பெற்றோர்களின் சம்மதத்துடன் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன!
பெற்றோர்களின் சம்மதத்துடன் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன
10, 12ம் வகுப்புகள் தொடக்கம்!
மாணவர்கள் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வழியாக வீடுகளில் இருந்து படித்து வந்தனர். பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் நேரடி வகுப்பு இல்லாதால் மன அழுத்தத்துடன் காணப்பட்டனர்.
இந்தநிலையில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்தது. கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் பெற்றோர்களின் சம்மதத்துடன் பள்ளிகளை திறக்க கருத்து கேட்கப்பட்டது.
அதன்படி தமிழகம் முழுவதும் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டதில் பெரும்பாலானோர் பள்ளிகளை திறக்க விருப்பம் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகளை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 13 ஆயிரம் பள்ளிகளில் 10, 12-ம் வகுப...








