செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

‘பயோ பபுள்’ பாதுகாப்புடன் டிசம்பர் 15 முதல் தொடங்க உள்ள ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு

‘பயோ பபுள்’ பாதுகாப்புடன் டிசம்பர் 15 முதல் தொடங்க உள்ள ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
'பயோ பபுள்' பாதுகாப்புடன் டிசம்பர் 15 முதல் தொடங்க உள்ள ‘அண்ணாத்த’ ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு வரும் டிசம்பர் 15 முதல் தொடங்க உள்ளது நடிகர் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தைச் சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தின் இசையமைப்பை டி இமான் கவனிக்க இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனாவுக்கு முன்பு ஐதராபாத்தில் தொடங்கி நடந்து வந்தது. ஊரடங்கு காரணமாகப் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் 60 வயதைக் கடந்த முதியோர்கள் படப்பிடிப்பில் கலந்துக் கொள்ளத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ரஜினிகாந்த் 60 வயதைக் கடந்தவர் என்பதாலும் அவருக்கு சில மருத்துவ பிரச்சினைகள் உள்ளதாலும் படப்பிடிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் இயக்க...
த்ரில்லர் படத்தில் கவுதம் கார்த்திக்

த்ரில்லர் படத்தில் கவுதம் கார்த்திக்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  த்ரில்லர் படத்தில் கவுதம் கார்த்திக் தேவராட்டம்’ படத்தைத் தொடர்ந்து, தமிழில் உருவாகி வந்த ‘முஃப்தி’ ரீமேக்கில் கவனம் செலுத்தி வந்தார் கவுதம் கார்த்திக். தற்போது எழில் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் பார்த்திபனுடன் நடித்து வருகிறார் கவுதம் கார்த்திக். இந்நிலையில், கவுதம் கார்த்திக் நடிக்கவுள்ள புதிய படமொன்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதுமுக இயக்குநர் தக்‌ஷிணாமூர்த்தி ராமர் இப்படத்தை இயக்கவுள்ளார். த்ரில்லர் பாணியில் மதுரையைச் சுற்றிப் படமாக்கப்பட உள்ளது. பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன...
பிறந்தநாள் கொண்டாடும் ரஜினிகாந்துக்கு ஸ்டாலின் வாழ்த்து

பிறந்தநாள் கொண்டாடும் ரஜினிகாந்துக்கு ஸ்டாலின் வாழ்த்து

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
பிறந்தநாள் கொண்டாடும் ரஜினிகாந்துக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.   இன்று பிறந்த நாள் கொண்டாடும் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், அன்பும் பாசமும் கொண்ட இனிய நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! 71-ஆவது பிறந்தநாள் கொண்டாடும் தாங்கள் நலமுடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன்! நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களைத் தொலைபேசியில் அழைத்து எனது வாழ்த்தினைத் தெரிவித்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். ரஜினிகாந்த்துக்கு முதல்வர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்....
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்!

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடக்கிறது. தமிழகம் முழுதும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, நவம்பர், 16ல் துவங்கியது. அன்றைய தினம், அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, வரும், 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். வாக்காளர்கள் வசதிக்காக, கடந்த மாதம், 21, 22ம் தேதிகளில், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம் நடந்தது.   கடந்த, 21ம் தேதி நடந்த முகாமில், 5.43 லட்சம் விண்ணப்பங்கள் வரப்பெற்றன. இதில், 4.38 லட்சம் விண்ணப்பங்கள் பெயர் சேர்க்கக் கோரி வரப்பெற்றுள்ளன. அதேபோல, 22ம் தேதி நடந்த முகாமில், 8.03 லட்சம் விண்ணப்பங்கள் வந்தன. இதில், 6.14 லட்சம் பேர், பெயர் சேர்க்கக் கோரி விண்ணப்பித...
பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் ரூ.50 லட்சம் இழப்பீடு தரக் கோரி  சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு

பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் ரூ.50 லட்சம் இழப்பீடு தரக் கோரி  சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து தம்மை வெளியேற்றியதற்காக ரூ.50 லட்சம் இழப்பீடு கோரி  இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள பிரசாத் ஸ்டூடியோவில், கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரைப்படங்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா ஸ்டூடியோ நடத்தி வருகிறார்.  அவரை சமீபத்தில் பிரசாத்  ஸ்டூடியோ நிர்வாகம் அங்கிருந்து வெளியேற்றி உள்ளது.   மேலும் ஸ்டூடியோவில் உள்ள பொருட்களை அவர் எடுத்துச் செல்லவும் அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.   இது குறித்து இளையராஜா சென்ன உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளார்    சுமார் 35 வருடங்களாக பிரசாத் ஸ்டூடியோ அரங்கில் இசையமைத்து வந்த தன்னை வெறியேற்றிவிட்டதாக இசையமைப்பாளர் இளையராஜா தனது மனுவில் தெரிவித்துள்ளார். தமக்கு இதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க, ஸ்டூடிய...
போயஸ்கார்டன் பகுதியில் விதவிதமான போஸ்டர்களை ஒட்டிய ரஜினி ரசிகர்கள்

போயஸ்கார்டன் பகுதியில் விதவிதமான போஸ்டர்களை ஒட்டிய ரஜினி ரசிகர்கள்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  புதிதாக தொடங்க உள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தியையும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் ரஜினிகாந்த் நியமித்தார். தற்போது தனது புதிய கட்சியை பதிவு செய்வது தொடர்பாக வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், மேற்பார்வையாளர் ஆகியோருடன் அவ்வப்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நேற்றும் போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில், இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் 71-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட உள்ளது. ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சியை அறிவிக்க உள்ள நிலையில் அவரது பிறந்தநாள் வருவது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்து உள்ளது. இதன் காரணமாக ரஜினியின் பிறந்தநாளையொட்டி, அவரது ரசிகர்கள் கோ பூஜை, கோவில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை இன்று மேற்கொ...
ஈஸ்வரன் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் டிசம்பர் 14ஆம் தேதி வெளியாகும்!

ஈஸ்வரன் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் டிசம்பர் 14ஆம் தேதி வெளியாகும்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டததை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படம் சென்சாருக்கு சென்று ரிலீசுக்கு தயாராகி விடும் என்றும் கூறப்படுகிறது விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வந்தாலும் சிம்புவின் ஈஸ்வரன் படமும் பொங்கலுக்கு வரும் என்றும் விஜய்யுடன் மோத ஈஸ்வரன் குழுவினர் தயாராகி விட்டதாக கூறப்படுகிறது அந்த வகையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளையும் படக்குழுவினர் தொடங்கிவிட்டனர் புரமோஷன் பணியின் அடுத்தகட்டமாக ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் டிசம்பர் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஏற்கனவே ஈஸ்வரன் படத்தின் பர்ஸ...
தெலுங்கில் அறிமுகமாகும்  ‘ஜீனியஸ் ‘நாயகி பிரியாலால்

தெலுங்கில் அறிமுகமாகும்  ‘ஜீனியஸ் ‘நாயகி பிரியாலால்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  மலையாள நடிகையான பிரியாலால் - தமிழில் சுசீந்திரன் இயக்கத்தில்   'ஜீனியஸ் ' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். படம் வெளியாகி, சிறந்த நடிகைக்கான அந்தஸ்தைப் பெற்றார்.  அதன்பிறகு பட்ட படிப்பிற்காக லண்டன் சென்றார். படிப்பை முடித்து விட்டு இப்பொழுது, தெலுங்கு படமான 'குவா கோரிங்க' (Love Birds) படத்தில் அறிமுகமாகிறார். டிசம்பர் 17-ம் ஆமேசான் ப்ரைம் ஓ டி டி தளத்தில் வெளியாகிறது . பிரபல இயக்குனர்  ராம்கோபால் வர்மாவின் இணை இயக்குனர் மோகன் பம்மிடி இயக்கும் முதல் படம் இது . கல்லூரி காதலை மய்யமாக கொண்ட இப்படத்தில் இளம் கதாநாயகன்  சத்தியதேவுடன் ஜோடி சேர்ந்துள்ளார் . சமீபத்தில் பாடல்  வெளியாகி பெரும் வரவேற்பு கிடைத்தது படக்குழுவினருக்கு பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது . கொரோனா லாக் டவுண் காரணமாக படத்தின் வெளியீட்டு தாமதமானதால் படம் முடிந்தும் ஒரு வருடமாக தன்னம்பிக்கையோடு 'குவா கோரிங்கா'வை ஆவலுட...
நாயகனாகக் களமிறங்கும் ‘உறியடி’ விஜய்குமார்

நாயகனாகக் களமிறங்கும் ‘உறியடி’ விஜய்குமார்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நாயகனாகக் களமிறங்கும் 'உறியடி' விஜய்குமார் இயக்குநர், நடிகர் விஜய்குமார் 'உறியடி' மற்றும் 'உறியடி 2' என இரண்டு துணிச்சலான, அழுத்தமானப் படங்களை இயக்கி நடித்தவர். சமீபத்தில் 'சூரரைப் போற்று' படத்துக்கு வசனம் எழுதியிருந்தார். தற்போது ஒரு ஆக்‌ஷன் திரைப்படத்தில் நாயகனாக நடிக்க விஜய் குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்தை 'உறியடி' 2 பாகங்களிலும் விஜய் குமாரின் உதவி இயக்குநராக இருந்த அபாஸ் இயக்குகிறார். ரீல் குட் ஃபிலிம்ஸ் சார்பில் ஆதித்யா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். விருதுகள் வென்ற பல குறும்படங்களை தயாரித்திருக்கும் ரீல் குட் ஃபிலிம்ஸின் முதல் முழுநீள திரைப்படத் தயாரிப்பு இது. முன் தயாரிப்பு வேலைகள் தொடங்கிவிட்டன. மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் படப்பிடிப்பு செல்வதற்கு படக்குழு ஆயத்தமாகி வருகிறது....
விக்னேஷ் சிவன் நயன்தாரா இணைந்து தயாரிக்கும் படம்

விக்னேஷ் சிவன் நயன்தாரா இணைந்து தயாரிக்கும் படம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகைகள்
விக்னேஷ் சிவன் நயன்தாரா இணைந்து தயாரிக்கும் படம் விக்னேஷ் சிவன் மூன்று காதல் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில், விஜய்சேதுபதி, நயன் தாரா,. சமந்தா ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது காதலி நயன்தாராவுடன் இணைந்து Rowdy pictures சார்பில் ராக்கி என்ற படத்தை இயக்கவுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இப்படத்தில் வசந்த் ரவி, மற்றும் பாரதிராஜா நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அருண்மாதேஸ்வரன்  இப்படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....