மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஈரோடு,கோபி டூர் ஸ்டார்ட்!
ஈரோடு, சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தனது சுற்றுப்பயணத்தை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் இன்று தொடங்குகிறார்.
முன்னதாக கமல்ஹாசன் மதுரையில் கடந்த மாதம் 21ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சியின் பெயரையும் கொடியையும் அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர் அரசியல் நடவடிக்கைகளில் வேகமெடுத்த அவர், தினமும் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அடுத்த பொதுக்கூட்டத்தை ஏப்ரல் முதல் வாரத்தில் திருச்சியில் நடத்தவுள்ளதாக அவர் அறிவித்த நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம்(மார்ச் 8) சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மகளிர் தின விழாவை நடத்தினார். போக்குவரத்து சோதனையின்போது காவலர் தாக்கியதில் உயிரிழந்த உஷாவின் குடும்பத்தினருக்குத் தமிழக அரசு ரூ. 7 லட்சம் அறிவித்துள்ள நிலையில், ரூ. 10 லட்சம் நிதியுதவ...









