விஜய் இல்லாமல் துப்பாக்கி 2-ம் பாகம்... இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் எடுத்த அதிரடி முடிவு!
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் நடிகர் விஜய்யுடன் முதல்முறையாக கூட்டணி அமைத்த படம் ‘துப்பாக்கி’. கடந்த 2012-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்தில் நடிகர் விஜய் ராணுவ உளவு அதிகாரியாக நடித்திருந்தார்.
இந்நிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது துப்பாக்கி 2-ம் பாகத்துக்கான கதையை தயார் செய்து விட்டதாக கூறப்படுகிறது. துப்பாக்கி 2-ம் பாகத்திலும் விஜய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால் இதனை முருகதாஸ் தரப்பில் உறுதிப்படுத்தவில்லை.
தற்போது உருவாகி வரும் நடிகர் விஜய்யின் 65-வது படத்தை முதலில் ஏ.ஆர்.முருகதாஸ் தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் கத...
விளம்பரங்களில் நடிக்க ரூ.150 கோடி சம்பளத்துடன் வந்த டீல்.... நோ சொல்லி திருப்பி அனுப்பிய பிரபாஸ்!
பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் முன்னணி கதாநாயகனாக உயர்ந்தவர் பிரபாஸ். இவருக்கு பட வாய்ப்பு குவிந்து வருகிறது. தற்போது ராதே ஷ்யாம், சலார், ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகும் ஆதிபுருஷ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
பாகுபலி படத்துக்கு பிறகு நடிகர் பிரபாஸ் இந்திய அளவில் பிரபலமான நடிகர் ஆகிவிட்டதால் அவரின் மார்க்கெட் பன்மடங்கு உயர்ந்துவிட்டது. இதைக் கருத்தில் கொண்டு பல்வேறு நிறுவனங்கள் நடிகர் பிரபாஸை தங்கள் விளம்பரங்களில் நடிக்க வைக்க முயற்சித்துள்ளன.
கடந்த ஓராண்டில் நடிகர் பிரபாஸுக்கு காலணிகள், மின்னணு பொருட்கள், சோப்பு என ஏராளமான விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. இவற்றில் நடித்திருந்தால் அவருக்கு ரூ.150 கோடி வரை சம்பளம் கிடைத்திருக்குமாம். ஆனால் அவர் அவற்றில் நடிக்க ...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - கதாயுதத்துடன் வாகை சூடிய நியூசிலாந்து!
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்தியா 217 ரன்களும், நியூசிலாந்து 249 ரன்களும் எடுத்தன.
32 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்த நிலையில், 5வது நாள் ஆட்டம் நிறைவடைந்தது. புஜாரா 12 ரன்னுடனும், கோலி 8 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 6வது நாளான இன்று தொடர்ந்து ஆடிய இந்தியா, விரைவில் விக்கெட்டுகளை இழந்தது.
கேப்டன் கோலி 13 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். புஜாரா 15 ரன்கள், ரகானே 15 ரன்கள், ஜடேஜா 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மிகவும் பொறுமையாக ஆடிய ரிஷப் பண்ட், 41 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க...
இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம்!
தமிழ்நாட்டின் 16-வது சட்டசபையின் முதல் கூட்டம் கலைவாணர் அரங்கில் கடந்த 21-ந்தேதி கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் மறைந்த தலைவர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் சட்டசபையில் கொண்டு வரப்பட்டது.
இது குறித்து சட்டசபையில் இடம்பெற்ற அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற விவாதம் நடந்தது. அவர்களின் கருத்துகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. ஆட்சி குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.
3 தினங்கள் சட்டசபையில் நடந்த விவாதத்துக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதில் அளித்து பேசினார்.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு அமைச...
புரட்சி வாலிபனாக களமிறங்கும் அதர்வா!
“குங்கும பூவும் கொஞ்சும் புறாவும், வானவராயன் வல்லவராயன்” படங்களை இயக்கிய ராஜமோகன் அடுத்தாக அட்ரஸ் என்னும் படத்தை இயக்கி இருக்கிறார்.
உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகர் அதர்வா, புரட்சி வாலிபராக நடித்திருக்கிறார். காளி என்ற கதாபாத்திரத்தில் வரும் அதர்வா, நட்புக்காக சிறிய வேடத்தில் நடித்து கொடுத்திருக்கிறார்.
இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பூஜா ஜாவேரி நடிக்கிறார். மேலும், இசக்கி பரத், புதுமுகம் தியா, தம்பிராமையா, தேவதர்ஷினி, ஏ.வெங்கடேஷ், மெட்ராஸ் நந்தகுமார், நாகேந்திரன், கோலி சோடா முத்து மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது....
தனுஷ் - செல்வராகவன் இணையும் படத்தின் புதிய அறிவிப்பு!
இயக்குனர் செல்வராகவன் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
இவர்கள் இருவரும் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். வி கிரியேசன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘நானே வருவேன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வைரலானது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்க இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்....
எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் இயக்கி இருக்கும் விஜயன்!
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். இவர் இயக்கத்தில் தற்போது லாபம் திரைப்படம் உருவாகி உள்ளது. இதில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் பின்னணி வேலைகள் நடந்து வரும் நிலையில் எஸ்.பி.ஜனநாதன் காலமானார். இவரது மறைவிற்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.
எஸ்.பி.ஜனநாதனின் படங்கள் எப்படி தமிழ் சினிமாவில் பேசப்பட்டதோ அதுபோல், அவருடைய உதவியாளராக பணியாற்றிய எஸ்.டி.புவி, புதிய படத்தை இயக்கி வெள்ளித்திரைக்கு கொண்டு வந்து அனைவரையும் கவர இருக்கிறார்.
இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனுடன் 2004 ஆம் ஆண்டில் இருந்து பணியாற்றி வந்த எஸ்.டி.புவி, விஜயன் என்னும் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். விஜயன் படத்தில் பாரி, கார்த்திகேயன், யோகி, ஆர்த்தி வினோ, லைலிதா, ஶ்ரீனிதி உள்ளிட்ட...