கொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட ‘சென்னை 28’ நண்பர்கள்!
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான படம் சென்னை 28. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து இதன் 2 ஆம் பாகமும் வெளியானது. இதில் சிவா, பிரேம்ஜி, நிதின் சத்யா, அரவிந்த், ஜெய், வைபவ் உள்பட ஏராளமானோர் நடித்திருந்தனர்.
தற்போது கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ‘சென்னை 28’ கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது.
கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடிகர்கள் பிரேம்ஜி, நிதின் சத்யா, அரவிந்த் ஆகியோர் இணைந்து வீடியோ வெளியிட்டு உள்ளனர். அந்த வீடியோவில், மாஸ்க் அணியவும், தடுப்பூசி போட்டுக் கொள்ளவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் ரசிகர்களுக்கு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்....
நடிகை சாந்தினி மீது முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி பகீர் புகார்!
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை சாந்தினி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அண்மையில் பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மணிகண்டன் தன்னை 3 முறை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும், தனது அந்தரங்க புகைப்படங்களை வைத்து கொண்டு மிரட்டல் விடுப்பதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.
இதுதொடர்பாக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது, கட்டாய கருக்கலைப்பு செய்தல், பாலியல் பலாத்காரம், பாலியல் வன்முறை, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே, கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ராமநாதபுரம் காவல...
சிபிஎஸ்சி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: அமைச்சரவையில் முக்கிய முடிவு!
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலைவரிசை மிகப்பெரிய அளவில் பரவி உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பொதுத்தேர்வை நடத்த வேண்டாம் என கோரிக்கை எழுந்தது.
இந்த நிலையில் இன்று மாலை பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூடியது. இதில் சிபிஎஸ்சி 12-ம் வகுப்பு தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது கொரோனா தொற்று காரணமாக சிபிஎஸ்சி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டது....
மகேஷ்பாபுக்கு வில்லனாகும் அர்ஜுன்!
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ்பாபு தற்போது பரசுராம் பெட்லா இயக்கும் ‘சர்காரு வாரி பாட்டா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை துபாயில் நடத்தி முடித்த படக்குழு, அடுத்தகட்ட படப்பிடிப்பை கொரோனா பரவல் குறைந்த பின் நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கப்போவது யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. மகேஷ் பாபுவுக்கு வில்லனாக நடிக்க பல்வேறு முன்னணி நடிகர்களிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்திவந்தது. இதில் நடிகர் அர்ஜுன் வில்லனாக நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அர்ஜுனுக்கு இப்படத்தின் கதை மிகவும் பிடித்திருப்பதாகவும், கொரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வந்த பின் அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்றும் கூறப்படுகிறது. இப...
சர்வதேச பட விழாவில் திரையிட தேர்வான நயன்தாராவின் கூழாங்கல்!
நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இவர்கள் தயாரிப்பில் ‘நெற்றிக்கண்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ போன்ற படங்கள் உருவாகி வருகிறது.
இதுதவிர பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘கூழாங்கல்’ படத்தையும் தயாரித்துள்ளார் நயன்தாரா. இப்படம் சர்வதேச பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளை வென்று வருகிறது. ஏற்கனவே நெதர்லாந்தில் நடந்த ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் திரையிடப்பட்டு சிறந்த படத்துக்கான விருதை பெற்றது.
ரோட்டர்டாம் சர்வதேச விழாவில் விருது பெற்ற முதல் தமிழ் படம் கூழாங்கல் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் நியூயார்க்கில் நடந்த டைரக்டர்ஸ் நியூ திரைப்பட விழாவிலும் ‘கூழாங்கல்’ திரையிடப்பட்டு சிறந்த திரைப்பட...
‘சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா’ - ஜகமே தந்திரம் !
பேட்ட படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இப்படம் வருகிற ஜூன் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில், இன்று இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த டிரெய்லர், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக அதில் தனுஷ் பேசும் ‘சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா’ என்ற வசனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இப்படத்தை ஓடிடியில் வெளியிடுவதால் அதிருப்தியில் இருந்த தனுஷ்,...
12ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது,
சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வை பொறுத்தே தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்து முடிவெடுக்கப்படும்.
* தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது என்பது குறித்து ஓரிரு நாளில் முடிவெடுக்கப்படும்.
* ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பே பாடப்புத்தகம் விநியோகிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
* தனியார் பள்ளிகள் குறித்த புகார்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள கல்விக் கட்டண புகார்களுக்காக அமைக்கப்பட்ட குழு வலுப்படுத்தப்படும்.
* அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தனியார் பள்ளிகளுக்கு இணையாக கட்டமைப்புகளை மேம்படுத்தி விளம்பரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்....
முழு ஊரடங்குக்கு விரைவில் முற்றுப்புள்ளி- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வீடியோவில் பேசி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது,
அனைவருக்கும் வணக்கம். எல்லாரும் பாதுகாப்பாக இருக்கிறீர்களா?
கொரோனா தொற்று ஒருவரிடம் இருந்து தான் மற்றொருவருக்குப் பரவுகிறது. அதனால் தொற்று தங்கள் மீது பரவாமல் இருக்க ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டும். அதே போல் நீங்களும் மற்றவர்களுக்கு பரப்பிவிடாமல் கவனமாக இருக்க வேண்டும்.
ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் சங்கிலியை உடைத்தாலே கொரோனா பரவலைத் தடுத்துவிட முடியும். கடந்த 24-ந்தேதி முதல் 7 நாட்களுக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் 7 நாட்களுக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 24-ந்தேதி முதல் சென்னை...
குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் எச்சரிக்கையாக இருங்கள் - ஐஸ்வர்யா ராஜேஷ்!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு குறைய ஆரம்பித்துள்ளது. ஊரடங்கு மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் தான் இந்த குறைவுக்கு காரணம்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை அவ்வப்போது திரையுலக பிரபலங்கள் ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நாம் எல்லோருக்கும் தெரியும் தற்போது கொரோனா இரண்டாவது அலையில் நாம் இருக்கின்றோம். முதல் அலையை விட இரண்டாவது அலை மிக அதிக நபர்களை பாதித்துள்ளது. குறிப்பாக ஆஸ்துமா உள்பட ஒருசில நோய்கள் உள்ளவர்களை அதிகமாக பாதித்து வருகிறது. எனவே தயவுசெய்து வீட்டிலிருந்து வெளியே வரவேண்டாம். ஒருவேளை அவசர காரியமாக வெளியே...