இந்திய கிரிக்கெட் அணியின் 2022 போட்டி அட்டவணை வெளியீடு – சென்னையில் 20 ஓவர் போட்டி!
இந்திய கிரிக்கெட் அணியின் 2022 போட்டி அட்டவணை வெளியீடு - சென்னையில் 20 ஓவர் போட்டி!
இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டில் (2022) விளையாடும் போட்டி விவரங்களை பி.சி.சி.ஐ. (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) வெளியிட்டுள்ளது.
இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் விளையாடி வருகிறது. 2-வது டெஸ்ட் நாளை முதல் 7-ந் தேதி வரை ஜோகன்னஸ்பர்க்கிலும், 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் 11 முதல் 15 வரை கேப்டவுனிலும் நடக்கிறது.
அதன்பிறகு தென் ஆப்பிரிக்காவுடன் 3 ஒருநாள் போட்டிகளில் 19, 21 (பாரல்) மற்றும் 23 (கேப்டவுன்) ஆகிய தேதிகளில் விளையாடுகிறது.
அதைத் தொடர்ந்து இந்திய அணி வெஸ்ட் இண்டீசுடன் விளையாடுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா வந்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுகிறது.
ஒருநாள் போட்டிகள் பிப்ரவரி 6, 9 மற்றும் 12-ந் தேதிகளில் அகமதாபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா ஆகி...









