HOME SLIDER
வன்னியர் இட ஒதுக்கீடு பற்றி ராமதாசுக்கு என்ன தெரியும் – சி.என்.ராமமூர்த்தி ஆவேசம்
https://youtu.be/7nuzaSaG8N0
மாஸ்க் அணிந்து பிரார்த்தனையில் கலந்து கொண்ட போப்!
உலக கத்தோலிக்க மதத் தலைவரான போப் முதலாம் பிரான்சிஸ் நேற்று முதன் முறையாக முக கவசம் அணிந்து பொது வழிப்பாட்டில் பங்கேற்றார்.
சாண்டா மரியா தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையின் போது,
ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களின் ஆன்மீகத் தலைவர் பார்தலோமெவ் உள்ளிட்டவர்களுடன் முக கவசம் அணிந்து பங்கேற்றார்.
போப்பின் பாதுகாவலர்கள் நான்கு பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், போப் முக கவசம் அணியாதது தொடர்பாக சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதனைத் தொடர்ந்து பொது மக்களை சந்திக்கும் வாகனத்தில் வரும் போது மட்டும் முக கவசம் அணிந்து வந்த போப் முதலாம் பிரான்சிஸ், தற்போது பொது வழிபாட்டிலும் முக கவசம் அணியத்
தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது....
வெற்றிகரமாக பென்னுவில் தரையிறங்கியதும் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி
பூமியில் இருந்து 330 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குறுங்கோள்களான பென்னுவை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ‘ஓசிரிஸ்-ரெக்ஸ்’ எனப்படும் செயற்கை கோளை அனுப்பியது. 2016ம் ஆண்டு அனுப்பப்பட்ட இந்த செயற்கைக் கோள், 2018ம் ஆண்டு பென்னு குறுங்கோளின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்து சீராக பயணம் மேற்கொண்டது.
அதன்பின்னர் படிப்படியாக அதன் சுற்றுவட்டப்பாதை குறைக்கப்பட்டு நேற்று பென்னு குறுங்கோளில் வெற்றிகரமாக தரையிறங்கியது. பென்னு குறுங்கோளில் இருந்து பாறைத் துகள்களை ஆய்வுக்காக பூமிக்கு எடுத்துவர திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஓசிரிஸ் ரெக்ஸ் செயற்கைக் கோளில் உள்ள இயந்திரக் கரங்கள் குறுங்கோளை துளையிட்டு பாறைத் துகள்களை எடுக்கத் தொடங்கியது. இதேபோல் தூசித் துகள்களையும் சேகரிக்கிறது.
4 ஆண்டு பயணத்திற்கு பிறகு ஓசிரிஸ்-லெக்ஸ் வெற்றிகரமாக பென்னுவில் தரையிறங்கியதும் வ...
கவர்னருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு இருக்கிறது. இதற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று 5 அமைச்சர்கள் கவர்னரை சந்தித்து வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
இந்நிலையில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து அனுமதி அளிக்க கோரி கவர்னர் பன்வாரிலாலுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
7.5 சதவீத உள்ஒதுக்...
சினிமா தயாரிப்பாளர் ஆன விஜயகாந்த் பி.ஆர்.ஓ!
*ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்*
ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் பிரகாஷ் மற்றும் கேப்டன் எம்.பி ஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் முதல் திரைப்படம் புரடக்ஷன் நம்பர் ஒன்.
இப்படத்தின் துவக்க விழா இன்று காலை 9 மணி அளவில் சென்னை கைகான் குப்பத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் எல் கே சுதீஷ், இயக்குனர்கள் பாக்கியராஜ், விஜய் மில்டன், சரவணன், பார்த்திபன், தயாரிப்பாளர் கே ஆர் பிலிம்ஸ் சரவணன், ஜாகுவார் தங்கம், PRO டைமண்ட் பாபு மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.
சைக்கோ திரில்லராக உருவாகும் இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கிஷன் ராஜ். ஒளிப்பதிவு சிவ சாரதி, இசைஅமைப்பாளராக விக்கி மற்றும் ஹரி, படத்தொகுப்பு ராம்நாத், கல...
மலிவு விலையில் வெங்காய விற்பனையை தொடங்கிய தமிழக அரசு!
தெலுங்கானா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு இருந்து வரக்கூடிய வெங்காய வரத்து குறைந்துள்ளது. இதனால், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை அதிகரிச்சு வந்துச்சு.
இந்நிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நேத்திக்கு தலைமைச் செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு அடிப்படையில் இன்று முதல் சென்னையில் பசுமைப் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை 45 ரூபாய்க்கு விற்கப்படும் எனவும், நாளை முதல் தமிழகம் முழுவதும் பசுமைப் பண்ணை கடைகளில் கிலோ 45 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பண்ணை பசுமை காய்கறி கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.45-க்கான விற்பனை திட்டத்தை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைச்சார்....




