இன்னும் 8 மாதங்களில் தமிழகத்தில் திமுக ஆட்சி – பொதுக்குழுவில் ஸ்டாலின் பேச்சு
திமுக பொதுக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
இன்னும் 8 மாதங்களில் திமுக ஆட்சிக்கு வரும்.
துரைமுருகன் பொதுச்செயலாளர் ஆனதையும், டி.ஆர்.பாலு பொருளாளர் ஆனதையும் அறிந்தால் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மகிழ்ச்சி அடைவார்.
9 முறை சட்டமன்றத்துக்கு சென்றுள்ள துரைமுருகன் ஒரு சூப்பர் ஸ்டார். சட்டமன்றத்தில் ஸ்டாராக மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருகிறார் துரைமுருகன். பல்வேறு பதவிகளை வகித்த துரைமுருகன் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும்.
துரைமுருகனும், டி.ஆர்.பாலுவும் கட்சியில் படிப்படியாக உயர்ந்து தற்போதைய நிலையை எட்டியுள்ளனர்.
மிசா காலத்தின்போது கைதாகி எங்களுடன் சிறையில் இருந்தவர் டி.ஆர்.பாலு
‘வெட்டி வா என்றால் கட்டி வரக்கூடிய தம்பிகளில் ஒருவர்’ என கருணாநிதியால் பாராட்டப்பட்டப் பெற்றவர் டி.ஆர்.பாலு. 3 முறை மத்திய அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள...









