இந்தியன் 2 முதல் பாடல் மே 22ம் தேதி ரிலீஸ்!
இந்தியன் 2 முதல் பாடல் மே 22ம் தேதி ரிலீஸ்!
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் முதல் பாடல் வரும் மே 22ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில், பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் 'இந்தியன் 2.' 'லைகா புரொடக்ஷன்ஸ்' சுபாஸ்கரன் & 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' இணைந்து தயாரிக்க, பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் Intro வீடியோ வெளியிடப்பட்டு வரவேற்பைக் குவித்தது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் 'இந்தியன் 2' திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி ஜூன் 1 ஆம் தேதி சென்னையில் கோலாகலமாக நடைபெறவுள்ளது எனவும் மேலும் இப்படம் ஜூலை மாதம் வெளியாகவுள்ளது என்பதையும் உறுதி செய்தனர்.
இந்தியன் 2 படம் குறித்த இந்த அடுத்தடுத்த அப்டேட்கள், ரசிகர்கள் ...









