வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அனுமதி!
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காட்பாடி சட்டமன்ற எம்எல்ஏவும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று (ஜன. 16) காலை 6.00 மணி அளவில் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் வாயுத்தொல்லை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்
ஆனால், மூச்சுவிட சிரமப்பட்டதால் அவர் சிஎம்சியில் சேர்க்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு எக்கோ(ECHO) பரிசோதனை உள்பட சர்க்கரை, ரத்த அழுத்தம், ஈசிஜி மற்றும் ரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனையில் துரைமுருக...









