புதன்கிழமை, நவம்பர் 18
Shadow

HOME SLIDER

இந்தியன் 2 விவகாரம்…. லைகா – ஷங்கர் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி!

இந்தியன் 2 விவகாரம்…. லைகா – ஷங்கர் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
இந்தியன் 2 விவகாரம்.... லைகா - ஷங்கர் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி! நடிகர் கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தை முழுமையாக முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பினரும் கலந்து பேசி தீர்வு காணுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இயக்குனர் ஷங்கர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், கடந்த சனிக்கிழமையன்று, ஷங்கர் மற்றும் லைகா நிறுவனத்தின் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், இரண்டரை மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில், ஜூன் முதல் அக்டோபர் ம...
தடுப்பூசி பெயரில் 1.25 லட்சம் கோடி கொள்ளை – திடுக் புகார்

தடுப்பூசி பெயரில் 1.25 லட்சம் கோடி கொள்ளை – திடுக் புகார்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரோனா தடுப்பூசிக்கு கட்டணம் வசூலிப்பதா? மத்திய அரசின் முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம். இது தொடர்பாக அக்கட்சியின் தமிழக செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில்….. இந்தியாவில் இதுவரை எல்லாவிதமான தடுப்பூசி திட்டங்களும், அனைவருக்கும் இலவசமாகவே வழங்கப்பட்டது என்பதே வரலாறு. ஆனால் தற்போது கொரானாவைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசிக்குக் கட்டணம் செலுத்தித் தான் பயனாளிகள் செலுத்திக் கொள்ள வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிப்பதோடு, இந்திய மக்களின் உயிரோடு விளையாடுகிற கொடுமையான காரியம் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். 45 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு இதுவரை அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்தவமனைகளில் குறைந்த விலையிலும் கொரோனா தடுப்புசி செலுத்தி வரப்பட்டது. மத்திய அரசு 18 வயது முதல...
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கொரோனா!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கொரோனா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கொரோனா! கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. திரைப்பிரபலங்களும் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன், தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது நான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள், வாய்ப்பு கிடைத்தால் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். என்னுடையை ரசிகர்களும் நலம் விரும்பிகளும் கவலைப்பட வேண்டாம், நான் நலமுடன் உள்ளேன்” என தெரிவித்துள்ளார். நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் தற்போது புஷ...
தனுஷின் ‘கர்ணன்’ தெலுங்கில் ரீமேக் ஆகிறது…. நடிக்கப்போவது யார் தெரியுமா?!

தனுஷின் ‘கர்ணன்’ தெலுங்கில் ரீமேக் ஆகிறது…. நடிக்கப்போவது யார் தெரியுமா?!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தனுஷின் ‘கர்ணன்’ தெலுங்கில் ரீமேக் ஆகிறது.... நடிக்கப்போவது யார் தெரியுமா?! மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கர்ணன்’ படம் கடந்த 9-ந் தேதி வெளியானது. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில், கர்ணன் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளனர். தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ், கர்ணன் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி இருக்கிறார். மேலும் இவரது மகனான பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீநிவாஸ், தான் தனுஷ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இப்படத்தை இயக்கப்போவது யார் என்பது முடிவாகவில்லை. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீநிவாஸ், இதுவரை 8 படங்களில் நடித்துள்ளார். அதில் ‘சுந்தரபாண்டியன்’, ‘ராட்சசன்’ போன்ற தமிழ் படங்களின் ரீமேக்கும் அடங்கும். ஏற்கனவே நடிகர்...
மாஸ்க்… சமூக இடைவெளி தேவையில்லை – 4000 பேருடன் பிரமாண்டமாக நடக்கும் இசை விருது விழா!

மாஸ்க்… சமூக இடைவெளி தேவையில்லை – 4000 பேருடன் பிரமாண்டமாக நடக்கும் இசை விருது விழா!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
மாஸ்க்... சமூக இடைவெளி தேவையில்லை - 4000 பேருடன் பிரமாண்டமாக நடக்கும் இசை விருது விழா! இங்கிலாந்தின் மிக பிரபலமான இசை விழாவான ‘பிரிட் இசை விருது விழா’, வருகிற மே 11-ந் தேதி நடைபெற உள்ளது. இவ்விருது விழா, லண்டனில் உள்ள ‘ஓ2’ அரேனாவில் நடத்தப்பட உள்ளது. இதில் 4,000 பேர் கலந்து கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் இதில் கலந்து கொள்பவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு பின் பெரிய நிகழ்ச்சிகளுக்கு எத்தனை பேரை அனுமதிக்கலாம் என்பதற்கு முன்னோட்டமாக இந்த விருது விழா நடைபெற உள்ளதாம். மேலும் இதில் கலந்து கொள்ள உள்ள 4,000 பேரில் 2,500 பேர் முன்களப் பணியாளர்கள் மற்றும் 1,500 பேர் கார்ப்பரேட் நிறுவனங்களை சேர்ந்தவர்களாவர். நிகழ்ச்சிக்கு முன்னதாக 4000 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அதில் தொற்று இல்லை என்று ...
தியேட்டர்கள் மூடப்பட்டதால் ஓடிடி ரிலீசுக்காக வரிசைகட்டும் புதுப்படங்கள்!

தியேட்டர்கள் மூடப்பட்டதால் ஓடிடி ரிலீசுக்காக வரிசைகட்டும் புதுப்படங்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தியேட்டர்கள் மூடப்பட்டதால் ஓடிடி ரிலீசுக்காக வரிசைகட்டும் புதுப்படங்கள்! தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக, தமிழக அரசு அனைத்து தியேட்டர்களையும் மூடி உள்ளது. இதனால் திரைக்கு வர தயாராக இருந்த பல படங்கள் ஓடிடி தளங்களின் பக்கம் திரும்பி உள்ளன. இதற்கான பேச்சுவார்த்தை முழுவீச்சில் நடக்கின்றன. விஜய்சேதுபதி நடித்துள்ள மாமனிதன், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், கடைசி விவசாயி, துக்ளக் தர்பார் ஆகிய 5 படங்கள் திரைக்கு வர தயாராக உள்ளன. இதில் துக்ளக் தர்பார் படத்தை ஓடிடியில் வெளியிட ஏற்கனவே பேச்சுவார்த்தை நடந்தது. தற்போது ஓடிடியில் வெளியிடுவது உறுதியாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர சிவகார்த்திகேயனின் டாக்டர் படமும் ஓடிடியில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் பீட்சா படத்தின் 3-ம் பாகத்தையும் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வ...
கொரோனா பாதிப்பு எதிரொலி…. விஜய் சேதுபதியின் பாலிவுட் பட ஷூட்டிங் ஒத்திவைப்பு!

கொரோனா பாதிப்பு எதிரொலி…. விஜய் சேதுபதியின் பாலிவுட் பட ஷூட்டிங் ஒத்திவைப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
கொரோனா பாதிப்பு எதிரொலி.... விஜய் சேதுபதியின் பாலிவுட் பட ஷூட்டிங் ஒத்திவைப்பு! இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘அந்தாதூன்’. 3 தேசிய விருதுகளை வென்ற இப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கி இருந்தார். இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகும் படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்பும் நடிக்க ஒப்பந்தமாகினார். இப்படத்தின் படப்பிடிப்பை ஏப்ரல் 15-ந் தேதி தொடங்க திட்டமிட்டு இருந்தனர். அந்த சமயத்தில் நடிகை கத்ரீனா கைப் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததால், படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. தற்போது அவர் கொரோனாவில் இருந்து மீண்ட போதிலும், நாட்டில் கொரோனா பாதிப்பு தீவிரமாகி வருவதால், படப்பிடிப்பை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளனர். இதுதவிர நடிகர் விஜய் சேதுபதி காந்தி டாக்கீஸ், மும்பைகார் போன...
லோகேஷ் கனகராஜிடம் ‘விக்ரம்’ படக்கதையில் மாற்றம் செய்யச் சொன்ன கமல்!

லோகேஷ் கனகராஜிடம் ‘விக்ரம்’ படக்கதையில் மாற்றம் செய்யச் சொன்ன கமல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
லோகேஷ் கனகராஜிடம் ‘விக்ரம்’ படக்கதையில் மாற்றம் செய்யச் சொன்ன கமல்! இந்தியன் 2 படப்பிடிப்பு முடங்கி உள்ளதால் கமல்ஹாசன் அடுத்து விக்ரம் படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இவர் மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை இயக்கி பிரபலமானவர். விக்ரம் படப்பிடிப்பை மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் தொடங்க திட்டமிட்டு உள்ளனர். இந்நிலையில், விக்ரம் படத்தின் திரைக்கதை முழுவதையும் படித்த கமல்ஹாசன், அதில் சில மாற்றங்கள் செய்யும்படி தெரிவித்து இருப்பதாகவும், லோகேஷ் கனகராஜும் சில காட்சிகளை மாற்றி எழுதி வருவதாகவும் தகவல் பரவி வருகிறது. இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். விக்ரம் அதிரடி சண்டை படமாக தயாராகிறது. இதற்கிடையில் இந்தியன் 2 படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அந்த படத்தின...
குடிபோதையில் போலீஸ் வாகனத்தை கடத்தி லாரியில் மோதி நடுரோட்டில் கவிழ்த்த வாலிபர்!

குடிபோதையில் போலீஸ் வாகனத்தை கடத்தி லாரியில் மோதி நடுரோட்டில் கவிழ்த்த வாலிபர்!

HOME SLIDER, NEWS, politics
குடிபோதையில் போலீஸ் வாகனத்தை கடத்தி லாரியில் மோதி நடுரோட்டில் கவிழ்த்த வாலிபர்! திருப்பூர் தெற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் தினேஷ். இவர் நேற்று மதியம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீஸ் வாகனத்தில் ரோந்து பணி மேற்கொண்டார்.பின்னர் மதியம் 1.45 மணி அளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலக சந்திப்பு பகுதியில் உள்ள தெற்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் அமர்ந்து போக்குவரத்து நெருக்கடி குறித்து போலீசாருடன் ஆலோசனை நடத்தி வந்தார். அப்போது இன்ஸ்பெக்டர் ரோந்து செல்ல பயன்படுத்தும் போலீஸ் வாகனத்தை டிரைவரான போலீஸ்காரர் ராஜகுரு, அங்கு நிறுத்திவைத்திருந்தார். பின்னர் சாவியை வாகனத்தில் வைத்து விட்டு ராஜகுரு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள சுகாதார வளாகத்திற்கு சென்றதாக தெரிகிறது. சிறிது நேரம் கழித்து டிரைவர் திரும்பி வந்து பார்த்தபோது போலீஸ் வாகனத்தை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்....
நிழல் உலக தாதா சோட்டா ராஜனுக்கு கொரோனா

நிழல் உலக தாதா சோட்டா ராஜனுக்கு கொரோனா

HOME SLIDER, NEWS, politics
நிழல் உலக தாதா சோட்டா ராஜனுக்கு கொரோனா நிழலுலகத் தாதா தாவூத் இப்ராஹிம்மின் நெருங்கிய கூட்டாளி இந்த சோட்டா ராஜன். மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி. 2015-ம் ஆண்டு இந்தோனேஷியாவின் பாலி தீவில் பதுங்கியிருந்த போது கைது செய்யட்டார். தாவூத் இப்ராஹிம் பழக்கம் ஏற்பட்டது அவருக்காக இந்தியாவில் பல நாசவேலைகளைச் செய்து கொடுத்துள்ளார் சோட்டா ராஜன். அந்தக்காலக்கட்டத்தில் சோட்டா ராஜன் பெயரில் வழக்குகள் பதிவானாலும் எந்த வழக்கிலும் இவரை போலீஸாரால் கைது செய்யமுடியவில்லை. இந்தியாவில் இருந்தால் கைது செய்யப்படுவோம் என அச்சத்தில் 1988-ல் சோட்டா ராஜன் துபாயில் சென்று செட்டிலாகிவிட்டார். அங்கிருந்து சோட்டா ராஜன் கட்டளையிட இந்தியாவில் இவருக்கு வேலைசெய்ய பலர் தயாராக இருந்தனர். தாவூத்திடம் இருந்து சோட்டா ராஜன் விலகியதும் அவரது உயிருக்கு ஆபத்து வந்தது. 2000-ம் ஆண்டு பாங்காங்கில் வைத்து தாவூத்...