் மத்தியிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதன்மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்த மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தை இயக்கவுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன், பிரபல மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 'மாமன்னன்' படப்பிடிப்பு தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை மாமன்னன் படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதனை இயக்குனர் மாரி செல்வராஜ் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள...