செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

இன்று முதல் தொடங்கிய தனுஷ் – செல்வராகவன்-கலைப்புலி தாணு படம்

இன்று முதல் தொடங்கிய தனுஷ் – செல்வராகவன்-கலைப்புலி தாணு படம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  செல்வராகவன் இயக்கத்தில் உருவான படம் துள்ளுவதோ இளமை படம் 18 வருடங்கள் முன் வெளியானது. அந்தப் படத்தின் மூலம் 18 வருடங்களாக இயக்குனராக இளைஞர்கள் மத்தியில் ஹீரோவாக இருந்த செல்வராகவன் தற்போது ஹீரோவாகவே இளைஞர்கள் மனதில் இருக்கப் போகிறார். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷுடன் முதல்முறையாக இணைகிறார். இந்த படத்திற்கு சாணிக் காயிதம் என்று பெயரிடப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பயங்கர வைரலாகி பரவியது. செல்வராகவன் தற்போது முதன்முறையாக நடிகனாக சினிமாவில் நுழையபோவதால், ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இதற்கு இடையில், ரொம்ப வருடங்களாக தனுஷ் – செல்வராகவன் – யுவன் ஷங்கர் ராஜா Combination -ஐ எதிர்பார்த்து கொண்டிருக்க, தற்போது செல்வராகவன் தனது Twitter பக்கத்தில், ” தாணு சார், யுவன் மற்றும் தனுஷுடன் இணைவது மிக்க மகிழ்ச்சி ” என்ற...
ரியோ, ரியோ ராஜ் என மெல்லிய குரலில் கூப்பிட்ட பிக்பாஸ்

ரியோ, ரியோ ராஜ் என மெல்லிய குரலில் கூப்பிட்ட பிக்பாஸ்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  தூங்குவதற்கு தயாராகிய ரியோவை ரியோ, ரியோ ராஜ் என மெல்லிய குரலில் பிக்பாஸ் கூப்பிடுகிறார், இன்றைய டாஸ்க் குறித்தும் அவரிடம் விளக்கமளிக்கிறார். கடந்த 90 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடைபெறுகிறது. நேற்று இரு வித்தியாசமான போட்டிகள் நடைபெற்று அதில் பாலா மற்றும் ரம்யா வெற்றி பெற்றிருந்தனர். இந்நிலையில் இன்றும் போட்டிகள் கொடுக்கப்பட இருக்கிறது. இந்த வாரம் முழுவதும் நடைபெறும் போட்டிகளில் அதிக மதிப்பெண்கள் எடுக்கக்கூடிய போட்டியாளர்கள் நேரடியாக இறுதி சுற்றுக்கு செல்வார்கள். இந்நிலையில், ரியோ படுப்பதற்காக தலைசாய்க்கும் பொழுது ரியோ ராஜ், ரியோ என மெல்லிய குரலில் பிக்பாஸ் அழைக்கிறார். அதன்பின் போட்டிகள் குறித்து கூறி இன்றைக்கான போட்டி நடைபெறுகிறது. அதிலும் பாலாவுக்கு கேபிக்க...
பிரதமர் மோடி மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் முதலில் கொரோனா தடுப்பூசி எடுத்து கொள்ளவேண்டும் – காங்கிரஸ்

பிரதமர் மோடி மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் முதலில் கொரோனா தடுப்பூசி எடுத்து கொள்ளவேண்டும் – காங்கிரஸ்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பிரதமர் மோடி மற்றும் பாஜக மூத்த தலைவர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி எடுத்து கொள்ளவேண்டும் பீகார் காங்கிரஸ் தலைவர் அஜித் சர்மா தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா வைரஸின் ‘கோவிஷீல்ட்’ மற்றும் ‘கோவாக்சின்’ பயன்படுத்தஅவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பீகார் பாகல்பூரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏவும், பாலிவுட் நடிகை நேஹா ஷர்மாவின் தந்தையுமான அஜித் சர்மா கூறுகையில், கொரோனா தடுப்பூசி தொடர்பாக பொதுவான மக்களிடையே பல்வேறு வகையான சந்தேகங்கள் இருப்பதாக கூறினார். இதைக் கருத்தில் கொண்டு, முதலில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பாரதீய ஜனதா கட்சியின் பெரிய தலைவர்கள் தடுப்பூசி எடுத்து மக்களின் சந்தேகங்களை நீக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் ஜனாதிபதிகள் இதற்கு முன்னர் தடுப்பூசி எடுத்து கொண்டதை மேற்கோள்காட்டி இதை தெரிவித்தார்...
அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கு!

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கிற்கு , இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழக அரசு அரசியலமைப்பு சட்டம் 162 பிரிவை பயன்படுத்தி ஆளுநரின் அனுமதியில்லாமல் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5% இடஒதுக்கீடுக்கான அரசாணையை வெளியிட்டது.சுமார் 40 நாட்களுக்கு மேல்  இந்த சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்த நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி  மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்தார். அதன்படி மருத்துவ கலந்தாய்வு நடைபெற்றது. இதனிடையே அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு வழங்க கோரி தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி கழகம...
தமிழகம் முழுவதும் இந்த 3 நாள்கள் டாஸ்மாக் விடுமுறை..!

தமிழகம் முழுவதும் இந்த 3 நாள்கள் டாஸ்மாக் விடுமுறை..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழகம் முழுவதும் இந்த 3 நாள்கள் டாஸ்மாக் விடுமுறை..! தமிழகம் முழுவதும் வரும் 15, 26, 28 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கும் , பார்களும் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் மற்றும் வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  ...
தைப்பூச திருவிழாவை பொதுவிடுமுறை நாளாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தைப்பூச திருவிழாவை பொதுவிடுமுறை நாளாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தைப்பூச திருவிழாவை பொதுவிடுமுறை நாளாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்க் கடவுளாகிய முருகப்பெருமானைச் சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா. இவ்விழா தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கேரள மாநிலத்திலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் தைப்பூசத்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் சென்றபோது, இலங்கை மற்றும் மொரீஷியஸ் நாடுகளில் தைப்பூசத் திருவிழாவிற்கு பொதுவிடுமுறை அளிப்பது போன்று தமிழ்நாட்டிலும் தைப்பூசத்திருவிழாவிற்கு பொதுவிடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை பரிசீலித்து வரும் ...
எனக்கு ஆதரவு தந்த அனைத்து மக்களுக்கும் நன்றி -பிக் பாஸ் ஆஜித்

எனக்கு ஆதரவு தந்த அனைத்து மக்களுக்கும் நன்றி -பிக் பாஸ் ஆஜித்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  92-ம் நாளில் குறைவான வாக்குகளைப் பெற்று பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஆஜித், முதன் முதலாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ’90 நாட்களுக்கு மேலாக நான் பிக்பாஸில் இருந்ததற்கு நீங்கள் அளித்த வாக்குகள் மிகப்பெரிய விஷயம். அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவு மிக நன்றாக இருந்தது. என்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில் வந்த அனைத்து பதிவுகளையும் நான் பார்த்தேன். எல்லாம் மிக அழகாக இருந்தது. இது போன்ற பதிவுகளை நான் பார்த்து பல வருடம் ஆகிவிட்டது . மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பிக்பாஸில் இருந்து வெளியே வந்தாலும் மக்களை என்டர்டெய்ன்மென்ட் செய்வதற்காக, இசையால் என்னால் முடிந்ததை நான் செய்து கொண்டே இருப்பேன். இன்னும் அடுத்த நகர்வு பற்றி திட்டமிடவில்லை, இனிமேல் தான் யோசிக்க வேண்டும். ஆனால் நிச்சயம் மக்களை என்டர்டைன்மெண்ட் செய்வேன் என்பதை உறுதியாக க...
மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தேதிகள் முடிவு!

மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தேதிகள் முடிவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தேதிகள் முடிவு! மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் நேரில் ஆய்வு செய்தார். காளைகள் நிறுத்தி வைக்கப்படும் இடங்கள், பார்வையாளர்கள் கேலரி, மாடுபிடி வீரர்களுக்கு  மருத்துவ பரிசோதனை செய்யும் இடங்கள் போன்றவற்றை ஆய்வு செய்தார். இதனிடையே மதுரை ஆட்சியர் அன்பழகன் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வரும்  14ம் தேதி அவனியாபுரத்திலும், 15ம் தேதி பாலமேட்டிலும், 16ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. போட்டியில் 300 வீரர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.  காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது...
பொங்கல் பரிசுத் தொகை டோக்கன்களில் தலைவர்கள் படம் இருக்கக் கூடாது உயர் நீதிமன்றம் உத்தரவு

பொங்கல் பரிசுத் தொகை டோக்கன்களில் தலைவர்கள் படம் இருக்கக் கூடாது உயர் நீதிமன்றம் உத்தரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பொங்கல் பரிசுத் தொகை டோக்கன்களில் தலைவர்கள் படம் இருக்கக் கூடாது உயர் நீதிமன்றம் உத்தரவு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரசி அட்டைதாரர்களுக்கும் ரூ.2500 தொகையுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று டிசம்பர் 19ஆம் தேதி சேலத்தில் தொடங்கிய முதல் நாள் பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தேர்தல் நெருங்கும் சமயத்தில் முதல்வர் பரிசுத்தொகை அறிவித்ததற்கு எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பியது. பரிசுத் தொகைக்காக வழங்கப்படும் டோக்கன்களில் அதிமுக தலைவர்களின் புகைப்படம் இடம் பெற்றிருப்பதாக திமுக தொடர்ந்த வழக்கில், அரசு வழங்கும் டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிமன்றம் இது தொடர்பாக அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப உத்தரவிட்டது  ...
கொலம்பியா டோரோ மெக்கோய்உணவகத்தில் 24 கேரட் தங்கத்தில் பர்கர்!

கொலம்பியா டோரோ மெக்கோய்உணவகத்தில் 24 கேரட் தங்கத்தில் பர்கர்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
உலகில் நாள்தோறும் புதுப்புது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவை அத்தியாவசியமானதாக, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக உள்ளன. அந்த வகையில் மேல்நாட்டு உணவு வகையான பர்கர் தயாரிப்பில் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. வழக்கமாக ரொட்டி, கட்லெட், சாஸ், சீஸ் ஆகியவற்றின் கலவையாகத் தான் பர்கரைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் இங்கு தங்கத்தில் பர்கர் செய்துள்ளனர். கொலம்பியாவில் உள்ள டோரோ மெக்கோய் என்ற உணவகம் மிகவும் பிரபலம். இங்கு ஓரோ மெக்கோய் என்ற பெயரில் 24 கேரட் தங்கத்தில் பேகான், டபுள் மீட், டபுள் சீஸ் பர்கர் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தகவலறிந்த உள்ளூர் மக்கள் ஏராளமானோர் உணவகத்திற்கு படையெடுத்து வந்துள்ளனர்.தங்கத்தில் செய்யப்பட்ட உயர்தர பர்கரின் விலை 59 டாலர். இந்திய மதிப்பில் 4,330 ரூபாய் ஆகும். அதுவே சாதாரண பர்கரின் விலை 11 டாலர். இந்திய மதிப்பில் 807 ரூபாய் ஆகும். வாடிக்கையாளர...