வியாழக்கிழமை, நவம்பர் 19
Shadow

HOME SLIDER

ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் திரிஷாவின் மற்றொரு படம்!

ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் திரிஷாவின் மற்றொரு படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் திரிஷாவின் மற்றொரு படம்! எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் சரவணன், அடுத்ததாக இயக்கியுள்ள படம் ‘ராங்கி’. இப்படத்திற்கான கதை மற்றும் வசனத்தை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியிருக்கிறார். ‘ராங்கி’ என்றால் அடங்காத, துணிச்சல் மிகுந்த பெண் என்று பொருள். படத்தில் நிறைய சண்டை காட்சிகள் உள்ளன. இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக ராங்கி படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் திரிஷாவின் ‘பரமபத விளையாட்டு’ திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது....
கொரோனா பாதிப்பால் பிரபல இந்தி பட இசையமைப்பாளர் மரணம்!

கொரோனா பாதிப்பால் பிரபல இந்தி பட இசையமைப்பாளர் மரணம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
கொரோனா பாதிப்பால் பிரபல இந்தி பட இசையமைப்பாளர் மரணம்! இந்தி திரையுலகில் கடந்த 1990-ம் ஆண்டுகளில் பிரபல இசையமைப்பாளர்களாக இருந்தவர்கள் நதீம் சைபி மற்றும் ஷ்ரவன் ரத்தோடு. இந்த இருவரும் சேர்ந்து இசையமைத்து, உருவான ஆசிக் படம் கடந்த 1990-ம் ஆண்டு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினைப் பெற்றது. இதனை தொடர்ந்து, இருவரும் சேர்ந்து இசையமைத்த பல படங்கள் வெற்றி பெற்றன. சாஜன் (1991), ஹம் ஹெய்ன் ரஹி பியார் கே (1993), பர்தேஸ் (1997) உள்ளிட்ட பல்வேறு படங்களில் அவர்கள் ஒன்றாக பணியாற்றினார்கள்.  இதன்பின்னர் அவர்கள் கடைசியாக, தோஸ்தி பிரண்ட்ஸ் பார்எவர் என்ற படத்தில் ஒன்றாக பணியாற்றினர்.  கடந்த 2005-ம் ஆண்டுக்கு பின்னர் இருவரும் பிரிந்தனர். இந்நிலையில், கொரோனா பாதிப்புக்காக மும்பையில் உள்ள ரகேஜா மருத்துவமனையில் கடந்த திங்கட்கிழமை ஷ்ரவன் சேர்க்கப்பட்டார். 66 வயதுடைய ஷ்ரவன் நேற்றிரவு 9.30 மணியளவில் சிகிச்சை பலன...
பிரபல நடிகரை கலாய்த்த பிரியா பவானி சங்கர்!

பிரபல நடிகரை கலாய்த்த பிரியா பவானி சங்கர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
என்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா - பிரபல நடிகரை கலாய்த்த பிரியா பவானி சங்கர்! மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியா பவானி சங்கர், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது குருதி ஆட்டம், பொம்மை, ஓமணப்பெண்ணே போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் ராகவா லாரன்ஸ் உடன் ருத்ரன், கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2, சிம்புவின் பத்து தல, அருண் விஜய்யின் 33-வது படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை நடிகர் சதீஷ் கிண்டல் செய்து பதிவு செய்திருந்தார். தற்போது சதீஷின் புகைப்படத்தை வைத்து பிரியா பவானி சங்கர் கிண்டல் செய்து இருக்கிறார். சன்னிலியோனுடன் சதீஷ் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து, என்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா உமக்கு, இதுவரை தமிழகம் கண்டிராத சிரிப்பு என்று கிண்டல் ச...
ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க, ஆக்ஸிஜன் ஆலைகள் அனைத்தையும் மத்தியஅரசு கையகப்படுத்தி,  ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் –  அரவிந்த் கெஜ்ரிவால்

ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க, ஆக்ஸிஜன் ஆலைகள் அனைத்தையும் மத்தியஅரசு கையகப்படுத்தி,  ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் –  அரவிந்த் கெஜ்ரிவால்

HOME SLIDER, NEWS, politics
ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க, ஆக்ஸிஜன் ஆலைகள் அனைத்தையும் மத்தியஅரசு கையகப்படுத்தி,  ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் -  அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா, ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக பிரதமர் மோடி, இன்று மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடி வருகிறார். இந்த கலந்துரையாடலில் பங்கேற்ற டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க, ஆக்ஸிஜன் ஆலைகள் அனைத்தையும் மத்தியஅரசு கையகப்படுத்தி,  ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என யோசனை தெரிவித்தார் நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 32 ஆயிரத்து 730 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 82 சதவிகித தொற்று பாதிப்பு டெல்லி, தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் மட்டுமே காணப்படுகிறது. தொற்று பாதிப்பு அதிகரிப்பு காரணமாக, நோயாளிகளுக...
மக்களின் உயிரை காக்க, பிச்சை எடு, கடன் வாங்கு, திருடு, எப்படியாவது ஆக்ஸிஜனைப் பெறுங்கள் – மோடி அரசை சாடிய நீதிமன்றம்

மக்களின் உயிரை காக்க, பிச்சை எடு, கடன் வாங்கு, திருடு, எப்படியாவது ஆக்ஸிஜனைப் பெறுங்கள் – மோடி அரசை சாடிய நீதிமன்றம்

HOME SLIDER, NEWS, politics
மக்களின் உயிரை காக்க, பிச்சை எடு, கடன் வாங்கு, திருடு, எப்படியாவது ஆக்ஸிஜனைப் பெறுங்கள் - மோடி அரசை சாடிய நீதிமன்றம் மக்களின் உயிரை காக்க, பிச்சை எடு, கடன் வாங்கு, திருடு, எப்படியாவது ஆக்ஸிஜனைப் பெறுங்கள், அது உங்களை வேலை என  மோடி தலைமையிலான மத்திய அரசை டெல்லி  உயர்நீதி மன்றம் கடுமையாக சாடியுள்ளது.  ஆக்சிஜன் தரமறுக்கும் தொழிற்சாலையை கையகப்படுத்துங்கள் என மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை உச்சமடைந்துள்ளது. ஒரே நாளில் 3 லட்சத்தற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் படுக்கை வசதி கிடைக்காத நிலையில், மருந்துகளுக்கும்,ஆக்சிஜன் கிடைப்பதிலும் கடுமையான தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இது தோடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம்...
ஆக்சிஜன்,  ஐசியூ படுக்கைகள் பற்றாக்குறையே நாட்டில் ஏற்படும் உயிரிழப்புக்கு காரணம் – ராகுல் காந்தி 

ஆக்சிஜன்,  ஐசியூ படுக்கைகள் பற்றாக்குறையே நாட்டில் ஏற்படும் உயிரிழப்புக்கு காரணம் – ராகுல் காந்தி 

HOME SLIDER, NEWS, politics
ஆக்சிஜன்,  ஐசியூ படுக்கைகள் பற்றாக்குறையே நாட்டில் ஏற்படும் உயிரிழப்புக்கு காரணம் - ராகுல் காந்தி இந்தியாவை கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் உலுக்கி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பெருந்தொற்று சூழலை மத்திய அரசு முறையாக கையாளவில்லை என துவக்கம் முதலே ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், இன்று ராகுல் காந்தி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: கொரோனா பாதிப்பு உடலில் ஆக்சிஜன் அளவை குறைய காரணமாக உள்ளது.  ஆனால் நாட்டில் ஏற்படும் உயிரிழப்புக்கு ஆக்சிஜன் மற்றும் ஐசியூ படுக்கைகள் பற்றாக்குறையே காரணமாக உள்ளது” எனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார் https://twitter.com/RahulGandhi/status/1385446229383987200?s=20...
மராட்டிய மருத்துவமனையில் தீ விபத்து 13 பேர் உயிரிழப்பு

மராட்டிய மருத்துவமனையில் தீ விபத்து 13 பேர் உயிரிழப்பு

HOME SLIDER, NEWS, politics
மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்புடன் கிட்டதட்ட 7 லட்சம் பேர் அங்குள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றன கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மராட்டியத்தில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன.  இந்த நிலையில், மராட்டிய மாநிலம் பல்கார் மாவட்டம் வாசை என்ற இடத்தில்  உள்ள  கொரோனா மருத்துவமனையில்  தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி கொரோனா நோயாளிகள் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13- பேர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும்,  தீ விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் எனவும்  காய...
இந்திய விமானங்களுக்கு கனடாவும் தடை விதிப்பு

இந்திய விமானங்களுக்கு கனடாவும் தடை விதிப்பு

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
    இந்திய விமானங்களுக்கு கனடாவும் தடை விதிப்பு இந்தியாவில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி மிக கடுமையான பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. அமெரிக்காவில் இருந்து இந்தியா செல்பவர்கள் 2 டோஸ் தடுப்பு மருந்து போட்ட பிறகு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. பிரான்ஸ் நாடும் இந்தியாவில் இருந்து வருவர்கள் தங்களை குறிப்பிட்ட நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது....
53 பேருடன் சென்ற இந்தோனேசிய நீர்மூழ்கி கப்பல் மாயம்!

53 பேருடன் சென்ற இந்தோனேசிய நீர்மூழ்கி கப்பல் மாயம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான கே.ஆர்.ஐ. நங்கலா-402 ரக நீர்மூழ்கி கப்பல் அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பாலி தீவு அருகே ஜாவா கடலில் நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அந்த நீர்மூழ்கி கப்பலில் இந்தோனேசிய கடற்படையினர், மாலுமிகள் உள்பட மொத்தம் 53 பேர் பயணித்தனர் இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் பாலி தீவு பகுதியில் உள்ள கடற்பரப்பில் 95 கிலோமீட்டர் தொலைவில் சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது. உடனடியாக, நீர்மூழ்கி கப்பலை தொடர்புகொள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து மீண்டும் முயற்சித்தபோதும் அந்த முயற்சி தோல்வியடைந்தது. இதையடுத்து, இந்தோனேசிய கடற்படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக செயல்பட்ட கடற்படையினர் நீர்மூழ்கி கப்பல் கடைசியாக கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருந்த கடற்பரப்பில் தீவிர தேடுதல் ...
முதல்வர் பழனிசாமிக்கு ஐகோர்ட்டு நோட்டீசு!

முதல்வர் பழனிசாமிக்கு ஐகோர்ட்டு நோட்டீசு!

HOME SLIDER, NEWS, politics
ரூ.1 கோடி கேட்டு திமுக நிர்வாகி வழக்கு முதல்வர் பழனிசாமிக்கு ஐகோர்ட்டு நோட்டீசு! கோவை தி.மு.க. நிர்வாகியான சூலூர் ஏ. ராஜேந்திரன் கடந்த ஆண்டு மார்ச் 19-ந்தேதி சென்னையிலிருந்து கோவைக்கு ரெயிலில் சென்றுள்ளார். அவருக்கு நீரழிவு பிரச்சினை இருப்பதால் மேல்படுக்கையிலிருந்து கீழே இறங்கும்போது, நிலை தடுமாறி கீழ் படுக்கையில் இருந்த பெண் மீது விழுந்ததாக கூறப்படுகிறது இதுதொடர்பாக ரெயில்வே நிர்வாகம் மற்றும் காவல்துறையில் அந்த பெண் வாய்மொழி புகார் அளித்த நிலையில், தனது செயல்பாடு உள்நோக்குடன் நடந்தது இல்லை என்றும், நீரழிவு பிரச்சினை இருப்பதால் அவசரமாக இறங்கியதாகவும் சூலூர் ராஜேந்திரன் அந்த பெண்ணிடம் விளக்கம் அளித்துள்ளார். இதன்பின்னர் தன் புகாரில் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என பெண் தெரிவித்துள்ளார். ஆனால் 15 நாட்களுக்கு பிறகு சூலூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ரெயில் பயணத்தின்...