செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

சான்பிரான்சிஸ்கோவில் இருந்து பெங்களூருவுக்கு முழுவதும் பெண் விமானிகளே இயக்கும் இந்திய விமானம்

சான்பிரான்சிஸ்கோவில் இருந்து பெங்களூருவுக்கு முழுவதும் பெண் விமானிகளே இயக்கும் இந்திய விமானம்

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
சான்பிரான்சிஸ்கோவில் இருந்து பெங்களூருவுக்கு முழுவதும் பெண் விமானிகளே இயக்கும் இந்திய விமானம் இந்திய விமான வரலாற்றில் சாதனை நிகழ்வாக, முழுவதும் பெண் விமானிகளை கொண்டு, சான்பிரான்சிஸ்கோவில் இருந்து பெங்களூருவுக்கு ஏர் இந்தியா விமானம் இயக்கப்படுகிறது. இந்த விமானம் நேற்று உள்ளூர் நேரப்படி இரவு 8.30 மணிக்கு புறப்பட்டது. இது வடதுருவத்தின் மேலே சென்று, அட்லாண்டிக் பாதையில் பயணித்து, உலகின் மற்றொரு முனையான கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தை நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 3.45 மணிக்கு வந்து அடைகிறது. இந்த விமானம்தான், ஏர் இந்தியா அல்லது இந்தியாவில் வேறு எந்த விமான நிறுவனத்தாலும் இயக்கப்படும் உலகின் மிக நீண்ட வணிக விமானம் என்றும், இந்த பாதையில் மொத்த விமான நேரம், குறிப்பிட்ட நாளில் காற்றின் வேகத்தை பொறுத்து 17 மணி நேரத்துக்கும் மேலாக இருக்கும் என்ற...
ஊழல் குற்றச்சாட்டு குறித்து ஸ்டாலினுடன் நேரடியாக விவாதிக்க தயார் – முதலமைச்சர் பழனிசாமி

ஊழல் குற்றச்சாட்டு குறித்து ஸ்டாலினுடன் நேரடியாக விவாதிக்க தயார் – முதலமைச்சர் பழனிசாமி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அ.தி.மு.க.வின் செயற்குழு-பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதலமைச்சருமான ஒ.பன்னீர் செல்வம் மற்றும் பல அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர் இந்த கூட்டத்தின் சட்டசபை தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏகமனதாக ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இந்த பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- * என்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கும், பொதுக்குழுவுக்கும் ...
புதிய ஜனாதிபதியின் பதவியேற்பை புறக்கணிக்கும் டிரம்ப்

புதிய ஜனாதிபதியின் பதவியேற்பை புறக்கணிக்கும் டிரம்ப்

HOME SLIDER, politics, உலக செய்திகள், உலகம்
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3 ந்தேதி நடந்து முடிந்த ஜனாதிபதி  தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.  வருகிற 20ந்தேதி அவரது பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.  அதில் முறைப்படி அமெரிக்காவின் 46வது அதிபராக பைடன் பொறுப்பேற்க உள்ளார். ஆனால், பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த அதிபர் டிரம்ப், தேர்தலில் மோசடி நடந்துள்ளது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறினார்.  இதற்கிடையில், ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை உறுதி செய்ததற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை நாடாளுமன்றம் மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் கடந்த 6ந்தேதி நாடாளுமன்றம் முன் திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தினர். ஜனாதிபதி  தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொள்ளாத டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றக் கட்டடத்தில் புகுந்து நடத்திய வன்முறை உலக அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தியது. அவர்களை தடுத்...
திருமணத்தில் முடிந்த ஹீரோயின் ஆனந்தி காதல்

திருமணத்தில் முடிந்த ஹீரோயின் ஆனந்தி காதல்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
திருமணத்தில் முடிந்த ஹீரோயின் ஆனந்தி காதல் தமிழில் கயல், பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் ஆனந்தி. இவருக்கும் தெலங்கானாவை சேர்ந்த சாக்ரடீஸ் என்பவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. இதில்அம்மா கிரியேஷன்ஸ் சிவா, ஜே எஸ் கே சதீஷ், இயக்குனர் நவீன் ஆகியோர் கலந்துகொண்டனர். இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றே கூறப்பட்டது. ஆனால் அது உண்மை இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. இது காதல் திருமணம் தானாம். ஆனந்தியின் கணவர் சாக்ரடீஸ் மூடர் கூடம் பட இயக்குனர் நவீனின் மைத்துனராம். நவீன் இயக்கியுள்ள அலாவுதீனின் அற்புத கேமரா படத்தில் சாக்ரடீஸ் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்தப் படத்தில் ஆனந்தி தான் ஹீரோயின். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறி உள்ளது. பின்னர் இருவீட்டாரும் சம்மதித்ததை அடுத...
நீ அசுரனா… நான் ஈஸ்வரன்…. என்று  வசனம் பேசிய சிம்பு! 

நீ அசுரனா… நான் ஈஸ்வரன்…. என்று  வசனம் பேசிய சிம்பு! 

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
நீ அசுரனா... நான் ஈஸ்வரன்.... என்று  வசனம் பேசிய சிம்பு! சிம்பு நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கி இருக்கும் இந்த திரைப்படம் கிராமத்து பின்னணியில் சென்ட்டிமெண்ட், எமோஷன், காதல், ஆகஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாகி உள்ளது. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, நந்திதா, முனீஸ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன், யோகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது. இதில் சிம்பு நீ அசுரனா... நான் ஈஸ்வரன்.... என்று சிம்பு பேசும் வசனம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது....
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்- வானிலை ஆய்வு மையம் தகவல் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், தூத்துக்குடி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப்பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 25, குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும...
வெளியாகிய மாஸ்டர் 3 வது புரோமோ!

வெளியாகிய மாஸ்டர் 3 வது புரோமோ!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாஸ்டர்  3 வது புரோமோ வெளியாகியுள்ளது. மாஸ்டர் படம் தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளதால் ஏற்கனமே சிட்டி ஸ்டோரி, பாடல் வெளியாகி வைரலான நிலையில், இன்று மாலை 7 மணிக்கு மாஸ்டர் ரெய்ட் பாடல் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் என்ற ஹேஸ்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்தனர். மேலும், விஜய்யின் மாஸ்டர் படத்தின் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடல் சில்நாட்களுக்கு முன் 100 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. அதேசமயம் இப்பாடலின் வீடியோ பிரமோவை படக்குழு வெளியிட்டது. அதேபோல் நேற்று மாலை மாஸ்டர் படத்தில் 2 வது வீடியோ புரோமோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது இப்படத்தயாரிப்பு நிறுவனம். விஜய் ரசிகர்கள் மாஸ்டர் படத்தில் அவரது குரலைக் கேட்டு உற்சாகமடைந்துள்ளனர். சென்ற வருடத்தில் அவரது படம் எதுவும் கொரொனா கால ஊரடங்கினால் ரிலீசாகாத நிலையில...
ஜனவரி 27 ஆம் தேதி சசிகலா விடுதலை ஆக வாய்ப்பு!

ஜனவரி 27 ஆம் தேதி சசிகலா விடுதலை ஆக வாய்ப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஜனவரி 27 ஆம் தேதி சசிகலா விடுதலை ஆக வாய்ப்பு! வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகிறார்.  அவர் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்நிலையில் சசிகலா மீதான வருமானவரித்துறை தாக்கல் செய்துள்ள வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.   இந்த வழக்கில் சசிகலா சார்பில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையொட்டி சசிகலா தரப்பில் அளித்த மனுவில் பெங்களூரு சிறையில் இருந்து ஜனவரி 27 ஆம் தேதி சசிகலா விடுதலை ஆக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனவே பதில் மனு அளிக்க அவகாசம் தேவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது  ...
தனுஷ் படத்தில் முக்கிய வேடத்தில் ஸ்ம்ருதி வெங்கட்!

தனுஷ் படத்தில் முக்கிய வேடத்தில் ஸ்ம்ருதி வெங்கட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
தனுஷ் படத்தில் முக்கிய வேடத்தில் ஸ்ம்ருதி வெங்கட்! ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் நரேன் அடுத்து தனுஷ் வைத்து புதிய படம் இயக்கவுள்ளார் . தற்போது இவர் இயக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தனுஷின் 43-வது படத்தை அவர் இயக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக மாளவிகா மோஹனன் நடிக்கிறார்.இந்த படத்தில் வசனங்கள் மற்றும் கூடுதல் திரைக்கதைக்காக பாடலாசிரியர் விவேக் சமீபத்தில் இணைந்தார். தற்போது இந்த படத்தில் தடம்,மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்திய ஸ்ம்ருதி வெங்கட் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....
தோல்வியை ஒப்புக்கொண்ட அதிபர் டிரம்ப்!

தோல்வியை ஒப்புக்கொண்ட அதிபர் டிரம்ப்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
தோல்வியை ஒப்புக்கொண்ட அதிபர் டிரம்ப்! அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் 3-ந்தேதி நடந்தது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார். அவர் 306 ஓட்டுகள் பெற்றார். குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய அதிபர் டிரம்ப் (232 ஓட்டு) தோல்வியை தழுவினார். ஆனால் தேர்தலில் ஜோ பைடன் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக கூறிய டிரம்ப், தனது தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை. இது தொடர்பாக டிரம்ப் தரப்பில் மாகாண கோர்ட்டுகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதன் மூலம் டிரம்பின் சட்ட நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தன. ஆனாலும், டிரம்ப் தொடர்ந்து தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் பிடிவாதம் பிடித்து வந்தார். அதேபோல் அவரது ஆதரவாளர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை உறுதி செய்வதற்கான சான்றிதழ் வழங்கும் பணிகளை பாராளும...