வருங்கால கணவர் குறித்து மனம் திறந்த ராஷி கன்னா!
தமிழில் நயன்தாராவுடன் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்து அறிமுகமானவர் ராஷிகன்னா, அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். அரண்மனை 3, சர்தார், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட மேலும் சில படங்களில் நடித்து வருகிறார்.
ராஷிகன்னா இணையதளத்தில் ரசிகர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து கூறும்போது, ‘‘எனக்கு ஆண் நண்பர் இல்லை. இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. எனது வாழ்க்கை துணைவரை கண்டுபிடிக்கும்போது எல்லோருக்கும் சொல்வேன். எனக்கு வரப்போகிற கணவர் அழகாக இருக்கிறாரோ இல்லையோ ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவராக இருக்க வேண்டும். ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன்.
எனக்கு எல்லா கதாநாயகர்களையும் பிடிக்கும். தமிழில் விஜய் எனக்கு பிடித்த நடிகர், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு ஆகிய...
2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு!
தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளில் 14,662 பதவிகளுக்கு கடந்த 6-ந்தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. அன்று 77.43 சதவீத ஓட்டுக்கள் பதிவானது.
இந்த 9 மாவட்டங்களிலும் 2-ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலேயே வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து ஓட்டு போட்டனர். விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 6,652 வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்.
கிராம பஞ்சாயத்து உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஆகிய 4 பதவிகளுக்கு தனித்தனியாக வாக்குகளை செலுத்தினர்.
35 ஊராட்சி ஒன்றியங்களுக்...
கவிஞர் பிறைசூடன் மாரடைப்பால் காலமானார் -திரையுலகினர் இரங்கல்!
பிரபல திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 65.
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 1956 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி பிறந்தவர் பிறைசூடன். 1985-ல் வெளியான ‘சிறை’ படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த ‘ராசாத்தி ரோசாப்பூ’ என்னும் பாடலை எழுதியதன் மூலமாக தமிழ்த்திரையுலகில் பாடலாசிரியராக தனது பயணத்தை தொடங்கினார்.
பணக்காரன் திரைப்படத்தில் இவர் எழுதிய ‘நூறு வருஷம் இந்த மாப்பிளையும் பொண்ணுந்தான்’, செம்பருத்தி திரைப்படத்தில் ‘நடந்தால் இரண்டடி’ உள்ளிட்ட பாடல்கள் மிகவும் பிரபலமானவை.
திரைப்பட பாடல்கள் மட்டுமல்லாது தனிப்பாடல்கள், கவிதைகள் உள்ளிட்டவற்றையும் எழுதியுள்ளார்.
2000க்கும் அதிகமான பாடல்களை எழுதி ரசிகர்களை மகிழ்வித்தவர் பிறைசூடன். 5000-க்கும் அதிகமான பக்தி...
நகைச்சுவை நடிகர் வடிவேலு ரீ-என்ட்ரி !
நகைச்சுவை நடிகர் வடிவேலு இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் புதிய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக அவர் நடிக்கவில்லை.
தற்போது தடை நீக்கப்பட்டு உள்ளதால், மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார். அதன்படி அவர் நடிக்க உள்ள புதிய படத்தை சுராஜ் இயக்க, லைகா நிறுவனம் தயாரிக்கிறது என்ற அறிவிப்பு கடந்த மாதமே வெளியானது.
இந்நிலையில், அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அப்படத்திற்கு ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ என தலைப்பு வைத்துள்ளனர். வடிவேலு கோர்ட் சூட் அணிந்தபடி கெத்தான தோற்றத்துடன் இருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ...
#seeman #Exltteaudio #NTK #kodankivoice வசூல் ராஜா சீமான் I முன்னாள் போராளியின் பகீர் ஆடியோ I நாம் தமிழர் கட்சி ! #veeratamilarmunnani
https://youtu.be/ZCyiSGeGQ_Y
காஜல் அகர்வால் இடத்தை பிடித்த ஹன்சிகா!
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் கடந்த வருடம் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வந்த காஜல் அகர்வால், தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இவரை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர்கள் தற்போது வேறு நடிகைகளை தேடி வருகின்றனர்.
ஏற்கனவே தெலுங்கில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிக்க இருந்த கோஸ்ட் படத்தில் இருந்து காஜல் அகர்வால் நீக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு தமிழ் பட வாய்ப்பை அவர் இழந்துள்ளார்.
தமிழில் ராஜா சரவணன் இயக்கத்தில் உருவாகும் ‘ரவுடி பேபி’ படத்தில் ஹீரோயினாக நடிக்க முதலில் காஜல் அகர்வாலை தான் ஒப்பந்தம் செய்திருந்தனர். தற்போது அந்த வாய்ப்பு ஹன்சிகா வசம் சென்றுள்ளது. இப்படத்தில் சார்பட்டா பரம்பரை படத்தின் வில்லன் ஜான் கோகைனும் முக்கிய கத...
8 மொழிகளில் பிரம்மாண்டமாக தயாராகும் பிரபாஸின் 25-வது படம்.... இயக்கப்போவது யார் தெரியுமா!
‘பாகுபலி’ திரைப்படங்கள் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்றவர் பிரபாஸ். இப்படத்தை தொடர்ந்து ‘சாஹோ’வில் நடித்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான ‘சாஹோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலை வாரிக்குவித்தது. இதையடுத்து அவருக்கு பிரம்மாண்ட பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது ‘ராதே ஷ்யாம்’, ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில், பிரபாஸ் நடிக்கும் 25-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘ஸ்பிரிட்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்க உள்ளார். இவர் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கியவர் ஆவார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்பட 8 மொழி...
புதிய சாதனை படைத்த மாநாடு டிரெய்லர்!
சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மாநாடு படத்தின் டிரெய்லர் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த டிரெய்லர், தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதன்படி இப்படத்தின் டிரெய்லர் யூடியூபில் 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்று உள்ளது. சிம்பு நடித்த படத்தின் டிரெய்லர் ஒன்று 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெறுவது இதுவே முதன்முறை. இதனை சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்....