வேலை இல்லா பட்டதாரி 3 வரும் தனுஷ் நம்பிக்கை..!
தனுஷ் பட வசூல் விவரங்களை வெளியிட்டார் தயாரிப்பாளர் தாணு..!
தனுஷ் நடிப்பில் சவுந்தர்யா ரஜினி இயக்கிய வேலை இல்லா பட்டதாரி 2 படத்தின் வெற்றி சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில் இயக்குனர் சவுந்தர்யா, நடிகர் தனுஷ், நடிகர் விவேக், தயாரிப்பாளர் தாணு ஆகியோர் கலந்து கொண்டு பட வெற்றிக்கு துணை நின்றவரக்ளுக்கு நன்றி சொன்னார்கள்.
அப்போது படம் அமெரிக்காவிலும், சிங்கப்பூர், மலேசிய நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு வசூல் செய்திருக்கிறது.
அதே போல தமிழ் நாட்டிலும் பல கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்று தயாரிப்பாளர் தாணு வசூல் பட்டியலை பகிரங்கமாக வெளியிட்டார்.
பின்னர் பேசிய தனுஷ் கண்டிப்பாக வேலை இல்லா பட்டதாரி 3 கட்டாயம் வரும். முதலில் கதையை எழுதி முடித்து அதற்கு யார் பொருந்துவார்களோ அவரை இயக்குனர் ஆக்குவேன் என்றார்.
...








