மிராய்’ கோடங்கி விமர்சனம் 3.5/5
‘மிராய்’ கோடங்கி விமர்சனம் 3.5/5
புராண கால வரலாற்றுக் கதையையும் ஆன்மீகமும் மந்திர தந்திர டெக்னாலஜியும் சேர்ந்த ஒரு பேண்டசி திரைப்படமாக ரசிகர்களை கவரும் படமாக மிராய் உருவாகியுள்ளது.
கதைப்படி…
கலிங்கத்து போர் நடந்த பின் பேரரசன் அசோகன் சாகாவரம் பெறக்கூடிய ரகசியத்தை 9 மாய புத்தகங்களில் மறைத்து வைக்கிறார். இந்த 9 மாய புத்தகங்களை தீயவர்கள் யாரும் கைபற்றாமல் இருக்க 9 வீரர்களையும் நியமிக்கிறார்.
இது நடந்து முடிந்து பல சகாபதங்கள் முடிந்த பின், தற்போதைய நவீன காலக்கட்டத்தில், மந்திர தந்திர சக்திகள் மூலம் ஒட்டு மொத்த உலகையும் தன் கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கும் மனோஜ் மஞ்சுவுக்கு இந்த புத்தக ரகசியம் தெரிந்து அந்த 9 புத்தகங்களை அடைய முயற்சிக்கிறார்.
அதில் 8 புத்தகங்களை கைப்பற்றிய மனோஜ் 9வது புத்தகத்தை அடைய வருகிறார். அந்த சூழலில் தன் சக்தி என்ன என்பதையே தெரிந்து கொள...









